இஞ்சி நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் தீமைகள்

0

இஞ்சி நன்மைகள், பயன்கள் மற்றும் இஞ்சி தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

இஞ்சி :

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் இஞ்சி நன்மைகள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக சமையலிலும், மருந்துகளிலும் பயன்படுத்தினர்.

இஞ்சி

இஞ்சி பூக்கும் தாவரத்தின் வேர் பகுதியில் காணப்படும் கிழங்காகும். இதன்பூர்வீகம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் என்று சொல்லப்படுகிறது.

இதன் அறிவியல் பெயர் ஜிங்கிபர் அஃபிசினேல் ஆகும்.

குமட்டல், வயிற்று வலி மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு வீட்டு சமையலறையில் உள்ள தீர்வாக உள்ளது.

பொதுவாக புதிய அல்லது உலர்ந்த இஞ்சியை சமையல் அல்லது தேநீரில் சேர்த்து பயன்படுத்துகின்றனர். மேலும் சப்ளிமெண்ட்ஸ் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சியில் உள்ள சத்துக்கள் :

இஞ்சியில் புரதங்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

100 கிராம் புதிய இஞ்சியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு கூறுகள் கலவை (100 கிராம் பழத்திற்கு)

தாதுக்கள்

வைட்டமின்கள் :

இஞ்சி பயன்கள்:

இஞ்சி பயன்கள் பின்வருமாறு

மசாலா, ரொட்டிகள், சாஸ்கள், கறி உணவுகள், தின்பண்டங்கள், ஊறுகாய்கள் மற்றும் பிறவற்றை சமைக்கும் பொழுது அதன் சுவையை கூட்டவும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் இஞ்சி பயன்படுத்தப் படுகிறது.

இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக பாரம்பரிய மருத்துவத்தில் மருந்து பொருட்களுடனும் தனியாகவும், கஷாயமாகவும் இஞ்சி பயன்படுத்தப் படுகிறது.

இஞ்சியில் சுமார் 2 சதவீதம் அத்தியாவசிய எண்ணெய் உள்ளது. எண்ணெய் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி நன்மைகள் :

இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கீல்வாதம், அழற்சி மற்றும் பல்வேறு வகையான தொற்றுகளைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

இஞ்சி நன்மைகள்

மேலும் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும் பண்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இஞ்சி நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைக்கிறது :

இஞ்சி சாறு குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைக்க உதவுகிறது. எச்.ஐ.வி தொற்றுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைக்க இஞ்சி சாறு உதவுவதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

இது தலைச்சுற்றல் காரணமாக ஏற்படும் குமட்டல், மற்றும் கீமோதெரபியின் பொது ஏற்படும் குமாட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப் படுகிர்கிறது.

இருமல் மற்றும் சளியை குறைக்க உதவுகிறது :

ஒரு கப் சூடான இஞ்சி டீ இருமல் மற்றும் சளியை உடனடியாகக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளதாக சொல்லப் படுகிறது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் ஆகிய சேர்மங்கள் காய்ச்சல், வலி, மற்றும் இருமலை குடைக்கும் தன்மையுடயது.

எடை இழப்புக்கு உதவுகிறது :

இஞ்சியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் பருமனை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க உதவுகிறது.

உடலில் நடைபெறும் பல்வேறு உயிரியல் செயல்பாடுகளில் பங்களிக்கக்கூடிய ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் கலவைகள் இதில் உள்ளன.

இஞ்சியில் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.

மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது :

இஞ்சி சாறு கருப்பையின் சுருக்கங்களைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.

மாதவிடாய் சுழற்சியின் முதல் 3-4 நாட்களில் இஞ்சி பொடியை 500-2000 மில்லிகிராம் எடுத்துக்கொள்வது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.

காலை சோர்வை குறைக்கிறது :

இஞ்சி சாறு கர்ப்ப காலத்தில் காலையில் எழுந்தவுடன் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற காலை நோய் அறிகுறிகளைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கர்ப்ப காலத்தில் ஏதேனும் மூலிகை அல்லது மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

முடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது :

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி வளர்வதற்காக இஞ்சி பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதில் உள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர ஊக்குவிக்கவும் உதவுகிறது.

மேலும் இஞ்சியில் உள்ள இயற்கையான கிருமி நாசினிகள் தலையில் பொடுகு உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

மூட்டு வலியைக் குறைக்கிறது :

இதில் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு வலி போன்ற மூட்டு வலிகளைக் குறைக்க உதவுகிறது.

வாய் ஆரோக்கியம் :

இஞ்சியின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல்ஸ் எனப்படும் சேர்மம் வாயில் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கிறது.

இதன் மூலம் பெரிடோன்டல் எனப்படும் ஈறு நோய் தடுக்கப் படுகிறது. புண் தசைகளை ஆற்றும் இஞ்சி தசை வலியைப் போக்க உதவுகிறது.

உடற்பயிற்சியின் பொது ஏற்படும் தசை வலியைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

இஞ்சியில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைத் தடுக்கிறது.

மேலும் செல்களில் ஏற்படும் டிஎன்ஏவை சேதத்தைக் குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

இஞ்சி தீமைகள் :

சிலருக்கு இஞ்சி அதன் காரத் தன்மை காரணமாக லேசான நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில், இஞசி பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.