இலவங்கப்பட்டை நன்மைகள் மற்றும் தீமைகள்

0

இலவங்கப்பட்டை நன்மைகள் மற்றும் அதிக அளவில் உண்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஒரு மசாலா வகைப் பொருள் ஆகும். இதன் தனித்துவமான மனம், சுவை மற்றும் மருத்துவ நன்மைகள் காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் முழுவதும் சமையலிலும், மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை என்பது சின்னமொமம் வெரம்  (Cinnamomum verum) சின்னமொமம் செலானிக்கம் (Cinnamomum zeylanicum) மரத்தின் பட்டை ஆகும். இந்த பட்டையில் சின்னமால்டிஹைட், சின்னமிக் அமிலம் மற்றும் சின்னமேட் போன்ற தாவரக் கலவைகள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக உள்ளது.

இலவங்கப்பட்டை நன்மைகள் :

உணவில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது நோய், மற்றும் வயதானவர்களுக்கு நல்லது.

மேலும், இது குடல் ஆரோக்கியம், பல் சுகாதாரம், கொழுப்பின் அளவைக் குறைத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவற்றில் உதவுகிறது.

இருப்பினும், சில இலவங்கப் பட்டை நன்மைகள் குறித்து இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலவங்கப்பட்டை நன்மைகள் பின்வருமாறு

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் :

சமையலறையில் பயன் படும் மற்ற மசாலாப் பொருட்களைப் போலவே, இலவங்கப் பட்டையிலும் பாலிபினால்கள் உள்ளன.

அவை சிறந்த ஆக்சிஜனேற்றிகள் ஆகும். இந்த பாலிபினால்கள் இலவங்கப்பட்டையின் நன்மைகள் மற்றும் பயங்களுக்கு காரணம் ஆகும்.

குடல் ஆரோக்கியம்

இலவங்கப்பட்டையில் ப்ரீபயாடிக் பண்புகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து சிறிதளவு உட்கொள்வது குடலில் உள்ள பாக்டீரியாக்களை ஊக்குவிக்கவும், செரிமான பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு

இலவங்கப் பட்டையின் தனித்துவமான மணம் மற்றும் சுவைக்கு காரணம் அதிலுள்ள சின்னமால்டிஹைட் எனப்படும் தாவர சேர்மங்கள் ஆகும்.

இதன் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காரணமாக சீன பாரம்பரிய மூலிகை மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

நோய் பாதுகாப்பு :

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொசுவினால் வரும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்களுக்கு காரணமாக வைரஸ்களுக்கும் எதிராக இலவங்கப்பட்டை பாதுகாப்பானதாக இருக்கலாம் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை என்று சொல்லப்படுகிறது.

இரத்த சர்க்கரையை குறைக்கலாம் :

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை குறைப்பதில் உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பதில் உதவுவதாக சொல்லப்படுகிறது.

இன்சுலின்  மேம்பாடு :

இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையை இரத்தத்திலிருந்து செல்களுக்குக் கொண்டு செல்வதில் உதவும் ஹார்மோன் ஆகும்.

இது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவாக வயதாகும்போது இன்சுலின் சுரப்பு குறைந்து இரத்த சர்க்கரை சமநிலையை சீர்குலைக்கிறது. மேலும் இது காலப்போக்கில் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். ​

இலவங்கப்பட்டை சாறு இன்சுலின் சுரப்பை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை

பல் சுகாதாரம் :

இலவங்கப்பட்டை, பல்வலி மற்றும் பாக்டீரியா வளர்ச்சி மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பல பல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாக பயன்படுத்தப் படுகிறது.

இலவங்கப்பட்டை தீமைகள் :

இலவங்கப் பட்டை உணவில் சிறிதளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது தான். இருப்பினும் அதிக அளவில் உண்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இலவங்கப் பட்டை தீமைகள் பின்வருமாறு

எரிச்சல் மற்றும் ஒவ்வாமை. இலவங்கப்பட்டை சிலருக்கு வாய் மற்றும் உதடுகளை எரிச்சல் மற்றும் புண்களை ஏற்படுத்தலாம்.

  • இலவங்கப்பட்டை ஒவ்வாமை உடைவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது.
  • இலவங்கப்பட்டை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
  • இலவங்கப் பட்டை அதிக அளவு உட்கொள்ளும் போது அதிலுள்ள கூமரின் எனும் பொருள் கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
  • குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இலவங்கப்பட்டை பாதுகானதா என்பது பற்றி போதுமான தகவல்கள் இல்லை. பயிற்சி பெற்ற மருத்துவர் அறிவுரை பெற்று பயன் படுத்துவது நல்லது.
  • இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையைக் குறைக்கலாம். எனவே உங்களுக்கு நீரிழிவு நோய் மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பட்டையைப் பயன்படுத்துவது நல்லது.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நீரிழிவு மருந்துகள், இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் மருந்துகள், இதய மருந்துகள் மற்றும்போன்ற மருந்துகளின் செயலாபாடுகளில் பட்டை குறுக்கிட வாய்ப்புகள் உள்ளன. எனவே மருத்துவர் அறிவுரை பெற்றுக்கொள்வது நல்லது.