Homeஉணவுகள்பழங்கள்இலந்தை பழம் நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

இலந்தை பழம் நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

இலந்தை பழம் (அ) இந்தியன் ஜூஜூபி பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள், மருத்துவ பயன்கள், நன்மைகள் மற்றும் இலந்தை தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது

இலந்தை பழம் :

இலந்தை பழம் அறிவியல் பெயர் ஜிசிபஸ் மொரிஷியானா ஆகும். இது ஆங்கிலத்தில் ஜூஜூபி (Jujube Fruits) என்று அழைக்கப்படுகிறது.

இழந்தை பழம் (அ) ஜூஜூபி பழம்

இது இந்திய ஜூஜூப், இந்திய பிளம், சீன பேரிச்சை மற்றும் சீன ஆப்பிள் என்றும் அழைக்கப் படுகிறது.

இலந்தை பழத்தில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் இழந்தை பழத்தில் கொழுப்பு, 1.2 கிராம் புரதம் மற்றும் 20 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

வைட்டமின்கள் :
இலந்தை பழம் சத்துக்கள் அட்டவணை 2

100 கிராம் இலந்தை பழத்தில் 2 மைக்ரோ கிராம் வைட்டமின் A, 69.0 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது.

தாது சத்துக்கள் :

இலந்தை பழம் சத்துக்கள் அட்டவணை 3

100 கிராம் இலந்தை பழத்தில் 0.48 மில்லி கிராம் இரும்பு சத்து, 21.00 மில்லி கிராம் கால்சியம் சத்து மற்றும் 250 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

இலந்தை பழம் நன்மைகள் :

இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இலந்தை பழம் மருத்துவ பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :

இலந்தை பழம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிப்பதன் மூலம் மூளையில் இரத்த ஓட்டத்திற்கு உதவி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மேலும் இழந்தை பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ளது. இது வாசோடைலேஷன் மற்றும் சீரான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் :

இலந்தை பழங்களில் பீட்யூலினிக் அமிலம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு செயல்பாடு மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

இது பல பாக்டீரியா தொற்றுக் களுக்கு காரணமான ஸ்டேஃபி ளோகோகஸ் ஆரியஸ் மற்றும் எஸ்கெரிச்சியா கோலி போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.

சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்:

இலந்தை பழங்களில் வைட்டமின் சி மற்றும் பெட்டுலினிக் அமிலம் அதிகம் உள்ளன. இது குளுட்டாதயோன் அளவை அதிகரித்து ஆக்சிஜனேற்ற அழுத்த த்திலிருந்து பாதுகாக்கிறது.

உடல் எடை குறைய உதவுகிறது :

இலந்தை பழத்தில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும் கலோரி குறைந்த அளவில் உள்ளது.

இதை உட்கொள்ளும் போது அது ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

கொழுப்பின் மூலம் எடை அதிகரிப்பதற்கு காரணமான் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் உதவுகிறது.

மலச் சிக்கலை தடுக்கிறது :

இலந்தை பழத்தில் நார் சத்து நிறைந்துள்ளது. இது நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

மேலும் மலமிலக்கியாக செயல் பட்டு குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

இது வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பெக்டினையும் கொண்டுள்ளது.

இருமலை நீக்குகிறது :

இலந்தைப் பழத்தில் ப்ரொமலைன் என்ற சிறப்பு நொதி உள்ளது. இது சளியைக் குறைக்கிறது.

இதன் மூலம் சுவாசம் மற்றும் சைனஸ் சம்பந்தமான கோளாறுகளை போக்குகிறது.

ஒவ்வாமை எதிர்ப்பு :

இலந்தை பழங்கள் ஹிஸ்டமினிக் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

இது நோயெதிர்ப்பு பண்புகளை மாற்றியமைக்கும் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளைத் தடுக்கும் மாஸ்ட் செல்களை பலப்ப்படுத்த உதவுகிறது.

ஆஸ்டியோ போரோ சிஸைத் தடுக்கிறது : 

எலும்பு ஆரோக்கித்திற்கு தேவையான மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் இழந்தை பழத்தில் உள்ளன.

குறிப்பாக எலும்புப்புரை உள்ள முதியவர்களுக்கு எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது :

இழந்தைப் பழத்தில் சப்போனின்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன.

அவை இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்கி உடலை பல்வேறு இரத்தம் தொடர்பான நோய்களிலிருந்து தடுக்கிறது.

முதுமை செயல்பாட்டை குறைகிறது : 

இலந்தை பழம் முதுமை செயல்பாட்டை தாமதப் படுத்து கிறது.

இந்த பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இது சுருக்கங்கள், மெலனின் படிதல் மற்றும் நிறமிகளைத் தடுக்க உதவுகிறது.

இலந்தை பழம் தீமைகள் :

பொதுவாக இலந்தை பழம் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் இதில் செல்லுலோஸ் உள்ள அதிக நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணிக்க கடினமாக்குகிறது. எனவே அளவோடு சாப்பிட வேண்டும்.

ஆண்டிடிப்ரஸன் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது இழந்தை பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது அந்த மருந்துகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular