விண்மீன் :
விண்வெளியில் நமக்கு தெரியாத கணக்கிட முடியாத என்னற்ற விஷயங்களும் அதைப் பற்றிய கேள்விகளும் உள்ளன.
மனித இனம் தொடங்கி பல்லாயிரம் ஆண்டுகளாக நட்சத்திரம் போன்ற வான் பொருட்கள் கடவுள் நம்பிக்கையோடு தொடர்பு படுத்தி பார்க்கப்பட்டன.
அறிவியலின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி பல்வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை அழித்துள்ளது. இன்னும் அறிவியலாலும் புரிந்து கொள்ள முடியாத ஏராளமான விஷயங்கள் உள்ளன.
இந்த பதிவில் விண்மீன் எவ்வாறு தோன்றுகிறது மற்றும் அதன் மறைவு பற்றி எளிதாக புரிந்துகொள்ளும் படி காணலாம்.
விண்மீன் உருவாக்கம் :
ஒரு காற்றடிக்கும் பம்பை அழுத்தும்போது காற்றானது அடிப்பகுதியை நோக்கி அழுத்தப் படுவதால் பம்பின் அடிப் பகுதியில் சூடாகும். தொட்டுப் பார்த்தாள் இதை உணர முடியும்.
பம்பில் குழாய்கள் இல்லை என்றால் வாயு வெளியே செல்ல வழி இருக்காது.
இதனால் அழுத்த ஆற்றலால் வாயு அணுக்கள் ஒன்றோடு ஒன்று நெருங்க அழுத்தப்பட்டு அதிக வெப்பத்தை உருவாக்க முடியும்.
இதே தத்துவம்தான் நட்சத்திரத்தின் பிறப்பின்போதும் நிகழ்கிறது.
நெபுலா :
விண்மீன்கள் நெபுலா எனப்படும் வாயுக்கள் கூட்டத்திலிருந்து பிறக்கின்றன.
நெபுலா எனப்படும் குளிர்ச்சியான இருண்ட வாயு மேகம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். இதன் வாயுக்களின் அணுக்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.
அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று நெருக்கமாக பிணைந்து கொள்ளும்போது நெபுலா வாயு மேகங்கள் சுருங்க துவங்குகின்றன.
மையத்தை நோக்கி அனைத்து துகள்களும் சுருங்கி வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதால் மையப்பகுதியில் அளவுக்கு அதிகமாக ஏற்படும் அழுத்தம் காரணமாக சூடாக துவங்குகிறது.
இந்த வெப்பம் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.
இந்த வெப்பநிலையில் நியூக்ளியர் ரியக்சன் அதாவது அணுக்கரு வினை தொடங்குகிறது. இந்த சமயத்தில்தான் நட்சத்திரம் பிறக்கிறது.
விண்மீன்கள் நிறம் :
நட்சத்திரத்தின் வெப்ப நிலையை பொருத்து அதன் நிறம் மாறுபடும். வெப்பம் உயர உயர சிவப்பு, மஞ்சள், வெள்ளை, நீளம் என நிறம் மாறும். நீல நிறம் வரும்போது, நட்சத்திரத்தின் அழிவு தொடங்குகிறது என்று அர்த்தம்.
விண்மீன் ஆயுள் :
நட்சத்திரத்தை ஒளிர வைக்கும் மூலதனம், அணுக்கரு வினையின் போது கட்டுக்கு அடங்காமல் வெளிவரும் வெப்பம் மற்றும் வெளிச்சம் தான்.
அணுக்கரு இணைப்பின் போது நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு ஹீலியம் அணு உருவாகின்றது. இதனால், அதிபயங்கரமான ஆற்றல் வெளிப்படும்.
ஒவ்வொரு அணுக்கரு இணைவின் போதும் அணுக்கள் குறிப்பிட்ட நிறைய இழந்து விடுகின்றன.
இந்த நிறைதான் அதிக வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு இழக்கப்படுகிறது.
ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் உருவாகும் நிகழ்வு நூறு கோடி ஆண்டுகள் வரை நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
பெரிய அளவில் இருக்கும் விண்மீன்கள் மற்றவைகளை விட சீக்கிரமாக எரிபொருட்களை இழந்துவிடும்.
இதனால் பெரிய விண்மீன் சிறிய ஆயுள் கொண்டதாக இருக்கும்.
அளவில் சிறிய விண்மீன்கள் நீண்ட காலம் வினையை நடத்திக் கொண்டே இருக்கும். இதன் ஆயுள் நீண்டதாக இருக்கும்.
நட்சத்திரத்தின் அழிவு :
ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் உருவாகும் வினை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
ஒரு காலகட்டத்தில் ஹைட்ரோ கார்பன் தீர்ந்து விடும் இந்த நிலை நட்சத்திரத்தின் அழிவு தொடங்கிவிட்டது என்பதை குறிக்கின்றது.
இதன் பிறகு வேறுவினை ஏற்பட தொடங்குகின்றது ஹீலியம் அணுக்கள் இணைந்து நிறை அதிகமுள்ள அணுக்கலான கார்பன், ஆக்சிஜன் , அயன் அணுக்களை உருவாக்கும்.
இந்த வினை இன்னும் அதிகமான வெப்பநிலையில் நிகழ்வதால் நட்சத்திரத்தின் வெப்பம் மேலும் உயர்கிறது.
இந்த வெப்பம் நட்சத்திரத்தின் ஆரம்ப அளவை விட பல மடங்கு பெரியதாக மாற்றி விடுகிறது.
இந்த வினையானது நட்சத்திரத்தின் உள் மையப்பகுதியில் நிகழ்வதால் வெளிப்புறம் குளிரத் தொடங்கும். ஆனால் உட்புறம் பெரும் பயங்கரமான வெப்பம் கொண்டதாக இருக்கும்.
விண்மீன் வகைகள் :
சிவப்பு அரக்கன் :
இந்த மிகப் பெரிய சிவந்த நட்சத்திரத்தின் நிலை ரெட் ஜெய்ன்ட் (Red Giant Star) எனப்படுகிறது. இது மிக அதிகமாக ஒளிரும் தன்மை கொண்டது.
இதன் விட்டம் எழுநூத்தி ஐம்பது மில்லியன் கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும்.
அதாவது நமது சூரியன் நமது பூமியை தொடும் அளவிற்கு பெரியதானால் எவ்வளவு அளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரியதாக இருக்கும்.
வெள்ளைக் குள்ளன் :
விண்மீன் மேலும் நிலை குலைந்து, அதில் இருக்கும் பொருட்கள விண்வெளிக்கு சிதறடிக்கும்.
வெளிப்புறத்தில் இருக்கும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும்.
மீண்டும் இவை ஒரு சிறிய நெபுலாவை நட்சத்திரத்தை சுற்றி ஏற்படுத்துகிறது.
இதனால் நட்சத்திரத்தின் அளவு குறைந்து அதிகமான அடர்த்தியுடன் வெண்மையாக ஒளிரும் சிறிய நட்சத்திரத்தை உருவாகும். இந்த நிலை ஒயிட் ட்வர்ப் (White Dwarf Star) எனப்படுகிறது. அதாவது வெள்ளை குல்லன் நட்சத்திரம் எனப்படும்.
இதன் மேற்பரப்பு மிக வெப்பமாக இருக்கும்.
சூப்பர் நோவா :
எரி பொருட்கள் தீர்ந்த நிலையில் காணப்படும். ஒருவேளை அது மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்திருந்தால் இறுதியில் பயங்கரமாக வெடித்து சிதறும். இந்த நிகழ்வு சூப்பர் நோவா (Super Nova) எனப்படுகிறது.
துகள்களாக சிதறடிக்கப்பட்டு விண்வெளிக்குள் தள்ளப்படும். அப்படி தள்ளும் போது மின்காந்த அலைகள் உருவாகும்.
மையத்தில் ஒரு சிறிய நியூட்ரான் நட்சத்திரம் இருக்கும். ஆனால், இந்த சிறிய நியூட்ரான் நட்சத்திரத்தின் எடை இந்தியாவைவிட அதிகமாக இருக்கும்.
இறுதியில் ஒரு கருந்துளையாக (Black Spot) மாறி விடுகிறது. இந்த தொடர்ச்சியான வினை பல கோடி ஆண்டுகளாக அதன் பின்னர்.தான் நட்சத்திரம் அழியும்.
தொலை நோக்கியில் பார்க்கும் போது நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும், வெள்ளை, மஞ்சள், செவப்பு, நீளமாகத் தெரியும். இந்த நிறம் அதன் வயதைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன்.