நல்லெண்ணெய் நன்மை தீமைகள், பயன்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.
நல்லெண்ணெய் :
நல்லெண்ணெய் என்பது எள் எண்ணெயின் மற்றொரு பெயர். எள் எண்ணெய் என்பது எள் விதைகளிலிருந்து எடுக்கப்படும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை தாவர எண்ணெய் ஆகும்.

இது தென்னிந்திய மாநிலைமைகளில் சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தப் படுகிறது. நல்லெண்ணெயை கடவுளிடம் இருந்து கிடைத் எண்ணெய் வகை என்று ஒரு சொல் வழக்கு உள்ளது. அந்த அளவுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் விலை மலிவான எண்ணெயாகும்.
ஆனால் இந்த நன்மைகள் உள்ளூரில் மரச்செக்கு நல்லெண்ணெய் என்று அழைக்கப்படும் மரச் செக்குகளை பயன்படுத்தி ரசாயனம் கலக்காமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.
நல்லெண்ணெயில் மற்ற சமையல் எண்ணெய்களை விட குறைந்த அளவு ஸ்மோக் பாயிண்ட் உள்ளது. இது பொதுவாக பல்வேரு உணவு பொருட்களை சமைக்கவும், மசாஜ் செய்வதற்கும் பயன்பாடுகிறது.
நல்லெண்ணெய் நன்மைகள் :
நல்லெண்ணெய் நன்மைகள், நல்லெண்ணெய் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.
பொதுவாக உணவில் நல்லெண்ணெய் சேர்க்கும் பழக்கம் இந்தியர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நல்லெண்ணெய் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம் :
எள் எண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் தேவையான அளவு சேர்க்கும் போது அது முழு இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.
நீரிழிவு :
நல்லெண்ணெயில் உள்ள அதிக அளவு மக்னேசியம் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.
வலுவான எலும்புகள் :
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் உடல் ஆரோக்கித்திற்கு இன்றியமையாத கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிக அளவு இருக்ப்பதை உறுதி செய்கிறது. எனவே ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.
அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த எண்ணெயை அதிக அளவு உணவு மூலம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
செரிமான ஆரோக்கியம் :
சமையலுக்கு பயன்படுத்தப் படும் மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, இந்த எண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.
சுவாச கோளாறு :
நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் நிறைந்திருப்பதால், இதன் மூலம் சமைக்கப் பட்ட உணவை சாப்பிடும் போது சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
இரத்த அழுத்தம் :
நல்லெண்ணெயில் மக்னீசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக நீரிரிவு நோயாளிகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
பற்கள் பளபளப்பு :
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயை 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து நன்றாக அலசி வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் மற்றும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
புற்றுநோய் பாதுகாப்பு
எள் எண்ணெயில் பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளது. அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் பாதிக்கப் பட்ட புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
சரும அழகு :
நல்லெண்ணெயில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளதால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தின் முக்கிய பொருளான கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் வயிற்றில் நல்லெண்ணெய் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
புரதச் சத்து :
பொதுவாக எண்ணெயில் புரோட்டீன் மிக குறைந்த அளவே காணாப்படும். ஆனால் எள் எண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக கிட்டத தட்ட 4.5 முதல் 5 கிராம் வரை புரதச் சத்து நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.
முடி ஆரோக்கியம் :
தொடர்ந்து முடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெயை உச்சந்தலையில் தொடர்ந்து தேய்த்து வர, முடி வளர்ச்சியை துரிதப்படுத்தி முடி அடர்த்தியாக ஊக்குவிக்கும்.
அழற்சி எதிர்ப்பு :
இந்த எண்ணெய் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது மூட்டு பிரச்சனைகள் மற்றும் பல்வலி போன்றவற்றிற்கு நல்ல பலன் தரும்.
ஒமேகா 6 நிறைந்துள்ளது :
இந்த எண்ணெயில் ஒமேகா-6 என்ற ஒருவகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.
இளநறை போக்குகிறது :
இளநரை என்று சொல்லப்படும் முன்கூட்டிய முடி நரைப்பதைத் தடுக்கிறது. நல்லெண்ணெயைக் கொண்டு தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்து வருவது முன்கூட்டிய நரையைத் தடுக்கலாம். மேலும் இந்த எண்ணெய் தலை முடியை கருமையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
நல்லெண்ணெய் பயன்கள் :
நல்லெண்ணெய் பயன்கள் என்று சொன்னாலே சமையலுக்கு பயன்படும் எண்ணெய் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை தவிர இன்னும் பல பயங்களை கொண்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்
ஆயுர்வேத மருத்துவத்தில் மசாஜ் சிகிச்சையிலும் நல்லெண்ணெய் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
நல்லெண்ணெயில் உடலின் வெப்பநிலையை குளிர்விக்கும் தன்மை உள்ளதால் உடல் சூட்டிற்கு நல்லெண்ணெய் குளியல் பரிந்துரைக்கப் படுகிறது.
சமையலில் வருத்தல், பொரித்தல், தாலித்தல் போன்ற சமையல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
நல்லெண்ணெய் தீமைகள் :
நல்லெண்ணெய் அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது நல்லெண்ணெய் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
நல்லெண்ணெயில் இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும், அதிக அளவு உட்கொள்ளும் போது இந்த எண்ணெய் தேவையற்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் இதில் அதிக கலோரிகள் இருப்பதால், அதை அதிக அளவு உட்கொள்ளும் போது உடல் எடை கூட வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வாமை ஏற்படலாம் :
நல்லெண்ணெய்யின் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்று அனாபிலாக்ஸிஸ் போன்ற சில வகையான ஒவ்வாமைகளுக்கு வழிவகுப்பதாகும். அதற்கு, சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல், போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே, அதிக உணர்திறன் உள்ளவர்கள் நல்லெண்ணெயை அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமானது
இந்த எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தும் போது இரத்த குளுக்கோஸ் அளவை அதன் இயல்பான நிலைக்குக் கீழே குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவு உண்பதை தவிர்க்க வேண்டும்.
குடல் அழற்சியை ஏற்படுத்தலாம் :
நல்லெண்ணெயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து குடல் அழற்சியை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து கரையாததாக இருப்பதால் ஜீரணிக்க கடினமாக்குகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் சுகாதார கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
எடை கூட வாய்ப்பு உள்ளது :
எடை அதிகரிப்பது எள் எண்ணெயின் பொதுவான தோன்றும் பக்க விளைவாகும். ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள நார்ச் சத்து ஜீரணிக்க முடியாத நார்ச்சத்து என்பதால் ஜீரணிக்கும் செயல் முறையை கடினமாக்குகிறது. இதனால் உடலின் இயல்பான செரிமான செயல்முறையை குறைக்கிறது. அதே சமயம் மறுபுறம்,இது நீடித்த செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் நல்லெண்ணெய் படிப்படியாக எடை அதிகரிக்கிறது.