ஜெனரிக் மருந்துகள் :
நாட்டில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட அளவை மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்கின்றனர். நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்காக மாதம் தோரும் தொடர்ந்து பல வருடங்களாக மருந்து மாத்திரைகள் எடுத்து வருவதைப் பார்க்கிறோம். இதற்காக ஒவ்வொரு குடும்பதிலிருந்தும் பெரும் தொகை செலவிடப் படுகிறது.
அவ்வாறு உண்ணப்படும் மருந்து மாத்திரைகளின் விலையை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மருந்து தான் ஜெனரிக் மருந்துகள் ( Generic Medicine ).
ஜெனரிக் மருந்து என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனம் மூலம் ஒரு மருந்து கண்டுபிடிக்கப் பட்டால் அந்த மருந்தை முதல் 20 வருடங்களுக்கு அந்த நிறுவனம் விற்பனை செய்ய வேண்டும் எனும் விதி உள்ளது.
இவ்வாறு 20 ஆண்டுகள் வரை மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்யும் முறை “காப்புரிமைக் காலம்” எனப்படுகிறது.
20 ஆண்டுகள் கழித்து அந்த மருந்துகளின் காப்புரிமைக் காலம் முடிந்து பொதுவான மருந்துகளாக மாறிவிடும். இவ்வாறு காப்புரிமைக் காலம் முடிந்த மருந்துகளை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இவ்வாறு காப்புரிமைக் காலம் முடிந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் ஜெனரிக் மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு மருந்தை அதன் வேதியல் பெயரை வைத்து அழைப்பது ஜெனரிக் மருந்து ஆகும். இது மெடிக்கல்களில் விற்கப்பப்படும் மருந்துகளை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஜெனரிக் மருந்துகள் விலை குறைவாகக் கிடைக்க காரணம் என்ன?
மருந்துகளின் காப்புரிமைக் காலம் முடியும் வரை அந்த மருந்துகளின் விலை அதிகமாக இருக்கும். இதற்கு காரணம், மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் மருந்தின் உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையுடன், மருந்து கண்டுபிடிக்க ஆன செலவுகளையும் சேர்த்து நிர்ணயம் செய்கிறார்கள்.
காப்புரிமைக் காலத்தில் மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை தயாரிக்க, மருந்தை கண்டுபிடித்த நிறுவனத்திற்கு காப்புரிமைத் தொகை அதாவது ராயல்டி கொடுக்க வேண்டும். எனவே மருந்து மூலப்பொருட்களின் விலை மற்றும் மருந்து தயாரிக்க ஆகும் செலவுடன் ராயல்டி கான செலவும் சேர்ந்து மருந்து விலையை அதிகரிக்கிறது.
20 ஆண்டுகளுக்கு பின் காப்புரிமைக் காலம் முடிந்த பிறகு மற்ற நிறுவனங்கள் குறைவான விலையில் மருந்துகளை தயாரித்து, அதை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். ஏனெனில் ராயல்டி கொடுக்க தேவையில்லை என்பதால் அதற்காக ஆகும் செலவு குறக்கிறது.
ஜெனரிக் மற்றும் பிராண்டட் மருந்துகளைப் போல் ஜெனரிக் பிராண்டட் மருந்துகளும் உள்ளன இவ்வகை மருந்துகளில் மருந்துகளின் வேதியல் பெயரான ஜெனரிக் பெயரும் அதை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும்.
மத்திய அரசு மலிவு விலை மருந்தகம் :
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை கிடைக்க செய்ய ஜன் அவுசாதி மலிவு விலை மருந்தகங்கள் மத்திய அரசால் பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தகங்களில் மருந்துகள் அதன் வேதியல் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக பாராசிட்டமால் மருந்துகள் அதன் சில பிரான்டட் பெயர்களான கால்பால், டோலோ, மெட்ட்டாசின் போன்ற பெயர்களால் அழைக்கப்படாமல் பாராசிட்டமால் என்றே அழைக்கப்படுகின்றன.
மக்கள் மருந்தகம் :
மத்திய அரசு அனுமதி பெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் நாடு முழுவதும் பல இடங்களில் உள்ளன. இருப்பினும் குறைந்த அளவிளான மருந்தகங்கள் இருப்பதால் இன்றும் பெரும்பாலான மக்களுக்கு தெரியாமலேயே உள்ளது.
அந்த வகையில் மத்திய அரசு அனுமதி பெற்று திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மத்திய அரசு மருந்தகம் ஒன்று இயங்கி வருகிறது.
அவர்கள் குறைந்த விலையில் மருந்துகளை நேரடியாக விற்பனை செய்வதுடன் மாநிலத்தில் பிற இடங்களில் உள்ள மக்களுக்கும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
அவர்களது வாட்ஸ் அப் நம்பருக்கு மருந்து சீட்டு அல்லது மருந்து அட்டையை அனுப்பி அனுப்ப சொல்லி கேக்கலாம். இரண்டு நாட்களுக்குள் கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்கள். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் போன் செய்து விசாரித்துக் கொள்ளலாம்.
அவர்களது நம்பர் 9940380954
அல்லது மலிவு விலை மருந்தகம் அட்ரஸ் மற்றும் விவரங்களை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.