அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணம் மற்றும் தீர்வு

0

அடிக்கடி சிறுநீர் கழித்தல் :

அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுகிறதா? சிறுநீர்ப்பை எப்போதும் நிரம்பியதாக உணர்கிறதா? சிறுநீர் கழிப்பது பகுதி நேர வேலையாகவே உள்ளதா? சிறுநீர் கழிப்பது இரவில் அடிக்கடி உங்களை எழுப்புமா?

அடிக்கடி சிறுநீர்

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் சாதாரணமானது, அது அனைவருக்கும் பொதுவான ஒன்று.

ஆனால் தினமும் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவது மருத்துவ கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் :

அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவதற்கானா காரணங்கள் சில பின்வருமாறு

கர்ப்ப காலம் :

கர்ப்ப காலத்தில், குழந்தை அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகமாகி அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுகிறது.

நீரிழிவு நோய் :

நீரிழிவு நோய் இருந்தால், அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இது நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும்.

புரோஸ்டேட் வீக்கம் :

புரோஸ்டேட்டின் அளவு அதிகரிப்பதன் மூலம் சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி சிறுநீர் கழிக்க வழி வகுக்கும்.

சிறுநீரக உபாதைகள் :

சிறுநீர் பாதை நோய் தொற்று, சிறுநீர்ப்பை நோய்க்குறிஇ, ன்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸ், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற சிறுநீரக கோளாறுகள்

வேறு சில காரணங்கள் :

  • பக்கவாதம்
  • வஜினிடிஸ் (யோனி அழற்சி)
  • இடுப்பு கட்டி
  • அடிக்கடி சிறுநீர் கழிக்கும் டையூரிடிக்ஸ் போன்ற மருந்துகளின் பயன்பாடு
  • இடுப்பு பகுதிக்கு கதிர்வீச்சு சிகிச்சை
  • அதிகப்படியான காபி அல்லது மது அருந்துதல்

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தீர்வு

வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள், பெரிய புரோஸ்டேட் கொண்ட ஆண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பது மிகவும் பொதுவானது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை அடிப்படை காரணத்திற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் காலப்போக்கில் குணப்படுத்த முடியும்.

மேலும் இந்த அறிகுறியை இயற்கையான பொருட்களைக் கொண்டும் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி சில வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு.

மாதுளை விழுது :

மாதுளம் பழத்தோல் நுண்ணுயிரிகளை (ஆன்ட்டி மைக்ரோபியல்) அழிக்கும் ஆற்றல் கொண்டது.

குறிப்பாக இது ஈ.கோலை எனப்படும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்பாடுகிறது.

இந்த ஈகோலை பாக்டீரியா சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணமாகும்.

மாதுளம் பழத்தோலில் சில ஸ்பூன் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

வெந்தய விதைகள் :

வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடு ஆல்கலாய்டுகள், ஸ்டீராய்டுகள் மற்றும் ட்ரைகோனெல்லைன் போன்ற உயிரியக்க கலவைகள் இருப்பதால் ஏற்படுகிறது.

இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்பட்டு உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.

இது நீரிழிவு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தூண்டுதலுக்கும் ஒரு காரணமாக அமைகிறது.

வெந்தய விதைகள் அல்லது வெந்தயத்தை பொடி செய்து சிறிது அளவு உட்கொள்வதன் மூலம், நாளைடைவில் நிவாரணம் கிடைக்கும்.

நெல்லிக்காய் :

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மேலும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.

நெல்லிக்காய் உண்பது சிறுநீரை வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது ஆனால் சிறுநீர் ஓட்டத்தை அதிகமாகத் தூண்டாது.

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு குடித்து வருவதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையிலிருந்து நாளைடைவில் விடுபடலாம்.

துளசி :

துளசி பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு எதிரான பண்புகளைக்கு கொண்டுள்ளது.

ஆயுர்வேதத்தில், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற பல நோய்த்தொற்றுகளுக்கு மருந்தாக பரிந்துரைக்கப் படுகிறது.

துளசியின் இலைகளை நசுக்கி, சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்தும் குடிக்கலாம்.

சீரகம் :

சீரக எண்ணெய் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த சீரகத்தை தனியாகவோ அல்லது மற்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் பொருட்களுடணும் சேர்த்தும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

எனவே சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தூண்டுதல் உடையவர்கள் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர நன்மை பயக்கும்.

கொள்ளு :

கொள்ளு பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு உயிரியக்க சேர்மங்களைக் கொண்டுள்ளது,

இது சிறுநீர் கோளாறுகள் உட்பட பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் உதவுகிறது.

இது பல ஈகோலை பாக்டீரியா உட்பட பல பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

எனவே, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சமாளிக்க கொள்ளு உதவுகிறது.

கொள்ளு வறுத்து முழுதாகவோ அல்லது பொடி செய்தோ தினமும் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.

உடற்பயிற்சி :

கெகெல் என்று சொல்லப்படும் ஒரு வகை பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகள் இடுப்பு பகுதியின் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் சிறுநீர்ப் பையையும் பலப்படுத்த உதவுகிறது.

சிறுநீர் அமைப்பின் பலவீனமான தசைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணத்தைத் தூண்ட காரணமாக இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை சாதாரண நிலையிலிருந்து கடுமையான நிலைமைகள் வரை இருக்கும்.

எனவே, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும்.

இருப்பினும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தூண்டுதலோடு பின்வரும் அறிகுறிகளையும் கவனித்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்,

ஏனெனில் இது ஒரு உடல் நலக் கோளாரின் அறிகுறியாக இருக்கலாம். அவை

  • வாந்தி
  • சிறுநீரில் இரத்தம்
  • கீழ் முதுகில், பக்கவாட்டில், சிறுநீரகத்தின் மேல் வலி
  • காய்ச்சல்

முடிவுரை:

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அனைவருக்கும் ஒரு சிரமமான விஷயம். இது பொதுவான காரணங்கள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகள் காரணமாக இருக்கலாம்.

அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது சிகிச்சையின் போது சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையைக் குறைவதற்கு வழிவகுக்கும்.

கூடுதலாக, நெல்லிக்காய், கொள்ளு, கெகல் பயிற்சிகள் போன்ற சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் பிரச்சினையை குறைக்கும்.

இருப்பினும், ஒரு நாளைக்கு எட்டு முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பதை கவனித்தால் அல்லது வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.