கார்னித்தின் :
கார்னித்தின் என்றால் என்ன? கார்னித்தின் உடல் எடை குறைக்க உதவுமா மற்றும் கார்னித்தின் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகக் காணலாம்.
கார்னித்தின் என்றால் என்ன?
கார்னித்தின் என்பது உடலில் இயற்கையாக காணப்படும் ஒரு சேர்மமாகும். இது கொழுப்பு அமிலங்களை செல்களின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியாவிற்குள் செலுத்தி ஆற்றல் உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கார்னித்தின் பொதுவாக இறைச்சி மற்றும் பால் போன்ற விலங்கு பொருட்களில் காணப்படுகிறது. மேலும் சப்ளிமெண்ட்ஸ் வடிவிலும் கிடைக்கிறது.
உடல் எடை குறைய கார்னித்தின் :
கார்னித்தின் உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புகளை ஆற்றலுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து எடை இழப்புக்கு உதவலாம்.
மேலும் செல்களுக்கு சக்தி அளிப்பதன் மூலம் உடல் செயல் திறனை அதிகரித்து நீண்ட நேரம் பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
இருப்பினும், கார்னித்தின் எடை இழப்புக்கு உதவுமா என்பது பற்றி போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. சில ஆய்வுகளில் கார்னித்தின் எடை இழப்பை ஊக்குவிப்பதாகவும் சில ஆய்வுகளில் கார்னித்தின் உடல் எடை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிய வந்துள்ளன.
கார்னித்தின் மூலம் உடல் எடை குறைப்பு என்பது ஒட்டுமொத்த செயல்திறன் உணவு, உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உடல் எடை குறைக்க கார்னித்தின் சப்ளிமெண்ட்ஸ் உபயோகிக்கும் முன் தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு அனுபவம் வாய்ந்த உடற்பயிற்சி வல்லுநர்கள் அல்லது மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
உடல் எடை குறைய எல் கார்னித்தின் எல் டார்ட்டரேட் சப்ளிமென்ட்ஸ் உட்கொள்ள சிறந்த நேரம் :
உடல் எடை குறைய எல்-கார்னைடைன் எல்-டார்ட்ரேட்டை எடுத்துக்கொள்வதற்கான சிறந்த நேரம் தனி நபரின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், சில பொதுவான பரிந்துரைகள் பற்றி கீழே காணலாம்
உடற்பயிற்சிக்கு முன் :
உடற்பயிற்சிக்கு முன் எல்-கார்னைடைன் எல்-டார்ட்ரேட்டை எடுத்துக்கொள்வது உடல் திறனை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் எல்-கார்னைடைன் கொழுப்பு அமிலங்களை மைட்டோகாண்ட்ரியாவிற்கு கொண்டு சென்று உடற்பயிற்சியின் போது ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
வெறும் வயிறு :
எல் கார்னித்தின் எல் டார்ட்டரேட் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் எல் கார்னித்தின் எல் டார்ட்டரேட உடலால் உறிஞ்சப் படுவதை மேம்படுத்தலாம், ஏனெனில் உணவுக்கு பின் உண்ணும் போது உணவில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் கார்னித்தின் உறிஞ்சுதலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஹெல்த்கேர் நிபுணர் அறிவுரைப் படி :
பொதுவாக சுகாதார நிபுணர் அறிவுரையின் படி அல்லது எல் கார்னித்தின் தயாரிப்பின் பேக்கேஜிங் வழங்கிய பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் நேரத்தை பின்பற்றுவது நல்லது.
கார்னித்தின் தீமைகள் :
கார்னித்தின் சப்ளிமெண்ட்ஸ் சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது என்றாலும், சிலருக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
இரைப்பை குடல் பிரச்சினைகள் :
சிலருக்கு கார்னித்தின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.
உடல் துர்நாற்றம் :
கார்னித்தின் சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது சிலருக்கு உடல் நாற்றத்தை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
பசி அதிகரித்தல் :
கார்னித்தின் சப்ளிமென்ட்ஸ் பசியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது எடை இழப்புக்கு தடையை ஏற்படுத்தலாம்.
ஒவ்வாமை எதிர்வினைகள் :
சிலருக்கு கார்னைத்தின் ஒவ்வாமை எதிர்விளைவுகளைக் ஏற்படுத்தலாம். இது சொறி, அரிப்பு அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
தைராய்டு செயல்பாட்டில் குறுக்கிடலாம் :
அதிக அளவு கார்னைத்தின் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது சிலருக்கு, குறிப்பாக தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்களில் தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டில் தலையிடலாம்.
இதய நோய் ஆபத்து :
கார்னைத்தின் சப்ளிமெண்ட்ஸ் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் சிலரால் நம்பப் படுகிறது. ஆனால் இந்த கூற்றை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை.
முடிவுரை :
எல்-கார்னித்தின் எல்-டார்ட்ரேட் சப்ளிமெண்ட்ஸ் உடல் எடை குறைப்பை ஓரளவுக்கு ஊக்குவிக்கலாம். எனினும் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப் பாட்டில் கிடைக்கும் நன்மைகள் இதில் கிடைப்பதில்லை.
உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளுடன் எல் கார்னித்தின் எல் டார்டரேட் சப்ளிமெண்ட்ஸ் களையும் அனுபவம் வாய்ந்த உடற்பயிற்சி வல்லுநர்கள் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனையுடனும் பயன் படுத்துவது நல்லது.