பிரேசில் நட்ஸ் நன்மைகள், தீமைகள் மற்றும் பிரேசில் கொட்டையில் உள்ள சத்துக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
பிரேசில் நட்ஸ் :
பிரேசில் நட்ஸ் என்பது தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மரத்திலிருந்து கிடைக்கும் விதை ஆகும். இது அமேசான் மழைக்காடுகளில் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் வாழும் மரங்களில் ஒன்றாகும்.
பிரேசில் நட்ஸ் என்று பிரேசில் நாட்டின் பெயரில் அழைக்கப் பட்டாலும், பொலிவியாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஐவரி கோஸ்ட் மற்றும் பெரு ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.
பிரேசில் நட் பிற பெயர்கள் :
பிரேசில் கொட்டையின் அறிவியல் பெயர் பெதோலெட்டியா எக்சல்சா. இது ஆங்கிலத்தில் பிரேஸில் நட்ஸ், அமேசான் நட்ஸ் என்றும் ஹிந்தியில் பிரேசில் அக்ரூட் என்றும்,தெலுங்கில் பிரீஜி கிஞ்சலு என்றும் அழைக்கப்படுகிறது.
பிரேசில் கொட்டையில் உள்ள சத்துக்கள் :
பிரேசில் நட்ஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. 100 கிராம் பிரேசில் கொட்டையில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு
வைட்டமின்கள் :
பிரேசில் கொட்டை தியமின், ரிபோஃப்ளேவின், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், ஃபோலேட் மற்றும் பைரிடாக்சின் போன்ற பி குழு வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாகும்
பிரேசில் கொட்டை 100 கிராமில் சுமார் 7.87 மி.கி. வைட்டமின் இ உள்ளது.
தாதுச் சத்துக்கள் :
பிரேசில் கொட்டையில் இரும்புச் சத்து, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்தவை. அவை புரதம் மற்றும் உணவு நார்ச் சத்துக்களும் நிறைந்துள்ளன..
100 கிராம் பிரேசில் கொட்டையில் சுமார் 656 கலோரிகள் மற்றும் சுமார் 1917 µg, மற்றும் செலினியம் உள்ளது
பிரேசில் நட்ஸ் நன்மைகள் :
தைராய்டு சீராக சுரக்க செய்கிறது :
உடலில் ஒரு உறுப்பில் அதிக அளவு செலினியம் உள்ளது என்றால் அது தைராய்ட்டு ஆகும். செலினியம் குறைபாடு தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
பிரேஸில் நட்டில் அதிக அளவு செலினியம் உள்ளது. இது இதை உட்கொள்வதன் மூலம் தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்க செய்து ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறது.
இதய நோய்களை தடுக்கிறது :
பிரேஸில் நட் மெக்னீசியம் கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு அவசிய மானவை ஆகும்.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது இதயம் சீராக செயல்பட உதவுகிறது.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
ஒட்டுமொத்தமாக இதய நோய்கள் மற்றும் இதயக் கோளாறுகள் பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
குடலியக்கத்தை சீராக்குகிறது :
நார்ச்சத்து செரிமான மண்டலத்தை திறமையான செயல் பட வைப்பதாக நம்பப்படுகிறது.
பிரேஸில் நட்டில் கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச் சத்துக்கள் உள்ளன. இவை முழு செரிமான அமைப்பையும் எளிதாக்குகிறது.
கரையக்கூடிய நார்ச்சத்து நீரை ஈர்க்கும், செரிமானத்தை எளிதாக்குகிறது. கரையாத நார்ச்சத்து உடல் செயல்பாடு மூலம் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
மலட்டு தன்மையை போக்குகிறது :
செலினியம் குறைபாடு பெரும்பாலான ஆண்களுக்கு விந்து எண்ணிக்கை குறைவு மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.
உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்யும் தாதுச் சத்துக்களில் செலினியமும் ஒன்றாகும்.
பிரேசில் கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செலினியம் குறைபாட்டினால் ஏற்படும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
பிரேஸில் நட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் மலட்டுத்தன்மையைக் குறைக்கிறது.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :
தினமும் பிரேஸில் நட்ஸ் உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை மேம் படுத்துவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது பேசும் திறனை மேம்படுத்துவதோடு இதில் உள்ள செலினியம் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மூளையின் செயல்படும் திறனை மேம்படுத்துகிறது.
நரம்பியல் செயல் பாடுகளை மேம்படுத்துகிறது :
பிரேஸில் நட்ஸ்களில் எலாஜிக் அமிலம் எனப்படும் பாலிபீனால் உள்ளது. இது சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இது மூளையில் நரம்பியல் செயல்பாடுகளை மேம்படுத்தி மன அழுத்த எதிர்ப்பு விளைவுகளை அளிக்கிறது.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது :
பிரேஸில் நட்கள் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் போன்ற சேர்மங்களை கொண்டுள்ளது.
அதிக நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்த பிரேசில் கொட்டைகள் மொத்த மற்றும் கெட்ட கொழுப்பு என்றழைக்கப்படும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
மனநிலையை மேம் படுத்துகிறது :
குறைந்த செலினியம் அளவு கவலை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல மனநிலை தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 100 மைக்ரோ கிராம் செலினியம் எடுத்துக் கொண்ட ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் குறைந்துவிட்டன என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
அமேசான் நட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரிம கலவைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன.
வைட்டமின் சி, செலினியம் மற்றும் துத்தநாகத்துடன் இணைந்து வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் சேர்மங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இவை அனைத்தும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
பிரேசில் கொட்டைகளில் உள்ள செலினியம் நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
எலும்பு அமைப்பு மற்றும் தசை செயல்பாடு :
பிரேசில் நட்கள் எலும்பு திசு உருவாவதற்குத் தேவையான தாமிரம் என்ற கனிமத்தைக் கொண்டிருக்கின்றன.
இது இணைப்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது மேலும் எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்துவதன் மூலம் எலும்புகளை வலுப் படுத்துகின்றன.
தசைகளின் செயல்பாட்டிற்குத் தேவையான மெக்னீசியம் இதில் உள்ளது. இது தசைகளில் லாக்டிக் அமிலம் படிவதை தடுப்பதன் மூலம் புண் மற்றும் தசை வலியை தடுக்கிறது.
பிரேசில் கொட்டை தீமைகள் :
அதிகப் படியான செலினியத்தின் பக்க விளைவுகள் குமட்டல், சோர்வு, வயிற்றுப்போக்கு, எரிச்சல், பூண்டு போன்ற சுவாச வாசனை, முடி உதிர்தல் மற்றும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள், புள்ளிகள் நிறைந்த பற்கள், எரிச்சல் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஒழுங்கற்ற தன்மை போன்றவை ஏற்படுகின்றன.
அமேசான் நட்ஸ் அதிக அளவு அஃப்லாடாக்சின்களைக் கொண்டுள்ளன. அவை புற்றுநோய் உண்டாக்க கூடிய சிறிய அளவு கதிரியக்க ரேடியம் ஆகும்.
அமேசான் நட்டினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக பிரேசில் கொட்டை உண்பதால் ஏற்படும் ஒவ்வாமை கடுமையானதாகவும் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம்.