பீட்ரூட் நன்மைகள், தீமைகள் மற்றும் அடங்கியுள்ள சத்துக்கள்

0

பீட்ரூட்  நன்மைகள்,  தீமைகள் மற்றும் பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளட்டது.

பீட்ரூட் :

இதன் அறிவியல் பெயர் பீட்டா வல்கரிஸ் (Beta vulgaris) ஆகும். இதன் பூர்வீகம் ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா நாடுகள் ஆகும்.

பீட்ரூட்

உலக அளவில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது

இந்தியாவில் ஹரியானா, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தமிழ் நாட்டில் திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

பீட்ரூட் நன்மைகள் :

பீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது :  

பீட்டில் இயற்கையான நைட்ரேட்டுகள் உள்ளன. அவை மனித உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன.

நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களை தளர்த்தவும் விரிவடைய செய்யவும் உதவுகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

உடல் வலிமையை அதிகரிக்கிறது : 

நைட்ரிக் ஆக்சைடு உடற்பயிற்சியின் போது செலவழிக்கப்பட்ட ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்க உதவுகிறது.

மேலும் அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகள் செய்யும் அளவிற்கு வலிமையை  அதிகரிக்கிறது.

உடற்பயிற்சிக்கு முன் பீட் சாறு உட்கொள்பவர்கள் 16 சதவீதம் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதய நோயாளிகளுக்கு நல்லது :

உடலில் அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள் இதயத்திற்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதன் மூலம் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை (HDL கொலஸ்ட்ரால்)  குறைக்கிறது.

மேலும் ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைப்பதன் மூலம் பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கோளாறுகள் வரும் வாய்ப்பை குறைக்கிறது.

பிறப்பு குறைபாடுகளை குறைக்க உதவுகிறது :

பீட்ரூட்  ஃபோலேட்டின் சிறந்த மூலமாகும். மேலும் இது குழந்தையின் முதுகெலும்பை உருவாக்க உதவுகிறது.

எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு நன்மை பயக்கும் காய்கறியாகும்.

போலேட் குறைபாடு மூளை, முதுகெலும்பு அல்லது முதுகெலும்பில் உள்ள நரம்புக் குழாய்களில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது :

இந்த காய்கறியில் பீட்டாசியானினிஸ் என்ற நிறமி உள்ளது. இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

பெருங்குடல், நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பயன்படுத்தப்படும் சேர்மங்கள் உடலில் நைட்ரோசமைன் சேர்மங்களை உருவாக்கி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

பீட்ரூட் சாறு இந்த கலவைகளால் ஏற்படும் உயிரணு மாற்றங்களை குறைக்க அல்லது தடுக்க உதவுகிறது.

டிமென்சியாவுக்கு நல்லது :

மூளையின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் வயதுக்கு ஏற்ப குறைகிறது.

இச் செயல்பாடு அறிவாற்றல் இழப்பு மற்றும் இறுதியில் டிமென்ஷியாவுக்கு வழி வகுக்கிறது.

இந்த காய்கறியில் அதிக அளவில் நைட்ரேட் செறிவு உள்ளதால் பீட் ஜூஸ் குடிப்பது மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்குவதை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் டிமென்ஷியாவின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப் படுத்துகிறது :

பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நல்லது.

வைட்டமின் சி உடல் செல்களில் நடைபெரும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெள்ளை இரத்த அணுக்களின் செயல் பாடுகளையும் தூண்டுகிறது.

பீட்டில் இயற்கையான பீட்டா கரோட்டின் உள்ளது. இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது :

பீட்ரூட்டில் பீட்டலின் எனும் நிறமிகள் உள்ளன. அவை உடலின் நச்சுத் தன்மை நீக்கும் செயல்முறையை துரிதப் படுத்துகின்றன.

உடைக்கப்பட்ட நச்சுகள் மற்ற மூலக் கூறுகளுடன் பிணைக்கப் பட்டு உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

கண்கள் ஆரோக்கியம் :

பீட்ரூட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண்புரை வராமல் தடுக்கிறது.

வைட்டமின் ஏ இன் ஒரு வடிவமான பீட்டா கரோட்டின் முதுமையால் ஏற்படும் மாகுலர் சிதைவை தடுக்கிறது.

எனவே பீட்ரூட் அடிக்கடி உட்கொள்வது ஆரோக்கியமான கண்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கல்லீரலுக்கு நல்லது :

பீட்ரூட்டில் கால்சியம், பீடைன், பி வைட்டமின்கள், இரும்புச் சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

அவை கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மேலும் பித்தத்தை மெல்லிய தாக்கி கல்லீரல் வழியாக சீராக செல்ல அனுமதிக்கிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து கல்லீரலில் இருந்து நச்சுகள் சரியாக அகற்றப்படுவதை உறுதி செய்கிறது.

பீட்ரூட் தீமைகள் :

பீட்ரூட் தீமைகள் பின்வருமாறு

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது  இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் பீட்ரூட் அல்லது அதன் சாற்றை உணவில் சேர்ப்பதற்கு முன்பு ஒரு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த காய்கறியில் அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. எனவே அதிக அளவு பீட்ரூட் சாப்பிடுவது சிறு நீரக கற்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இந்த காய்கறி சிலருக்கு பீட்டுரியா என்ற பக்க விளைவை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் பாதிப்பில்லாத ஒரு பக்க விளைவு ஆகும்.

ஆனால் உடலில் இரும்பு சத்து வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் இருப்பதையும் குறிக்கலாம். அதிகமாக பீட்ரூட் சாப்பிட்டால் சிறுநீர் மற்றும் மலம் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.