அவுரி நன்மைகள், தீமைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

0

அவுரி நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் அவுரி தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

அவுரி

அவுரியின் அறிவியல் பெயர் இண்டிகோஃபெரா டிங்க்டோரியா ஆகும். இது ஆங்கிலத்தில் இண்டிகோ என்றும் அழைக்கப்படுகிறது, இது 1 முதல் 2 மீட்டர் உயரம் வரை வளரும் புதர் வகை தாவரமாகும்.

அவுரி

இதன் இலைகள் அடர் பச்சை நிறமாகவும் மற்றும் பூக்கள் இளஞ்சிவப்பு ஊதா நிறமாகவும் காணப்படும். அவுரி இலைகள் நிழலில் உலர்த்தப்படும் போது நீல நிறமாக மாறுகிறது. எனவே இது பல நூற்றாண்டுகளாக ஆடைகளில் பயன்படுத்தப்படும் நீல நிற சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அவுரி நன்மைகள்

அவுரி இந்தியாவில் முதன்முறையாக பயிரிடப்பட்டது. ஆங்கிலேயர்கள் அவுரி நன்மைகள் மற்றும் வணிக பயன்பாடு காரரணமாக அவுரி பயிர் செய்வதை ஊக்கு வித்ததன் விளைவாக பீகார் மற்றும் வங்காளத்தில் பிற உணவு தாணிய பஞ்சம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அவுரி நன்மைகள் பின்வருமாறு

சருமம் பளபளப்பாக :

அவுரி இலைகளை எடுத்து மசித்து கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும். பிறகு வடித்து தோலின் தடவி வர தோலில் உள்ள புள்ளிகள், மருக்கல் மறையும். மேலும் அந்த பேஸ்டை எடுத்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பளபளப்பாகும்.

முடி புத்துணர்ச்சி பெற

அவுரி இலைகளை நிழலில் உலர வைத்து பொடி செய்து அதை நல்லெண்ணெய்யுடன் கலந்து தலை முடியில் தடவி வர விரைவில் முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.

பற்கள் மற்றும் ஈறுகள்

அவுரி இலைச் சாறு மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய் சம அளவில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை பஞ்சில் நனைத்து, பாதிக்கப்பட்ட பல்லில் வைக்க பற்களில் உள்ள புழுக்கள் வெளியேறும். இதை தொடர்ந்து 3 முறை செய்யவும்.

புண்கள் குணமாக

செடியின் வேர்களை அரைத்து பேஸ்டாக்கி, சீழ் சுரக்கும் புண்களின் மீது தடவிவர வலியை ஏற்படுத்தும் புண்கள் விரைவில் ஆறும்.

கல்லீரல் குணமாக

2 கிராம் அவுரி இலை பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர கல்லீரலில் ஏற்படும் புண்கள் குணமாகி புத்துணர்ச்சி பெறும்.

சிறுநீர் பிரச்சினைகள் நீங்க

அவுரி இலைகள் அல்லது வேர்களை அரைத்து அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த கரைசல் ஆறும் முன் வெதுவெதுப்பாக குடிக்கவும். இது சிறுநீர் பாதை தொடர்பான அணைத்து பிரச்சனைகளையும் நீக்கும். இது உடலில் உள்ள நச்சுத தன்மையை நீக்குவதிலும் உதவுகிறது.

வாய் புண்கள் ஆற

வாய் புண்கள் அல்லது பல் ஈறுகளின் அடிப்பகுதியில் உருவாகும் புண்கள் மிகுந்த வலியைத் தரும். அவை பொதுவாக இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும்.

அவுரி இலைச் சாறுடன் தேன் கலந்து அந்த புண்களில் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

காதில் உள்ள பூச்சிகள் வெளியேற

சில நேரங்களில் தூங்கும் போதோ அல்லது பைக் ஓட்டும் போதோ காதில் நுழையும் பூச்சுக்களை கைகளால் எடுக்க முடியாது.

அவுரி வேர்கள் மற்றும் எருக்கம் செடியின் வேர் ஆகியவற்றை எடுத்து அரிசி கழுவிய தண்ணீரில் அரைத்து எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து சிறிது சூடு செய்து கொள்ள வேண்டும். இதை லேசான வெதுவெதுப்பான சூட்டில் 4 முதல் 5 துளிகள் காதில் விடவும். இது காதில் உள்ள அனைத்து பூச்சிகளையும் அழிக்கும்.

முடி கருப்பாக

அவுரி இலை சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்தவும்

பிறகு குளிர வைத்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். இந்த எண்ணெயை முடியிலும், உச்சந்தலையிலும் தினமும் தடவர முடி நரைப்பதை நிறுத்தி கருப்பு முடி மீண்டும் வளர உதவும்.

அவுரி தீமைகள்

அவுரி வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

அதிக அளவில் உட்கொள்ளும் போது சிலருக்கு வாந்தி, பேதி போன்ற ஜீரண தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம்.

அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும், வறண்ட மற்றும் மெல்லிய உச்சந் தலையை உடையவர்களுக்கும் எரிச்சல், அரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்..

மேலும் இது ஆடைகளிலும் கறையை உண்டாக்கும். எனவே, ஷாம்பு அல்லது கண்டிஷனர் போன்ற சாயமிடுதல் செயல்பாட்டின் போது தலைமுடி தவிர வேறு எங்கும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.