அத்திப்பழம் நன்மைகள், சத்துக்கள் மற்றும் அத்தி பழத்தின் தீமைகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
அத்திப்பழம் :
அத்திப்பழம் என்பது அத்தி மரத்தின் பழமாகும். அத்திமரத்தின் அறிவியல் பெயர் பிக்கஸ் கரிக்கா (Ficus Carica) ஆகும்.
துருக்கி முதல் வடக்கு இந்தியா வரை உள்ள பகுதிகள் இதன் பூர்வீகமாக கருதப் படுகிறது. அத்திப் பழம் உற்பதியில் துருக்கி, எகிப்து, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் அத்திப் பழத்தில் 74 கலோரிகள் உள்ளன. அதில் 0.3 கிராம் கொழுப்பு, 0.8 கிராம் புரதம் மற்றும் 19 கிராம் கார்போஹைட்ரேட், 16 கிராம் சர்க்கரை மற்றும் 2.9 கிராம் நார் சத்து உள்ளது.
100 கிராம் அத்திப் பழத்தில் 2.0 மில்லி கிராம் வைட்டமின் சி, 11 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 4.7 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.
100 கிராம் அத்திப்பழத்தில் 0.37 மில்லி கிராம் இரும்பு சத்து, 35.00 மில்லி கிராம் கால்சியம் 232 மில்லி கிராம் பொட்டாசியம், 14 மில்லி கிராம் பாஸ்பரஸ், 17 மில்லி கிராம் மக்னேசியம் உள்ளது.
அத்திப்பழம் நன்மைகள் :
பொதுவாக உலர் பழங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தாதுச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகும்.
அத்திப் பழம் மருத்துவ குணங்கள் காரணமாக பல்லாயிரம் வருடங்களாக உண்ணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அத்திப் பழம் மிகவும் பிரபலமான உலர் பழங்களில் ஒன்றாகும். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
அத்திப்பழம் நன்மைகள் பின்வருமாறு
இரத்த அழுத்தம் :
அத்திப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது சோடியத்தின் செயல் பாட்டை குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் போதுமான இரும்புச்சத்து, ஈஸ்ட்ரோஜன் போன்ற சத்துக்கள் உள்ளதால் வயது மூப்பு தொடர்பான செயல்பாடுகளை கட்டுப் படுத்துவதில் உதவுகிறது.
எடை இழப்பு :
தினமும் சிறிது அத்திப்பழம் சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது எனவே சிப்ஸ் போன்ற வறுத்த சிற்றுணவுகளுக்கு பதிலாக அத்திப்பழம் சாப்பிடுவது சிறந்த வழி என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
அத்திப் பழம் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது.
இந்த ட்ரைகிளிசரைடுகள் இதய நோயைத் தூண்ட ஒரு காரணமாக அமைகின்றன.
ஏனெனில் அவை இரத்தக் குழாயில் கொழுப்புத் துகள்களாக சேர்ந்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கிறது :
அத்திப் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நாள்பட்ட அழற்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.
புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல்களும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது :
அத்திப்பழத்தில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மேலும் அத்திப்பழத்தில் அதிக அளவில் காணப்படும் பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :
ஆரோக்கியமான எலும்புகளுக்கு தேவையான முக்கிய ஊட்ட சத்து கால்சியம் ஆகும். அத்திப்பழம் கால்சியம் சத்தின் சிறந்த மூலமாக்கும்.
மலச்சிக்கல் :
அத்திப்பழம் பயன்கள் பல இருந்தாலும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அத்திப்பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது.
இனப்பெருக்க அமைப்பு ஆரோக்கியம் :
அத்திப் பழம் ஆண்மை குறைபாட்டை சரி செய்கிறது. அத்திப்பழத்தில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை கருவுறுதலுக்கு முக்கிய பங்களிக்கின்றன.
சிறுநீரகக் கற்களைத் தடுக்கிறது:
சிறு நீரக கற்கள் வராமல் தடுக்க அத்திப்பழங்களை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறியவுடன், குடித்து வரலாம்.
அத்திப்பழம் தீமைகள் :
அத்திப்பழம் தீமைகள் பின்வருமாறு
அத்திப்பழங்களில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. வார்ஃபரின் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் உணவில் வைட்டமின் கே அளவை சீராக வைத்திருக்க வேண்டும். எனவே அவர்கள் அத்திப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அதிக அளவு அத்திப்பழம் சாப்பிடுவது குறிப்பாக உலர்ந்த வயிற்றுப் போக்கை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.