ஓட்ஸ் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

ஓட்ஸ் நன்மைகள், சத்துக்கள், அதிக அளவு ஒட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் ஓட்ஸ் தீமைகள்

ஓட்ஸ் :

ஓட்ஸ் உலக அளவில் அதிகமாக பயிரிடப் படுகிற தானிய வகைகளுள் ஒன்றாகும். இதன் அறிவியல் பெயர் ஆவெனா சடிவா (Avena Sativa.L) ஆகும். இது தமிழில் காடை கன்னி எனவும் பல்லரிசி எனவும் அழைக்கப்படுகிறது.

ஓட்ஸ்

உலக அளவில் ரசியா, கனடா ஆகிய நாடுகள் ஓட்ஸ் உற்பத்தியில் முதல் இரண்டு இடத்தில் உள்ளன.

ஓட்ஸ் சத்துக்கள் :

100 கிராம் ஓட்சில் 389 கலோரிகள் உள்ளன. புரோட்டீன் 16.9 கிராம், கொழுப்பு சத்து 6.9 கிராம், மாவுச் சத்து 66.3 கிராம், நார்ச் சத்து 10.6 கிராம் உள்ளது.

100 கிராம் சமைக்கப் படாத ஓட்ஸில் வைட்டமின் இ 0.42 மில்லி கிராம், வைட்டமின் கே 4 மைக்ரோ கிராம் அளவு உள்ளது.

100 கிராம் பச்சை ஓட்ஸில் இரும்பு சத்து 4.25 மில்லி கிராம், கால்சியம் 52.00 மில்லி கிராம், பொட்டாசியம் 362 மில்லி கிராம், பாஸ்பரஸ் 410 மில்லி கிராம், துத்தநாகம் 3.64 மில்லி கிராம், செலினியம் 28.9 மைக்ரோ கிராம் அளவு உள்ளது.

ஓட்ஸ் நன்மைகள் :

இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப் படுகிறது.

ஓட்ஸ் நன்மைகள்

ஓட்ஸ் நன்மைகள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.அவை

நீரிழிவு நோய் :

ஓட்ஸ் உடலில் சர்க்கரையை உறிஞ்சப் படுவதை குறைக்கிறது. ஓட்ஸில் உள்ள சிக்கலான மாவுச் சத்தின் காரணமாக சர்க்கரை விரைவாக உடைக்கப் படுவதை குறைக்கிறது.

மேலும் ஓட்ஸ் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீட்டை கொண்டுள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

எடை இழப்பு :

ஓட்ஸ் பயன்கள் பலவற்றில் முக்கியமானது எடை இழப்பில் உதவுவது ஆகும். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்து கின்றன. இதன் மூலம் உணவின் அளவைக் குறைக்கிறது.

மேலும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை கொண்டுள்ளது. இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.

உடல் எடை குறைய விரும்பு பவர்கள் ஓட்ஸுடன், பழங்களைச் சேர்த்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

நோயெதிர்ப்பு அமைப்பு என்பது பாக்டீரியா, வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிரான உடலின் முக்கிய பாதுகாப்பு ஆகும்.

எனவே, நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு செயல்பட வைக்க வேண்டியது அவசியம்.

ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் என்ற ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச் சத்துக்கள் நியூட் ரோபில்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.

அவை ஒட்டுமொத்த அமைப்பையும் வலுப்படுத்தி மற்றும் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

செலியாக் நோயைத் தடுக்கிறது :

செலியாக் நோய் முக்கியமாக சிறுகுடலில் ஏற்படுகிறது. உணவில் இருந்து ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப் படுவதை பாதிக்கிறது.

இதன் மூலம் ஒட்டு மொத்த ஆரோக்கியாத்தையும் பாதிக்கிறது. ஓட்ஸ் பசையம் இல்லாத உணவு என்பதால் இந்த நோயைத் தடுக்க உதவுகின்றன.

ஜீரண மண்டல ஆரோக்கியம் :

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவை செரி மானத்திற்கு சிறந்தவை.

நார்ச் சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமான அமைப்பை சீராகவும் திறமையாகவும் இயங்க வைக்கிறது.

பொதுவாக பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகளை விட எளிதில் ஜீரண மாகிறது.

வாயு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

எனவே ஏதேனும் செரிமான பிரச்சினைகளால் அவதிப் படுபவர்கள் ஓட்ஸ் உணவை சாப்பிட்டு பாக்கலாம்.

கொழுப்பை குறைக்கிறது :

ஓட்ஸ் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) தமனிகள் அடைப்பு, இருதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும.

உணவில்  சேர்த்துக் கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம் இதயப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது :

இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், உயர் இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்களின் பிற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் :

ஓட்ஸில் என்டோரோலாக்டோன் லிக்னின்கள் உள்ளன. இதில் நிறைய பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. பைட்டோ கெமிக்கல்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இதன் மூலம் உடல் செல்லில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் சேரும்போது, ​​அது பல்வேறு வகையான புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

குழந்தைகளுக்கு சிறந்த உணவு :

திட உணவை சாப்பிடத் தொடங்கிய குழந்தைகளுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும்.

ஓட்ஸ் மிகவும் சத்தானது மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது.

ஸ்டீல்-கட் ஓட்ஸ் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஓட்ஸ் ஆகும். ஏனெனில் அவை குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்டவை.

பால் அல்லது மற்ற உணவுகள் அல்லது குழந்தை உணவு வகைகளுடனும் சேர்த்து கொடுக்கலாம்.

கர்ப்ப காலத்தில் நல்லது :

ஓட்ஸ் கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமான உணவாகும்.

மேலும் பொதுவாக  முழு தானியங்களை உணவில் சேர்ப்பது கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நாள் முழுவதும் நீடிக்கும் ஆற்றல் தேவை எனவே மிதமான அளவு ஓட்சும் எடுத்து கொள்ளலாம்.

சரும பொலிவு :

பொதுவாக தானியங்கள் ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை.

அவை சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஓட்ஸ் இயற்கையான சுத்தி கரிப்பாளராக செயல்படுகிறது. மேலும் சப்போனின்கள் எனப்படும் ஒரு இயற்கை மூலப் பொருளைக் கொண்டுள்ளது.

இது ஆரோக்கியமான, பளபளப் பான மற்றும் தெளிவான சருமத்தைப் பெற ஓட்ஸ் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் தீமைகள் :

ஓட்ஸ் தீமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் விழுங்குவதில் அல்லது மெல்லுவதில் சிரமம் இருந்தால் ஓட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நன்றாக மெல்லப் படாத ஓட்ஸ் குடல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஓட்ஸை தொடர்ந்து உட்கொள்வது உணவுக்குழாய், வயிறு மற்றும் குடல் உள்ளிட்ட செரிமான மண்டலத்தின் கோளாறுகள் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது.