அரைக் கீரையில் உள்ள சத்துக்கள் மற்றும் 14 நன்மைகள்

0

அரைக் கீரை நன்மைகள், பயன்கள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் அரைக் கீரை தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

அரைக் கீரை :

முளை கீரை, தண்டு கீரை எனவும் பெயர்களை கொண்டுள்ள அரைக் கீரை தாவரத்தின் அறிவியல் பெயர் அமராந்தஸ் டூபியஸ் (Amaranthus dubius) ஆகும்.

இது வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட கீரை வகையாகும்.

அரைக் கீரை

அரைக் கீரை பச்சை, சிவப்பு பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. மேலும் சூப்கள், பொரியல், வேகவைத்த உணவுகள், கிரேவிகள் மற்றும் பருப்பு வகைகளில் சேர்த்து உண்ணப்படுகிறது.

மேலும் அரைக் கீரை வடை, அரைக் கீரை தோசை, அரைக் கீரை கூட்டு போன்ற அரைக் கீரை சமையல் வகைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.

அரைக் கீரையில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் பச்சை அரைகீரையில் 23 கலோரிகள் உள்ளன. மேலும் புரதம் 2.46 கிராம், கொழுப்பு 0.33 கிராம், கார்போஹைட்ரேட 4.02 உள்ளது.

100 கிராம் சமைக்கப்படாத அரை கீரையில் இரும்புச் சத்து 2.32 மில்லி கிராம், மக்னேசியம் 55 மில்லி கிராம், கால்சியம், 21 5மில்லி கிராம், பாஸ்பரஸ் 50 மில்லி கிராம், பொட்டாசியம் 611 மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் உள்ளன.

அரைக் கீரை நன்மைகள்:

அரைக் கீரையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல ஊட்ட சத்துக்கள் காரணமாக பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவை

சர்க்கரை நோய்க்கு நல்லது :

அரைக் கீரை ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளன.

இதனால் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிப்பதற்குக் காரணமான உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிற ஆபத்துக் காரணிகளையும் அரை கீரை குறைக்கின்றன.

கொழுப்பை குறைக்கிறது :

அரை கீரையின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் திறன் ஆகும். இதில் டோகோட்ரியெனால்ஸ் என்ற ஒரு வகையான வைட்டமின் உள்ளது.

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் கரோனரி இதய நோய்களைத் தடுக்கிறது.

எலும்பு ஆரோக்கியம் :  

அரை கீரையில் கால்சியம் கனிசமான அளவில் உள்ளது. இதில் உள்ள கால்சியத்தின் அளவு மற்ற கீரைகளை விட மூன்று மடங்கு அதிகம் மற்றும் பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

எனவே அரைகீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கால்சியம் குறைபாடுகளால் ஏற்படும் நோய்களை தடுக்க முடியும்.

இரத்த சோகையை போக்குகிறது :

பொதுவாக முப்பது வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

மற்ற கீரைகளுடன் ஒப்பிடும் போது இது அதிக அளவு எளிதில் செரிமானமாகும் புரதத்தைக் கொண்டுள்ளது.

அரை கீரையின் முக்கிய மருத்துவ குணங்களில் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப் பணுக்களின் எண்ணிக் கையை அதிகரிப் பதாகும்.

செரிமான ஆரோக்கியம் :

அரை கீரை நார்ச் சத்தின் சிறந்த மூலமாகும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறந்த உணவாகும்.

ஏனெனில் அவை சுவையாகவும், சத்தானதாகவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாகவும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் உள்ளன.

மேலும் அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மலச் சிக்கலையும் தடுக்கின்றன.

புற்றுநோய் பாதுகாப்பு : 

அரை கீரையில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் லைசின் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகளும், மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

இவை உடலிற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகின்றன மற்றும் புற்றுநோய்க்கு காரணமான வீரியம் மிக்க செல்கள் உருவாவதைத் தடுக்கின்றன.

முடி வளர்ச்சி :

அரை கீரையில் லைசின் உள்ளது. இது ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.

இது முடி வளர்ச்சி மற்றும் நல்ல சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல், உடைதல் மற்றும் இளநறை பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் அரைகீரை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

அரைக் கீரையின் மருத்துவ குணங்கள் :

அரை கீரை உணவாக பயன்படுவதுடன் சில மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளன. அவை

இரத்தம் ஊற :

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க, பருப்புடன் அரை கீரையை சேர்த்து சமைத்து சுமார் 21 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தத்தின் நம்பமுடியாத அதிகரிப்பை உணர முடியும்.

முடி வளர :

10 வெந்தய விதைகளை அரை கீரை சாறுடன் சேர்த்து உச்சந்தலையில் தடவி இருபது நிமிடம் கழுத்து முடியை கழுவ வேண்டும்.

இது முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.

பல்வலி நீங்க :

அரை கீரை வேரில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.

அரை கீரை வேருடன் மஞ்சள் சேர்த்து வேகவைத்து, பின்னர் வடிகட்டிய நீரில் வாய் கொப்புளிக்க பல் மற்றும் ஈறு வலிகளிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.

சளி, இருமல் நிவாரணம் :

சளி, இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து உடலைப் பாதுகாக்க அரைகீரை தண்டு சாற்றுடன் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி குணமாக :

ஒரு கிராம் அளவு மிளகுப் பொடியை அரைக்கீரை சாறுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

காய்ச்சல் மருந்தாக :

அரைக் கீரையுடன் மஞ்சள், மிளகு, இஞ்சி, மற்றும் சுக்கு போன்றவை சேர்த்து செய்யப்பட்ட கஷாயம், காய்ச்சல் மற்றும் காய்ச்சல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது

குழந்தை வளர்ச்சி அதிகரிக்க :

அரை கீரை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது. அரை கீரை வடையாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.

அரைக்கீரை தீமைகள் :

அரை கீரை போதுமான அளவு மிகவும் ஆரோக்கிமானா ஒன்றாகும். இருப்பினும் அதிக அளவு சாப்பிடுவது சில தீமைகள் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கீரை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது வீக்கம், வாயு மற்றும் வாய்வு பிடிப்புகள் போன்ற வாய்வு கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் அரை கீரையை அதிக அளவு சாப்பிடுமுன் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கீரையைத் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.