ஆப்ரிகாட் பழம் நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் ஆப்ரிகாட் தீமைகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆப்ரிகாட் பழம் :
ஆப்ரிகாட் பழம், சர்க்கரை பாதாமி பழம், பாதாமி பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ப்ரூனஸ் ஆர்மேனியாகா ஆகும்.
இது ஆங்கிலத்தில் ஆப்ரிகாட் (Aprikot) என்றும், தமிழில் சர்க்கரை பாதாமி பழம், பாதாமி பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் ஆப்ரிகாட் அல்லது பாதாமி பழத்தில் 0.4 கிராம் கொழுப்பு, 1.4 கிராம் புரதம் மற்றும் 11 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதில் சர்க்கரை 9.2 கிராம் மற்றும் நார்ச் சத்து 2 கிராம் ஆகும.
வைட்டமின்கள் :
100 கிராம் ஆப்ரிகாட் பாதாமி பழத்தில் 96 மைக்ரோ கிராம் வைட்டமின் A 10 மில்லி கிராம் வைட்டமின் C மற்றும் 3.3 மைக்ரோ கிராம் வைட்டமின் இ உள்ளது.
தாதுச் சத்துக்கள் :
100 கிராம் ஆப்ரிகாட் பழத்தில் 0.39 மில்லி கிராம் இரும்பு, 13 மில்லி கிராம் கால்சியம், 23 மில்லி கிராம் பாஸ்பரஸ், 10 மில்லி கிராம் மக்னேசியம் 259 மில்லி கிராம் பொட்டாசியம், 0.20 மில்லி கிராம் சிங்க் உள்ளது.
ஆப்ரிகாட் பழம் நன்மைகள் :
ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
காய்ச்சலுக்கு நல்லது :
ஆப்ரிகாட் பழச்சாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்பது நல்லது.
ஏனெனில் இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், கலோரிகள் மற்றும் நீர்ச் சத்தை அளிக்கிறது.
அதே நேரத்தில் பல்வேறு உறுப்புகளில் தங்கியுள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
காய்ச்சலை போக்க வேகவைத்த பாதாமி பழத்தையும் பயன்படுத்தலாம்.
இதய பாதுகாப்பு :
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவைக் குறைக்கும். எனவே மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது.
மேலும் அதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து அதிரோஸ்கிளிரோசிஸ் போன்ற இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் :
ஆப்ரிக்காட் அல்லது சர்க்கரை பாதாமி பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும், இது கீழ் வாதம் உள்ளவர்களுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
தோல் பாதுகாப்பு :
அரிப்பு, தோலழற்சி, சிரங்கு, சொரியாசிஸ் மற்றும் சொறி போன்ற தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்தாக பாதாமி எண்ணெய் பயன் படுகிறது.
இது காமா லினோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா -6 மற்றும் வைட்டமின் இ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
இரத்த சோகை வராமல் தடுக்கிறது :
உலர்ந்த பாதாமி பழம் இரும்பு மற்றும் தாமிரத்தின் சிறந்த மூலமாகும். இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் பாதாமி பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
இரத்த சோகை பலவீனம், சோர்வு, தலைச்சுற்றல், செரிமான பிரச்சினைகள் மற்றும் பொதுவான வளர்சிதை மாற்ற செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
இரத்த சிவப்பணுக்கள் இல்லாமல் உடலில் அனைத்து செல்களும் சரியாக ஆக்ஸிஜனேற்ற முடியாது.
இதனால் உறுப்பு அமைப்புகள் செயலிழக்கத் தொடங்கும். தாமிரம் மற்றும் இரும்பு சத்து இரத்த சிவப்பணு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆற்றல் இழப்பை குறைக்கிறது :
உடலில் உள்ள நீர்ச் சத்து பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகிய தாதுக்களை சார்ந்துள்ளது. பாதாமி பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உடலில் திரவ சமநிலையை பராமரிக்கவும், உறுப்புகள் மற்றும் தசைகளுக்கு ஆற்றல் சரியாக விநியோகிக்கப் படுவதை உறுதி செய்யவும் உதவுகிறது.
எலக்ட்ரோ லைட்டுகளின் சமநிலையை பராமரிப்பதன் மூலம் ஆற்றலை அதிகரிக்கவும், தசைப்பிடிப்பைக் குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான இரத்தம் செல்லவும் உதவி செய்கிறது.
எலும்பு ஆரோக்கியம் :
ஆப்ரிகாட் பாதாமி பழத்தில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.
கால்சியம் சத்து உடலால் உறிஞ்சப் படுவதற்கும் சீரான விநியோகத்திற்கும் பொட்டாசியம் அவசியம் ஆகும் மேலும் பாதாமி பழத்திலும் பொட்டாசியம் கனிசமான அளவு உள்ளது.
பார்வையை மேம்படுத்த உதவுகிறது :
பொதுவாக பழங்களை உட்கொள்வது கண் ஆரோக்கித்திற்கு நல்லதாகும்.
அதிலும் ஆப்ரிகாட் பழத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் சாந்தோபில்ஸ் நிறைந்துள்ளன.
இது வயது தொடர்பான பார்வைக் கோளாறுகளைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
மேலும் அவற்றில் வைட்டமின் ஏ, கண்களுக்கு முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். இது ரெட்டினோல் என்றும் அழைக்கப்படுகிறது.
இது வயது முதிர்வால் ஏற்படும் மாகுலர் சிதைவை தடுக்கிறது.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது :
பாதாமி பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
அதாவது அவை இரத்த சர்க்கரை அளவை மிக வேகமாக அதிகரிக்காது.
மேலும் இதில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
குடலியக்கத்தை மேம் படுத்துகிறது :
ஆப்ரிக்கோட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
மேலும் கொழுப்பு அமிலங்களை விரைவாக உடைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிற செரிமான பிரச்சனை களுக்கும் தீர்வாக அமைகிறது.
ஆப்ரிகாட் பழம் தீமைகள் :
சிலருக்கு உலர்ந்த ஆப்ரிகாட் அல்லது பாதாமி பழங்கள் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். பெரும்பாலான உலர்ந்த உணவுகளில் உள்ள சல்பைட்டுகள் ஆஸ்துமா நோயை தூண்ட வாய்ப்புகள் உள்ளது.