அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள், அன்னாசி பழம் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன
அன்னாசி பழம் :
அன்னாசிப் பழத்தின் அறிவியல் பெயர் ஆனாநஸ் கோமோசஸ் ஆகும். இது ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்றும், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ஆனானஸ் என்றும், மலையாளத்தில் கைட்டச் சக்கா என்றும், தெலுங்கில் அனானஸ் பண்டு என்றும் அழைக்கப் படுகிறது.
பைன் ஆப்பிள் இந்திய மக்கள் அனைவராலும் சாப்பிடப்படும் இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்றாகும்.
அன்னாசிப் பழத்தில் உள்ள சத்துக்கள்
அன்னாசிப் பழம் 100 கிராமில் 50 கிலோ கலோரிகள் உள்ளன. மாவுச் சத்து 13.12 கிராமும், புரதச் சத்து 0.50 கிராமும் உள்ளன. மேலும் 1.2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
வைட்டமின்கள் :
100 கிராம் அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ 54 ug, வைட்டமின் சி 47.8 மில்லிகிராமும், வைட்டமின் இ 0.02 மில்லி கிராமும், வைட்டமின் கே 0.7 மைக்ரோ கிரமும் உள்ளன.
தாதுச் சத்துக்கள் :

அன்னாசி பழம் நன்மைகள் :
அன்னாசி பழம் போன்ற தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அன்னாசி பழம் நன்மைகள் பின்வருமாறு
இதயத்தை பாதுகாக்கிறது :
அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுதில் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் அதிகம் பொட்டாசியம் உட்கொள்வது பக்கவாதம், எலும்பு தாது அடர்த்தியைப் பாதுகாத்தல் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை குறைத்தல் பணிகளை செய்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர.
தோல் பாதுகாப்பு :
ஆன்டிஆக்ஸிடன்ட்டான வைட்டமின் சி, அதன் இயற்கையான மூலத்தில் இருந்து சாப்பிடும்போது அல்லது மேற்பூச்சாகப் பயன் படுத்தும்போது, சூரியன் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் தோல் சேதத்தை எதிர்த்துப் போராடவும், சுருக்கங்களை குறைக்கவும், ஒட்டுமொத்த தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
சருமத்தின் ஆதரவு அமைப்பான கொலாஜன் உருவாவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜீரணம் :
அன்னாசிப் பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையை மேம்படுத்தவும் உதவுகிறது.
அன்னாசிப் பழத்தில் புரோமோலின் எனப்படும் நொதி புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது.
இரத்த கொதிப்பு :
அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
அதிக பொட்டாசியம் உட்கொள்வதன் மூலம் நோய்களினால் ஏற்படும் மரணத்தை 20 சதவிகிதம் குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்துமாவை தடுக்கிறது :
அதிக அளவு குறிப்பிட்ட சத்துக்களை உட்கொள்ளும் மக்களுக்கு ஆஸ்துமா வரும் அபாயங்கள் குறைவாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த ஊட்டச் சத்துக்களில் ஒன்று பீட்டா கரோடட்டின்.
சில ஆய்வுகள் மற்றும் நம்பகமான ஆதாரங்கள் ப்ரோமெலைன் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைப்பதற்கு பங்களிக்கும் என்று பரிந்துரைத்துள்ளது.
பற்களுக்கு நல்லது :
அன்னாசிப்பழம் பல் ஈறுகளை வலுப்படுத்தி பற்கள் ஆரோக்கியத்துடன் இருக்க உதவி செய்வதாக கூறப்படுகிறது. பற்கள் மற்றும் எலும்புகள் கால்சியத்தால் ஆனதாகும்.
அன்னாசிப் பழத்தில் குறிப்பிட தகுந்த அளவில் கால்சியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.
கண்களுக்கு நல்லது :
அன்னாசிப்பழத்தை தவறாமல் உட்கொள்வது வயதாகும்போது கண்ணை பாதிக்கும் நோய்களான மால்குலர் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள அதிக வைட்டமின் சி மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பார்வையை மேம்படுத்துகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது :
அன்னாசிப்பழத்தை சாப்பிடுவது சோர்வு மற்றும் மந்தமாக உணரும்போது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள மாங்கனீசு மற்றும் தியாமினுடன் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
அன்னாசிப் பழத்தில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அன்னாசிப்பழம் சாப்பிடுவது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கும்.
பைன் ஆப்பிள் சாப்பிடும் குழந்தைகள் சைனஸ் நோய்த் தொற்றிலிருந்து வேகமாக குணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழத்தின் இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுவதாக என்று நம்பப்படுகிறது.
கீல்வாதத்தின் அறிகுறிகளை எளிதாக்கும் :
மூட்டுவலி என்பது மூட்டுகளில் ஏற்படும் அழற்சி போன்ற காரணிகளால் முதுமையினல் தோன்றும் பொதுவான மூட்டு பிரச்சினையாகும்.
அன்னாசிப்பழத்தில் உள்ள முக்கிய நொதியான ப்ரோமெலின், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இது அழற்சி கீல்வாதம் உள்ளவர்களுக்கு வலி நிவாரணம் அளிக்கும் என்று சொல்லப் படுகிறது.
1960 களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், முடக்கு வாதத்தின் அறிகுறிகளைப் போக்க ப்ரோமெலின் பயன் படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
புரோமொலின் நொதி கீல்வாதம் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. எனினும் இது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி தகவல் இல்லை.
எலும்புகளை பலப் படுத்துகிறது :
அன்னாசிப்பழம் கால்சியம் மற்றும் மாங்கனீசு உட்பட பல ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாகும்.
இந்த ஊட்டச் சத்துக்கள் ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்க உதவும். இது முதுமையில் எலும்புகளின் அடர்த்தி குறைவதால் ஏற்படும் பொதுவான மூட்டு பிரச்சனையாகும்.
அன்னாசிப் பழம் தீமைகள் :
அன்னாசிப் பழம் தீமைகள் பின்வருமாறு
அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்சைம் சில மருந்துகளுடன் வேதியல் வினைக்கு உட்பட்டு ஆபத்தாக மாற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆன்டிகோகுலண்டுகள், ஆன்டி கான்வல்சண்டுகள், பார் பிட்யூரேட்டுகள், பென்சோடியா செபைன்கள், தூக்கமின்மை மருந்துகள் மற்றும் ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸன் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோர் அன்னாசிப் பழத்தை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
பழுக்காத அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி பழச்சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு நச்சுத் தன்மையளிக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும்.
அன்னாசிப்பழத்தில் அதிக வைட்டமின் சி உள்ளதால் அதிக அளவில் அன்னாசி பழத்தை உட்கொள்ளவது சிக்கலை ஏற்படுத்தும்.
சி வைட்டமின்களை அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே, அன்னாசிப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.