அகத்திக் கீரை நன்மைகள், பயன்கள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி விளக்கப் பட்டுள்ளது.
அகத்திக் கீரை :
அகத்தி கீரை ஆங்கிலத்தில் ஹம்மிங்பேர்ட் ட்ரீ லீவ்ஸ் (Humming Bird Tree Leaves) என்று அழைக்கப்படுகிறது.
அகத்தி கீரை தாவரத்தின் அறிவில் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா (Sesbania grandiflora) ஆகும்.
அகத்தி கீரையின் பூர்வீகம் இந்தியா அல்லது தென்கிழக்கு ஆசியா என்று நம்பப்படுகிறது.
அகத்தி கீரையில் ஏராளமான ஸ்டெரால்கள், சபோனின்கள் மற்றும் டானின்கள் உள்ளன.
அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர் வேத மருத்துவத்தில் பயன் படுத்தப் படுகிறது.
அகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள் :
அகத்தி கீரை துவர்ப்பு சுவை உடையவை. மேலும் அவை ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.
அகத்தி கீரை 20 கிராமில் 14.6 மில்லி கிராம் வைட்டமின் சி, 20 µg வைட்டமின் பி9, 0.17 மில்லி கிராம் இரும்பு, 0.2 மில்லி கிராம் செலினியம், 0.017 மில்லி கிராம் வைட்டமின் பி1 மற்றும் 0.016 மில்லி கிராம் வைட்டமின் பி2 ஆகியவை உள்ளன.
மேலும் 0.004 கிராம் டிரிப்டோபன், 0.011 கிராம் த்ரோயோனைன், 0.014 கிராம் ஐசோலூசின், 0.021 கிராம் லியூசின் மற்றும் 0.013 கிராம் லைசின் போன்ற பல அமினோ அமிலங்களும் உள்ளன.
அகத்திக் கீரை நன்மைகள் :
அகத்திக்கீரை என்பது கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் கீரை வகை என இன்றும் சில பேர் நினைத்து கொண்டுள்ளனர்.
ஆனால் அகத்தி கீரை உண்பதால் பல ஆச்சர்யமூட்டும் நன்மைகள் கிடைகின்றன. அவை
நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்துகிறது :
நோயெதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டிற்கு செலினியம் அவசியமாகும்.
மேலும் எச்.ஐ.வி உள்ளிட்ட வைரஸ்களின் வளர்ச்சியைக் குறைப்பதில் செலினியம் உதவலாம் என்று நம்பப் படுகிறது.
ஏற்கனவே எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், எய்ட்ஸ் நோயாக மாறும் செயல்பாட்டின் வேகத்தை குறைக்க செலினியம் பயன்படுவதாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
அகத்தி கீரை செலினியம் சத்தின் சிறந்த மூலமாகும்.
அல்சைமர் நோயைத் தடுக்கிறது :
அகத்தி கீரையில் வைட்டமின் பி1 உள்ளதால், இது அல்சைமர் நோயின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 மி.கி வைட்டமின் பி1 பரிந்துரைக்கப் படுகிறது.
எனவே உணவில் அகத்தி கீரையை சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி1 பெற முடியும்.
ஒற்றைத் தலைவலியைப் போக்குகிறது :
ரைபோஃப்ளேவின் குறை பாட்டினால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
தினமும் 200 மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் வரை வைட்டமின் பி2 எடுத்துக் கொண்டவர்களுக்கு கணிசமான அளவு ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி குறைந்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அகத்தி கீரையில் ரிபோபிளாவின் உள்ளதால் அதை உணவில் சேர்த்து வர ரிபோபிளாவின் குறைபாடு நீங்கும்.
சோர்வை போக்குகிறது :
அகத்தி கீரையில் கணிசமான அளவு பாஸ்பரஸ் இருப்பதால், தசை பலவீனம், உணர்வின்மை, சோர்வு போன்ற சிறிய உடல்நலப் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
உடலில் போதுமான அளவு பாஸ்பரஸ் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.
மேலும் பாஸ்பரஸ் குறைபாட்டினால் ஆண்மைக் குறைவு, ஆண்மை இழப்பு, விறைப்புத்தன்மை மற்றும் விந்தணு இயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
தோல் ஆரோக்கியம் :
வெளிரிய தோல் மற்றும் கருப்பு வளையங்கள் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகையின் சில அறிகுறிகளாகும்.
இரும்புச்சத்து குறை பாட்டினால் ஹீமோ குளோபின் அளவு குறைகிறது. இதன் விளைவாக ஆக்ஸிஜன் ஓட்டம் குறைக்கப் பட்டு தோலின் நிறத்தை பாதிக்கிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்வதன் மூலம் இக்குறை பாட்டை சரி செய்யலாம்.
அகத்தி கீரையில் கனிசமான அளவு இரும்புச்சத்து இருப்பதால் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் இரும்பு சத்து குறைபாடினை சரி செய்யலாம்.
அகத்திக் கீரை மருத்துவ குணங்கள் :
அகத்தி கீரை ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் அபிரியண்ட், டையூரிடிக், வாந்தி, எம்மெனாகோக், காய்ச்சல், மலமிளக்கி மற்றும் டானிக் பண்புகள் காரணமாக பல நோய்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.
இது உள் மருந்தாகவும் மற்றும் வெளிப்புற பூச்சாகவும் பயன்படுத்தப் படுகிறது.
உட்புறமாக, இருமல், சளி, கண்புரை, காய்ச்சல், பலவீனம், அஜீரணம், மஞ்சள் காமாலை, உடலில் அதிக வெப்பம் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.
வெளிப் புற தோல் பூச்சாக இது விஷ பூச்சிகள், விலங்குகள் கடி, மூட்டு வாதம், தோல் நோய்கள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
அகத்தி கீரை தீமைகள் :
உடல் நல பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வாக இருந்தாலும் அது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.
பல பயனுள்ள பண்புகள் இருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அதிக அளவில் உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
சித்த மருந்து உட்கொள்ளும் போது, அகத்தி கீரையை தவிர்க்குமாறு பரிந்துரைக்கப் படுகின்றனர். ஏனெனில் அது சித்த மருத்துவ மருந்துகளின் செயல்பாட்டைக் குறைக்கலாம்.
சிலருக்கு அரிப்பு உணர்வுடன் தோல் கோளாறுகளை ஏற்படுத்தும்.
மேலும் ஏற்கனவே மதுபானம் அருந்தியிருப்பவர்கள் அகத்தி கீரையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இதயம் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கும்.