ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் உள்ள அசர வைக்கும் சத்துக்கள், ஆளி விதை நன்மைகள் மற்றும் ஆளி விதை தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன.
ஆளி விதை :
ஆளி விதை பல நூற்றாண்டுகளுக்கு மேலாக அவற்றின் அடங்கியுள்ள ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பண்புகளுக்காக பயன் படுத்தப் படுகின்றன.
ஆளி விதையின் அறிவியல் பெயர் லினம் உசிட்டாடிசிமம் ஆகும். இதற்கு மிகவும் பயனுள்ளது என்று அர்த்தம்.
இது ஆங்கிலத்தில் பிளாக்ஸ் சீட்ஸ் (flax seeds), லின்சீட்ஸ் (linseeds) என்றும், ஹிந்தியில் அலசி, டிசி என்றும், தெலுங்கில் பிட்டு, அலசி, அடசி என்றும், மலையாளத்தில் சேறுச்சேனா வித்து என்றும் அழைக்கப்படுகிறது.
ஆளி விதை வகைகள் :
ஆளி விதையில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் ஆளி விதையில் 42 கிராம் கொழுப்பு, 18 கிராம் புரதம் 29 கிராம் கார்போ ஹைட்ரேட் மற்றும் 27 கிராம் நார் சத்து அடங்கியுள்ளது.
100 கிராம் ஆளி விதையில் வைட்டமின் சி 0.6 மில்லி கிராமும் வைட்டமின் இ 0.31 கிராமும், வைட்டமின் கே 4.3 மைக்ரோ கிராமும் உள்ளன.
மேலும் 5.73 மில்லி கிராம் இரும்பு சத்து, 255.00 மில்லி கிராம் கால்சியம் மற்றும் 813 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் கனிசமான அளவு புரதம், நார் சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கனிசாமான அளவில் உள்ளன.
ஆளி விதைகள் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), மற்றும் லிக்னன்கள் எனப்படும் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
ஆளி விதை நன்மைகள் :
ஆளி விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன. சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது. ஆளி விதை நன்மைகள் பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம் :
ஆளி விதைகளில் உள்ள ஆல்பா லினோலெனிக் அமிலம் இதயத்தின் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்தது தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து கட்டி வளர்ச்சியைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், 250,000 க்கும் அதிகமான நபர்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு 27 ஆய்வுகளில் ஆல்பா லினோலெனிக் அமிலம் (ALA) இதய நோய் அபாயத்தை 14% குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது :
ஆளி விதைகளை சாப்பிடுபவர்களுக்கு குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கான ஆய்வுகள் காட்டுகின்றன.
கனடாவில் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட பெண்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஆளி விதைகளை சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18% குறைவாக உள்ளது.
15 ஆண்களில் நடத்தப் பட்ட ஒரு சிறிய ஆய்வில், ஒரு நாளைக்கு 30 கிராம் ஆளி விதைகள் கொடுக்கப்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள உணவு வழக்கத்தை பின்பற்றும் போது புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது :
ஆளி விதைகளின் மற்றொரு ஆரோக்கிய நன்மை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் திறன் ஆகும்.
ஆளி விதைகளில் உள்ள நார் சத்துக்கள் பித்த உப்புகளுடன் பிணைக்கப்பட்டு பின்னர் உடலால் வெளியேற்றப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது :
எடை இழப்பை ஊக்குவிக்கிறது :
ஆளி விதையில் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே இது சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உட்கொள்ளலைக் குறைகிறது.சைவ பிரியர்கள் ஆளி விதையும் சிறிது சேர்த்து கொள்வது நல்லதாகும். னெனில் இது ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூல்மாகும்.
கருவுறுதலை ஊக்கு விக்கிறது :
ஆளிவிதை குறிப்பாக பெண்களுக்கு நன்மை பயக்கும். இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகப் படுத்துவதன் மூலம் பெண்களின் கருவுறுதலுக்கு உதவுகிறது.
ஆளி விதைகள் சாதாரண அண்டவிடுப்பை ஊக்குவிக்கவும் மற்றும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகின்றன. இது மாதவிடாய் நின்ற பெண்களை இருதய நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
ஜீரண ஆரோக்கியம் :
ஒரு தேக்கரண்டி ஆளி விதைகளில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் 8-12% ஆகும்.
ஆளிவிதையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார் சத்து இரண்டும் உள்ளன.
கரையக்கூடிய நார்சத்து மலத்தை இலக்கி எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
கரையாத நார் சத்து செரிமான அமைப்பைத் தூண்டி குடல் வழியாக கழிவுகளை நகர்த்த உதவுகிறது.
ஆளி விதை தீமைகள் :
ஆளி விதை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அரிதாகவோ அல்லது அதிக அளவில் உட்கொள்ளும் போதோ சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆளி விதை தீமைகள் சில பின்வருமாறு
மலச்சிக்கல் :
ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை அதிக அளவு சாப்பிடும் போது குடல் அடைப்பு மற்றும் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கின்றன.
மருந்துகளுடன் குறுக்கீடு :
ஆளி விதைகள் சில மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. குறிப்பாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும்போது ஆளி விதையை தவிர்ப்பது நல்லது .
ஒவ்வாமை :
ஆளிவிதை மற்றும் ஆளிவிதை எண்ணெயால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அரிப்பு, வீக்கம், சிவத்தல் அல்லது படை நோய் போன்ற உபாதைகளை உணர்ந்தால் ஆளி விதைகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
வாந்தி மற்றும் குமட்டல் ஒரு ஒவ்வாமைக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம்.
மேற்கண்ட சித்தா மருந்துகள் raw material ஆக கிடைக்குமா?அல்லது readymade ஆக கிடைக்குமா?
Price list அனுப்பிவையுங்கள்
Karuna Siddha Pharmacy,
Kavarai St.,Opp.M.R.Hospital, Rasipuram, Namakkal District, Tamilnadu 637408.