வீட்டில் உள்ள கரும்புள்ளி மறைய உதவும் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்கும் எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கரும்புள்ளி மறைய :
சிலருக்கு முகத்தில் வாய் மற்றும் நெற்றிப் பகுதிகளில் உள்ள சருமம் முகத்தில் உள்ள மற்ற பகுதியை விட கருமையாக காணப்படும்.
கரும்புள்ளி வர காரணம் உள்ளன. ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு மற்றும் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களின் விளைவால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு கீழ்காணும் வழி முறைகளை மேற்கொள்ளலாம்.
வழி முறை 1 :
- கரும்புள்ளி பரு தழும்புகள் மறைய ஒரு துண்டு இஞ்சி மற்றும் 10 புதினா இலைகள் சேர்த்து. உரலில் நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் அரை மூடி எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும்.
- இந்த கலவையை 2 அல்லது 3 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலக்கவும்.
- தேவைப்பட்டால் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து, தினசரி காலையில் தேநீருக்கு பதிலாகப் பருகவும்.
- இதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி, ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.
வழி முறை 2 :
- கரும்புள்ளிகள் விரைவில் மறைய 2 தேக்கரண்டி தயிர், 4 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இக்கலவையை கருமை படர்ந்த பகுதிகளில் பூசவும்.
- மேற்கூறிய 2 முறைகளையும், தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால், சருமத்தின் கருமை நீங்கி பொலிவு அதிகரிக்கும்
வழி முறை 3 :
- ரசாயனம் கலக்காத சந்தனத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்து கொள்ளவும்.
- இக்கலவையை கருமை படர்ந்திருக்கும் இடங்களில், நாளொன்றுக்கு 2 முறை வீதம் தடவ வேண்டும்
- தொடர்ந்து 2 வாரங்கள் தடவி வந்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும்.
வழி முறை 4 :
- கரும்புள்ளிகள் விரைவில் மறைய சாதம் வடித்த கஞ்சி 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, வெண்ணெய் 1/2 தேக்கரண்டி, இந்த மூன்றையும் கலந்து வைத்து கொள்ளவும்.
- இக்கலவையை கருமை பாதித்த இடங்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.
- வாரத்தில் 3 முறை, தொடர்ந்து 3 வாரங்கள் செய்தால் கருமை மறைந்து சருமம் மினுமினுக்கும்.
வழி முறை 5 :
- கருமை பாதித்தப் பகுதியில் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின்பு உருளைக் கிழங்கு சாறு 2 தேக்கரண்டி, தேன் 4 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 4 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 4 சொட்டு இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
- இக்கலவையை சருமத்தில் கருப்பு திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
- 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- இதன் மூலம் நெற்றி மற்றும் வாயைச் சுற்றிலும் உள்ள கருமை முற்றிலுமாக நீங்கும்.