முகத்தில் உள்ள கருமை நீங்கி சீரான சரும நிறம் பெற

0

தோல் மற்றும் சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் கருப்பு திட்டுக்கள் நீங்கி சாருமம் முழுவதும் சீரான நிறம் பெற எளிய வழிகள்…

சருமம் முழுவதும் சீரான நிறத்தைப் பெறுவதற் பலவித அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்துகிறோம்.

இவற்றுள் பெரும்பாலானவை, குறுகிய கால வெளிப்புற அழகை மட்டுமே வழங்கும் தன்மை கொண்டவையாகும்.

சீரான சரும நிறம்

தற்காலிக முகப்’ பொலிவை மட்டும் தராமல், நிரந்தரத் தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய, சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

ஆப்பிள், பீட்ரூட், கேரட் பானம்:

சரும நிறத்தை அதிகரிக்க 1 ஆப்பிள், 4 பீட்ரூட், 1 கேரட், சிறிய இஞ்சித் துண்டு போன்றவற்றை சேர்த்து அரைத்து, அதில் 5 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம். இந்த பானம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.

சருமம் பளபளப்பாக 4 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள், 1 தேக் கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.

சருமம் மென்மையாக 4 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தைப் பெற முடியும். சருமமும் மென்மையாகும்.

வறண்ட சருமம் பொலிவு பெற 3 தேக்கரண்டி அரிசி மாவு, 3 தேக்கரண்டி கேரட் சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்துக் கலந்து, குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பொலிவு பெரும்.

சீரான சரும நிறம் பெற மூலிகை பொடி:

வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக் கிழங்கு 50 கிராம், வேப்பிலைப் பொடி 25 கிராம், இவற்றை பொடி யாக அரைத்துக் கொள்ளவும்.

100 கிராம் பச்சைப் பயிறு, உலர்ந்த ராஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து, உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின்பு குளிக்க வேண்டும் இதன் மூலம் உடல் முழுவதும் சீரான நிறம் பெரும்.