கிவி பழம் நன்மைகள், தீமைகள், சத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்கள்

0

கிவி பழம் நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள், மருத்துவ பயன்கள் மற்றும் கிவி பழம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

கிவி பழம்  :

கிவி பழத்தின் அறிவியல் பெயர் ஆக்டினிடியா டெலிகியோசா ஆகும். இது சீனகூஸ் பெர்ரி என்றும் அழைக்கப் படுகிறது. இதன் தமிழ் பெயர் பசலிப் பழம் ஆகும்.

கிவி பழம் சீனா மற்றும் தைவான் நிலப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.

கிவி பழம்

உலக அளவில் கிவிப் பழ உற்பத்தியில் சீனா மற்றும் இத்தாலி முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம், சிக்கிம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவின் போன்ற மாநிலங்களில் வளர்க்கப் படுகிறது.

கிவி பழத்தின் சத்துக்கள்  :

கிவி பழத்தில் உள்ள சத்துக்கள்

100 கிராம் கிவி பழத்தில் 0.5 கிராம் கொழுப்பு, 1.1 கிராம் புரதம் மற்றும் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் 9 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார் சத்து உள்ளது.

வைட்டமின்கள்  :

கிவி பழத்தில் உள்ள சத்துக்கள் வைட்டமின்கள்

100 கிராம் கிவி பழத்தில் 4 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 92.7 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 1.46 மில்லி கிராம் வைட்டமின் இ உள்ளது.

தாதுச் சத்துக்கள் :

கிவி பழத்தில் உள்ள சத்துக்கள் தாதுக்கள்

100 கிராம் கிவி பழத்தில் 0.31 மில்லி கிராம் இரும்பு சத்து, 34.00 மில்லி கிராம் கால்சியம் சத்து மற்றும் 312 மில்லி கிராம் பொட்டாசியம் சத்து உள்ளது.

கிவிப் பழம் நன்மைகள் :

கிவிப் பழம் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

மேலும் ஆரோக்கியமான கரோட்டினாய்டுகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுவதுமாக பெற தினமும் குறைந்தது ஒரு கிவி பழத்தை சாப்பிட வேண்டும்.

கிவி ப்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளன.

செரிமானத்தை ஊக்கு விக்கிறது :

மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உடலை சீராக வைத்திருப்பதற்கும் நார்ச்சத்து அவசியம் ஆகும்.

பச்சை கிவி ப்ரூட்டில் குறிப்பாக ஆக்டினிடின் எனப்படும் இயற்கை செரிமான நொதி உள்ளது. இது புரதத்தை உடைத்து இரைப்பை மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகிறது :

கிவிப் பழத்தில் மற்ற சிட்ரஸ் வகை பழங்களை விட அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. உடலால் தண்ணிச்சையாக வைட்டமின் சி உருவாக்க முடியாது.

எனவே உடலை தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாக்க உணவு மூலம் இந்த ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைப்பது மிகவும் அவசியமாகும்.

தோல் ஆரோக்கியம் :

கிவிப் பழம் வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இது இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜ னேற்றியாகும்.

கிவிப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

எடை இழப்பு :

குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு ஊட்ட சத்து உள்ள கிவிப் பழம் எடை இழப்பிற்கும் உதவுகிறது.

கிவி பழத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர்ச் சத்து உள்ளது. இது உடலை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

முதுமை செயல்பாட்டை குறைக்கிறது :

கிவி ப்ரூட்டில்  அதிக அளவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டான வைட்டமின் சி உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இது இளமையோடு வைத்திப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் அல்லது தாமதப்படுத்தவும் உதவுகிறது.

தாய் மற்றும் சேய்க்கு நல்லது :

ஆரம்பகால வளர்ச்சியின் போது, குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க ஃபோலேட் முக்கியம். கிவிப் பழம் ஃபோலேட்டின் சிறந்த மூலமாகும்

கிவிப் பழம் தீமைகள்  :

கிவி பழம் பொதுவாக ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப் படுகிறது.

குறிப்பாக பழம் சாப்பிட்ட பிறகு வாய், உதடுகள், நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் கூச்ச உணர்வு, அரிப்பு  ஏற்பட்டால் ஒவ்வாமை உள்ளதாக அர்த்தம் ஆகும்.

மேலும்  சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி மருத்துவரிடம் அலர்ஜி பரிசோதனை செய்து உறுதிப்படுத்தவும்.

குழந்தைகளுக்கு குறைந்தது 8 மாதங்கள் வரை கிவி கொடுக்க கூடாது.