முந்திரிப் பருப்பு நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

0

முந்திரிப் பருப்பு நன்மைகள், தீமைகள் மற்றும் முந்திரிப் பருப்பில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

முந்திரிப் பருப்பு :

முந்திரிப் பருப்புகள் முந்திரி ஆப்பிள் எனப்படும் ஒரு வகை பழங்களின் விதைகள் ஆகும்.

முந்திரி நன்மைகள்

முந்திரிப்பருப்பில் தாமிரம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் ஆகிய தாது சத்துக்கள் நிறைந்துள்ளன.

முந்திரி பருப்பின் நன்மைகளில் சில  இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைத்தல் போன்றவை ஆகும்.

முந்திரிப் பருப்பில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் முந்திரிப் பருப்பில் உள்ள சத்துக்கள் பின் வருமாறு…

வைட்டமின்கள் :

தாதுக்கள் :

முந்திரிப் பருப்பு நன்மைகள் :

முந்திரிப் பருப்பு பயன்கள் மற்றும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது :

முந்திரி பருப்பில் பொட்டசியம், மக்னீசியம் போன்ற தாதுக்களும், எல்-அர்ஜினைன் போன்ற அமினோ அமிலமும், நிறைவுறா கொழுப்புகளும் நிறைந்துள்ளன.

இவை இரத்த நாளங்களை விரிவடைய செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது :

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

இது நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்க ஊட்டச்சத்து ஆகும்.

இருப்பினும் முந்திரியில் அதிக கலோரிகள் இருப்பதால், தினமும் சாப்பிடுபவர்கள் ஒரு நாளைக்கு 3-4 முந்திரி மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது :

முந்திரி பருப்பில் வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அடிப்படை செல் செயல் முறைகளுக்கு இன்றியமை யாததாகும்.

முந்திரியை தொடர்ந்து உட்கொள்வதால், தேவையான அளவு துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது :

முந்திரி பருப்பில் தாமிரம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது மேலும் அவற்றை வலுப்படுத்துகிறது.

கொலாஜனை ஒருங்கிணைப்பதன் மூலம் மூட்டுகளை நெகிழ்வாக வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.

மூளை ஆரோக்கியம் :

மூளை என்பது உடலின் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு ஆகும். மேலும் மூளை சுறுசுறுப்பாக இருக்க உணவின் மூலம் பெறப்படும் கொழுப்பு அமிலங்கள் தேவை.

முந்திரி பருப்பில் மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அவை மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் நினைவாற்றலை அதிகப் படுத்தவும் உதவுகின்றன.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த, இரவில் ஊறவைத்த முந்திரியை சாப்பிடலாம்.

இதய ஆரோக்கியம் :

பொதுவாக, முந்திரி பருப்பு, அக்ரூட் அல்லது வால்நட், பாதாம், பிஸ்தா, மற்றும் பைன் நட்ஸ் ஆகியவை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.

ஏனெனில் அவற்றில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன.

அனைத்தையும் கலவையாக சாப்பிடுவது அல்லது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வகை கொட்டைகளை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். அவை இரத்த கொழுப்பு அளவுகளை மேம்படுத்துகின்றன.

அனீமியாவைத் தடுக்கிறது :

முந்திரி பருப்பில் இரும்பு மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை இரத்த சிவப்பணுக்களின் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறனை அதிகரிக்கிறது.

இது உடலின் அனைத்து பாகங்களில் உள்ள செல்களும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறது மேலும் உடல் சோர்வாக இருப்பதைத் தடுக்கிறது.

கார்ப்ஸ் கட்டுப்பாடு :

குறைந்த கார்ப்ஸ் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு முந்திரி பருப்பு ஒரு சிறந்த தேர்வாகும்.

100 கிராம் முந்திரியில் 30 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.

இளநரையைத் தடுக்கிறது :

தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகியவை இளநரையைத் தடுக்கும் முக்கிய ஊட்ட சத்து ஆகும். முந்திரியில் தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.

மேலும் முந்திரியில் உள்ள வைட்டமின் B3 உச்சந்தலையில் சரியான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது :

முந்திரியில் உள்ள தாமிரம் தோல் மற்றும் எலும்புகளில் கொலாஜன் உருவாவதற்கு உதவுகிறது.

கொலாஜன் சருமத்திற்கு வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் இறந்த சசெல்களை புதுப்பிக்க உதவுகிறது.

முந்திரி பருப்பு தீமைகள் :

முந்திரி பருப்பு பல இன்றியமையாத ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவற்றால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. முந்திரிப் பருப்பு தீமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பைட்டேட்கள்:

முந்திரி பருப்பில் உள்ள பைடேட்டடுகள் அவற்றில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலால் உறிஞ்சப் படுவதை குறைக்கின்றன.

இருப்பினும், முந்திரி பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவது அதிலுள்ள பைட்டேட்டின் அளவைக் குறைக்கும்.

ஒவ்வாமை :

பொதுவாக பருப்பு மற்றும் கொட்டை வகை உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு முந்திரி பருப்பு உட்கொள்வதாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.

சிறுநீரகக் கற்கள் :

முந்திரியில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளதால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும், சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.