ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும் உலர் திராட்சை

0

ஹீமோ குளோபின் :

ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறி, ஹீமோகுளோபின் குறைந்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்க எளிய வழி பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

ஹீமோ குளோபின் குறைபாடு அறிகுறி :

உடலில் அதிகமான அசதி, எந்த வேலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று, தள்ளிப்போடும் மனநிலை உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

எப்பொழுது பார்த்தாலும் கலைப்பு தூங்க வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராது.

தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் உடலில் ஏற்படும் வலி, அதனால் ஏற்படும் வசதி, எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம், இந்த நிலையில் இருந்தால், ஹீமோகுளோபின்  குறைவாக உள்ளது என அறியலாம்.

ஆங்கில மருத்துவரிடம் சென்று, இதற்கு ஏதாவது மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடலாம் என்று மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்ய சொல்ல அவர் கூறிய பரிசோதனைகள் அனைத்தும் செய்து அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால் உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.

நான் உங்களுக்கு மாத்திரை இருந்து எழுதித் தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள். சரியாகிவிடும் என்பார்.

அவர் கொடுக்கும் அதிக விலையில் உள்ள மாத்திரை களையும் மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து ஆறு மாதம் முழுமையாக சாப்பிட்டாலும்  குணம் பெற முடியாது.

ஹீமோ குளோபின் குறைவு காரணம் :

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. இதனால் உடல் உடலின் பாகங்களை இயக்க முடிவதில்லை. உடல் களைப் படைகின்றது.

உடல் அதற்கு தேவையான சத்துக்களை நம் உட்கொள்ளும் ஆகாரத்தில் இருந்து பிரித்தெடுத்து கொள்கின்றது.

எவ்வளவு  சத்துக்கள் தேவையோ அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலில் இருந்து வெளியேற்றி விடுகின்றது.

அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும் அத்தனை அளவு சத்து உடல் ஏற்றுக் கொள்வதில்லை. மீதியைக் கழிவுப் பொருட்களாக வெளியேற்றி விடுகின்றது.

இரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின்  பதினான்கு முதல் பதினெட்டு கிராம் அளவிலும் பெண்களுக்கு பனிரெண்டு முதல் பதினாறு கிராம் அளவிலும் இருக்க வேண்டும்.

எட்டு கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது இரத்த சோகை என்ற நோயும் மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது இரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும் உடலில் இரத்த ஓட்டத்தின் போது நுரையீரலுக்கு சென்று நாம் மூச்சு காற்றை உள்ளே இழுக்கும் பொழுது அந்த மூச்சுக்காற்றில் உள்ள ஆக்சிஜனை இரத்தம் ஏற்ற உற்சாகம் பெறுகின்றது.

ஹீமோ குளோபின் அதிகரிக்க :

இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும் உணவு பட்டியலில் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது உலர்ந்த திராட்சை ஆகும். நாட்டு மருந்து கடைகளில், கருப்பு உலர்ந்த திராட்சைப் பழம் கிடைக்கும்.

அவற்றில் வாங்கி எழுபத்திரண்டு நல்ல கருப்பு உலர்ந்த திராட்சைப் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில், தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு முதல் நாள் மூன்று பழங்களை மாலை ஆறு மணிக்கு மேல் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விடுங்கள்.

காலையில் ஆறு மணிக்கு மேல் பல்துலக்கிவிட்டு காலையில் ஒரு பழத்தை தின்று சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் பனிரெண்டு மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு சிறிது பழம் ஊறிய நீரைக் குடியுங்கள்.

மாலை ஆறு மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு உள்ள நீரை குடியுங்கள்.

காலை ஆறு மணி, மதியம் பனிரெண்டு மணி, மாலை ஆறு மணி. முதலாவது நாள் மூன்று வேலையும் ஒரு ஒரு பழங்கள், மொத்தம் மூன்று வேலையும் மூன்று பழங்கள்.

இரண்டாவது நாள் மூன்று வேலையும் இரண்டு பழங்கள் வீதம் மொத்தம் ஆறு பழங்கள் சாப்பிட்டு, பழம் ஊரிய நீரை குடிக்க வேண்டும்.

மூன்றாவது நாள் மூன்று வேலையும் மூன்று பழங்கள் மொத்தம் ஒன்பது பழங்கள் சாப்பிட்டு பழம் ஊரிய நீரை குடிக்க வேண்டும்.

நான்காவது நாள் மூன்று வேலையும் நான்கு பழம் வீதன் மொத்தம் பனிரெண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.

ஐந்தாவது நாள் மூன்று வேளையும் நான்கு பழங்கள் வீதம் மொத்தம் பனிரெண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.

ஆறாவது நாள் மூன்று வேலையும் நான்கு பழங்கள் மொத்தம் பனிரெண்டு பழங்கள் உண்ண வேண்டும்.

ஏழாவது நாள் மூன்று வேலையும் மூன்று பழங்கள் மொத்தம் ஒன்பது பழங்கள். எட்டாவது நாள் மூன்று வேளையும் இரண்டு பழங்கள், மொத்தம் ஆறு பழங்கள். ஒன்பதாவது நாள் மூன்று வேளையும் ஒரு பழங்கள், மொத்தம் மூணு பழங்கள்.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு ரத்தத்தில் ஹீமோ குளோபினை  பரிசோதித்துப் பாருங்கள். நல்ல முன்னேற்றம் தெரியும்.

சற்று குறைவாக இருந்தால், மறுபடியும் ஒரு தடவை மேல் குறிப்பிட்ட செயல்முறையை செய்து பாருங்கள்.

இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகு ளோபின்  திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்.

ஹீமோகுளோபின்க உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடல் உற்சாகம் பெருகும், பொழிவோடும், வனப்போடும், உடல் மிளிரும்.

கருப்பு திராட்சை ஊறிய நீர் இரத்தத்தில் கலந்து ஹீமோ குளோபின் உருவாக காரணமாக இருக்கும்.

செலவு அதிகமில்லாத இந்த வழியால், இரத்தத்தில் ஹீமோ குளோபின் களை அதிகரிக்கலாம்