முள்ளங்கி நன்மைகள், தீமைகள், சத்துக்கள் மற்றும் பயன்கள்

0

முள்ளங்கி  நன்மைகள், பயன்கள், தீமைகள் மற்றும் முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன…

முள்ளங்கி :

முள்ளங்கி கிழங்கு வகை காய்கறிகளில் ஒன்று. முள்ளங்கி விலை மலிவாக கிடைக்கக்கூடிய காய் என்றாலும் கூட மக்கள் பலரும் வாங்க விரும்புவது இல்லை.

முள்ளங்கி நன்மைகள்

இதன் பயனை அறிந்து, மருத்துவர்களே முள்ளங்கி அதிகமா சேர்த்து சாப்பிட, பரிந்துரைப்பதும் உண்டு. அதற்கு முள்ளங்கியில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம்.

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் E, வைட்டமின் பி6, வைட்டமின் K, நார்ச்சத்து, பொட்டாசியம்பாஸ்பரஸ் , மெக்னீசியம்  போன்ற ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்  அடங்கியது முள்ளங்கி.

முள்ளங்கி நன்மைகள் :

தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் முள்ளங்கி நன்மைகள் சில பட்டியலிடப் பட்டுள்ளன.

சிறுநீரக நோய்களை குணமாக்கும்  :

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் அவதிப் படுபவர்கள்  முள்ளங்கியை கூட்டாகவோ பொரியலாகவோ அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்கள் முதல், சிறுநீர் தாரை வரை உள்ள அனைத்து பிரச்சனைகளும், எளிதில் குணமாக்கும்.

குறிப்பாக சிறுநீரக கற்கள் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில் முள்ளங்கி ஜூஸ் சாக அருந்தி வர கற்கள் கரையும். மற்றும் ரத்தத்தில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தவும், மிகவும் உதவியாக இருக்கிறது முள்ளங்கி.

அனீமியாவை தடுக்கும் :

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்க குறைபாடு காரணமாக, உண்டாகக்கூடிய அனீமியாவை குணமாக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு.

முள்ளங்கியிலே இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச் சத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்கிறது.

மேலும் சிவப் பணுக்கள் சேதமடைவது குறைக்க  கூடியது இந்த முள்ளங்கி. அனீமியா பிரச்சனைனால் அவதிப் படுகிறவர்கள், முள்ளங்கியை உணவில் சேர்த்து வர மிகவும் நல்லது.

இருதயத்தை பலப் படுத்தும்  :

முள்ளங்கியில் இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஆண்டோ சைனின் சொல்லக்கூடிய ஆன்டி இனபிலம்மாட்டோரி பண்புகள்   அதிக அளவில் உள்ளன.

இருதய சுவர்களை பலமாக்கி இருதயம் சீராக இயங்க உதவி செய்யும். அதோடு இருதய அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமலும், தடுக்கும் ஆற்றல் இந்த முள்ளங்கிக்கு உண்டு.

கல்லீரல் சுத்தப்படுத்தும்  :

கல்லீரலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்தும் ஆற்றல் இந்த முள்ளங்கிக்கு உண்டு.

கல்லீரலில் உற்பத்தியாகக்கூடிய பிலிரூபின் உற்பத்தியை கட்டுப்படுத்தி கல்லீரலை பாதுகாப்பதோடு வைரஸ் கிருமி பாதிப்பதையும் தடுக்கக்கூடியது.

முள்ளங்கி முள்ளங்கியில் இருந்து கிடைக்கக்கூடிய முள்ளங்கி கீரையை நாற்பது நாட்கள் தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வர கிருமிகளால் உண்டாகக்கூடிய மஞ்சள் காமாலை குணமாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  :

முள்ளங்கியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான வைட்டமின் சி  அதிக அளவில்  இருக்கிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடிய பிரீ ரேடிகள்சை உடலில் இருந்து வெளியேற்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

இதன் மூலமாக வைரஸ் மற்றும் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியது இந்த முள்ளங்கி.

செரிமானத்தை சீராக்கும்  :

செரிமான கோளாறுகளை குணமாக்கும். செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அவதிப் படுறவர்கள் முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர அதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து, செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு மலச்சிக்க பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்  :

முள்ளங்கியில் ரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான பொட்டாசியம் சத்து அதிக அளவில் இருக்கிறது.

இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக உதவி செய்யக்கூடியது முள்ளங்கி.

புற்றுநோய் வராம தடுக்கும்  :

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் குளுக்கோஸ் மற்றும் சல்பர் போன்ற சத்துக்கள் முள்ளங்கியில் அதிக அளவில் இருக்கிறது.

இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப் படுத்துவதோடு, புற்றுநோய்க்கான காரணியை அழிக்கும். புற்று நோய்க்கான அபாயத்தையும், குறைக்கக்கூடியது அந்த முள்ளங்கி.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்  :

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த ஒரு காய்கறி முள்ளங்கி. முள்ளங்கியில் ஆன்டி டயாபட்டீஸ்  ப்ரொபேர்ட்டிஸ் அதிக  அளவில்  இருக்கிறது.

இது நேரடியாக இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மற்றும் இதில் இருக்கக்கூடிய அடிப்போசானேட் என்ன ஹார்மோன் அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

முள்ளங்கி தீமைகள் :

அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் முள்ளங்கி பக்க விளைவுகள் மற்றும் தீமைகள் 

முள்ளங்கி மிதமான அளவில் உட்கொள்ளும்போது பெரும்பாலான நேரங்களில் பாதுகாப்பானது. ஆனால் அதிக அளவில் சாப்பிடும் போது செரிமான மண்டலத்தை பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

மிகவும் அரிதாக சிலருக்கு முள்ளங்கி சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையைவர்கள் குறைந்த அளவு முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மேலும் இந்த காய்கறியை அதிக அளவில் உண்ணும் போது உடலில் இருந்து அதிகப்படியான நீர்ச் சத்தை இழக்க வழிவகுக்கும்.

மேலும் அதிகப்படியான முள்ளங்கி உட்கொள்வது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முள்ளங்கி சாப்பிடும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.