மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள், சத்துக்கள்

0

மாப்பிள்ளை சம்பா அரிசி :

மாப்பிள்ளை சம்பா அரிசி
மாப்பிள்ளை சம்பா அரிசி என்பது சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகை தாணிமாகும். இவை தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவு பயிரிடப் படுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள் :

மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப் பட்டுள்ளன

ஹீமோகுளோபின் அதிகரிக்க :

மாப்பிள்ளை சம்பா அரிசி சிகப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் அதிக அளவில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் வைட்டமின்கள் ஆகும்.

இந்த இரண்டு சத்துக்களும் சேர்ந்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது :

மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் கனிசமான அளவு மக்னேசியம் உள்ளது. இது உடலுக்கு ஆற்றலை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இளமையோடு வைத்திருக்க :

மேலும் மாப்பிள்ளைச் சம்பா அரிசி  ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். இது உடலை ஃப்ரீ-ரேடிக்கல் களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவுகிறது.

காயங்கள் ஆற்ற உதவுகிறது :

மாப்பிள்ளைச் சம்பா அரிசி துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். இது காயம் குணமாகும் நிகழ்வை துரிதப்படுத்த உதவுகிறது.

நரம்பு மண்டல ஆரோக்கியம் :

மாப்பிள்ளைசம்பா அரிசியில் வைட்டமின் பி6, மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது.

நாளங்களை வலுப்படுத்த :

இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகின்றன மற்றும் அனைத்து இரத்த நாளங்களையும் வலுப்படுத்துகின்றன.

போலேட்டின் சிறந்த மூலமாகும் :

மாப்பிள்ளைசம்பா அரிசியில் கனிசமான அளவு வைட்டமின் பி6 உள்ளது. இது செரோடோனின், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ செல்களை உருவாக அவசியம் ஆகும்.

செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது :

மாப்பிள்ளைசாம்பா அரிசியில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை அழற்சி போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தடுக்கிறது.

ஆஸ்துமா வராமல் தடுக்கிறது :

மாப்பிள்ளை சாம்பா அரிசியை தொடர்ந்து உட்கொள்வது ஆஸ்துமா பிரச்சினையைத் தவிர்க்கவும், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மற்றும் வலுவான சிறுநீரகங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.