மூங்கில் அரிசி நன்மைகள் மற்றும் தீமைகள்

0

மூங்கில் அரிசி என்றால் என்ன மற்றும் அதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள், தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

மூங்கில் அரிசி :

மூங்கில் அரிசி, முலயாரி என்றும் அழைக்கப்படுகிறது, இது மிகவும் ஆரோக்கியமான ஆனால் அனைவராலும் அரியப் படாத ஒரு வகை அரிசி ஆகும். மூங்கில் தாவரம் அதன் ஆயுட்காலம் நிறைவடையும் பொழுது ​​புதிய தாவரங்கள் வளர விதைகளை உற்பத்தி செய்கிறது.

மூங்கில் அரிசி

அவ்வாறு இருக்கும் மூங்கில் மரத்தில் தோன்றும் விதைகள் மூங்கில் அரிசி ஆகும். இது பச்சை நிறத்தில் அரசி போன்று வடிவில் காணப்படுவதால் இது மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இவை பின்னர் அரிசி போன்ற மற்ற தானியங்களைப் போலவே உலர்த்தப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.

மூங்கில் அரிசி மற்ற அரிசி வகைகளை விட சற்று வித்தியாசமானது. அதன் சுவை கோதுமையைப் ஒத்து காணப்படும். ஆனால் சிறிது இனிப்பு சுவையுடனும் லேசான காரமான வாசனையுடனும் காணப்படும். மூங்கில் அரிசி பசையம் இல்லாததாகும். இவை  சமைக்கும் போது லேசாக ஓட்டும் தன்மையுடன் காணப்படும். பொதுவாக மூங்கில் அரிசி இந்தியாவில் வாழும் பழங்குடி இன மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக விளங்குகிறது.

மூங்கில் அரிசி நன்மைகள் :

கொழுப்பை குறைக்கிறது :

மூங்கில் அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. பைட்டோஸ்டெரால் என்பது மனித உடலில் உள்ள கொழுப்பைப் போன்ற தாவரத்தில் காணப்படும் ஒரு வகை ஸ்டெரால் ஆகும். பைட்டோஸ்டெரால்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்கின்றன. மேலும், மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்தும் கொழுப்பைக் குறைப்பதில் உதவுகிறது.

இரத்த அழுத்தம் : 

ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டும் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணம் ஆகும். மூங்கில் அரிசியின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக ஹார்மோன்கள் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் அதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது தமனிகளின் தடிப்பைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம் : 

நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமான ஆரோக்கியத்திற்கும் அவசிமான ஒன்றாகும். இது குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மூங்கில் அரிசியில் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் செரிமான ஆரோக்கித்திற்கு மிகவும் பயனுள்ளதாகும்.

மனநிலை ஆரோக்கியம் : 

மூங்கில் அரிசி இரண்டு முக்கிய நரம்பியக் கடத்திகளான செரோடோனின் மற்றும் டோபமைன்களை வெளியிட உதவுகிறது, இது மனநிலையை சீராக்கவும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

பாலியல் ஆரோக்கியம் :

பெண் எலிகளுக்கு மூங்கில் அரிசியை உணவாகக் கொடுத்தால், அவை பாலுறவில் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மூங்கில் அரிசி  மனிதர்களிலும் கருவுறுதலையும் மேம்படுத்த வாய்ப்புள்ளதாக நம்பப் படுகிறது. மூங்கில் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மூங்கில் எண்ணெய் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமான நாளமில்லா சுரப்பி மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக் உதவுவதாக நம்பப் படுகிறது.

பல் ஆரோக்கியம் :

மூங்கில் அரிசியில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இது பாக்டீரியாவால் ஏற்படும் சிதைவு, பற்குழி ஆகியவற்றிலிருந்து பற்களைப் பாதுகாக்கவும், பல் சொத்தை அல்லது பல் துவாரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

இருமலை போக்குகிறது :

இருமலுக்குப் பயன்படும்  மூங்கில் அரிசியில் கனிசமான அளவு பாஸ்பரஸ் உள்ளது. இது இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற சுவாச அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. பாஸ்பரஸ் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப் படுகிறது மற்றும் நாள்பட்ட ஆஸ்துமாவின் கடுமையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

வைட்டமின்கள் நிறைந்தது :

மூங்கில் அரிசியில் அனைத்து வகை அத்தியாவிஷய பி வைட்டமின்களும் உள்ளன. குறிப்பாக பைரிடாக்சின் எனப்படும் வைட்டமின் பி6  நிரம்பியுள்ளது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, நரம்புகளின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு வைட்டமின் பி6 அவசியம் ஆகும்.

புரதச்சத்து நிறைந்தது :

அமினோ அமிலங்கள் புரதங்களின் கட்டுமானத் தொகுதிகளாகும். மூங்கில் அரிசியில் அமினோ அமிலங்கள் இருப்பதால் பேட்டி கல்லீரல், முறையற்ற வளர்ச்சி மற்றும் தோல், முடி மற்றும் நக நோய்கள் மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

மூங்கில் அரிசி தீமைகள் :

மூங்கில் அரிசியின் ஆரோக்கிய நன்மைள் பற்றி போதுமான ஆராய்ச்சி தகவல்கள் இல்லை. இது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், பின்வரும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மூங்கில் அரிசியை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

மூங்கில் அரிசியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து போதுமான ஆதாரம் இல்லாததால்,கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மூங்கில் அரிசியை தவிர்க்க வேண்டும் இல்லை என்றால் உணவில் சேர்த்துக்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஹைப்போ தைராய்டிசம், கோயிட்டர் அல்லது தைராய்டு கட்டி போன்ற தைராய்டு கோளாறுகள் உள்ள நோயாளிகள் மூங்கில் அரிசி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிகப்படியான தைராய்டுக்கான மருந்துகளை உட்கொள்பவர்களும் மூங்கில் அரிசியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது மருந்துகளுடன் மருந்துகளுடன் வினை புரியலாம் மற்றும் உடலில் தைராய்டு அளவைக் குறைக்கலாம்.