பீட்ரூட் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையுமா, எவ்வாறு குடிக்க வேண்டும், அதன் நன்மை மற்றும் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைய பீட்ரூட் சாறு :
பீட்ரூட் மற்றும் பீட்ரூட் சாறு நேரடியாக உடல் எடை குறைக்குமா என்பது பற்றி போதுமான உறுதி செய்யப் பட்ட ஆய்வுத் தகவல்கள் இல்லை.
இருப்பினும், பீட்ரூட்டின் பல பண்புகள் உடல் எடை குறைபிற்கான சாதகமாக உள்ளன.
பீட்ரூட் சாறு குடித்தால் உடல் எடை குறையுமா?
கீழ் காணும் பண்புகள் மூலம் பீட்ரூட் உடல் எடை குறைய உதவுகிறது.
கலோரிகள் குறைவு
உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். 100 கிராம் பீட்ரூட்டில் 87.6 கிராம் நீர், 0.17 கிராம் கொழுப்பு மற்றும் வெறும் 43 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே பீட்ரூட் உண்ணும் போது குறைந்த கலோரிகள் உடலில் சேர்க்கிறது.
நார்ச்சத்து நிறைந்தது
மற்ற காய்கறிகளைப் போல் பீட்ரூட்டிலும் கனிசமான அளவு நார்ச் சத்து உள்ளது. நார்ச் சத்து எடை இழப்புக்கு அவசியம் ஆகும். நார்ச்சத்து செரிமானத்தை தாமதப் படுத்தி பசியைக் குறைக்கிறது, இதன் நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக உணர வைத்து அதிக கலோரிகள் உட்கொள்ளப் படுவதைக் குறைக்கிறது.
ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளது :
பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் அழற்சி எதிர் பண்புகளைக் கொண்ட பீட்டாலைன்கள் எனப்படும் தாவர உயிர் சேர்மங்கள் உள்ளன. எனவே ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் பருமனானவர்களுக்கு பீட்ரூட் நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டியது. (ஆதாரம்)
சத்துக்கள் நிறைந்தது
பீட்ரூட்டில் ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம் மற்றும் உடல் எடை குறைப்பிலும் பங்களிக்கின்றன.
மக்னீசியம் நிறைந்துள்ளது :
பீட்ரூட்டில் உள்ள மெக்னீசியம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. மேலும் பீட்ஸில் உள்ள லியூசின் என்ற அமினோ அமிலம், உண்ணும் உணவின் மூலம் புரதம் கிடைக்கச் செய்து தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துகிறது :
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துகிறது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்கவும் எடை குறைக்கவும் உதவும். (ஆதாரம் 1) (ஆதாரம் 2)
பீட்ரூட் ஜுஸ் குடிப்பது மட்டும் உடல் எடையை குறைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் எடை குறைப்பு முயற்சியில் பீட்ரூட் ஜுஸ் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டுடன் சில வழிகளில் பங்களிக்கிறது.
உடல் எடை குறைய பீட்ரூட் ஜுஸ் எவ்வாறு குடிக்க வேண்டும் :
பீட்ரூட் ஜூஸ் மிக்ஸியில் அரைக்கும் போது அதிலுள்ள நார்ச் சத்து அளவு குறைவதாக சொல்லப்படுகிறது.
பீட்ரூட்டுடன் ஆப்பிள் அல்லது கேரட் அல்லது தக்காளியுடன் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது உடல் எடை குறைய உதவும்.
பீட்ரூட் ஜுஸ் தீமைகள் :
பொதுவாக, பீட்ரூட்டிலும் அதிக சர்க்கரை உள்ளதால் சில தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
பீட்ரூட் அதிகமாக உட்கொள்வது பீட்டூரியா என்று சொல்லப்படும் சிறுநீர் இளஞ்சிவப்பாக வெளியேறும் நிலை ஏற்படலாம்.
தமிழ் ஸ்கேன் கருத்து :
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மேலும், சர்க்கரைகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.