கண்டங்கத்தரி அல்லது கண்டங்கத்திரி மருத்துவ பயன்கள் மற்றும் கண்டங்கத்திரி தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கண்டங்கத்திரி
கண்டங்கத்திரி என்பது முட்கள் நிறைந்த, வறண்ட நிலப்பரப்பில் வளரும் மூலிகை வகைத் தாவர வகையாகும். இது இந்தியா முழுவத்திலும் வளர்ந்து காணப்படுகிறது.
இது ஆங்கிலத்தில் காட்டு முட்டை என பொருள் பட வைல்ட் எக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் சோலனம் சாந்தோகார்பம் ஆகும். மேலும் இது சோலனேசி குடும்பத்தைச் சார்ந்தது.
கண்டங்கத்திரி வேர்களில் முக்கிய பைட்டோகான்ஸ்டிட்யண்டுகள் காணப்படுகின்றன. மேலும் கண்டங்கத்தரியின் பிற பகுதிகளில் சோலசோனைன், கூமரின், ஸ்கோபோலின், ஸ்கோபோலின், எஸ்குலின் போன்ற கலவைகள் உள்ளன.
கண்டங்கத்திரி மருத்துவ பயன்கள் :
கண்டங்கத்தரியின் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, வலி நிவாரணம் போன்ற பண்புகளுக்கு காரணம் அதிலுள்ள பைட்டோ காண்ட்ரியன்ட்கள் ஆகும். இதன் வேர் சிறந்த ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இதன் பழச்சாறு ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் டையூரிடிக் பண்புகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது.
கண்டங்கத்திரி மருத்துவ பயன்கள் பின்வருமாறு
நச்சுக்களை நீக்குகிறது :
கண்டங்கத்தரியின் இயற்கையான டையூரிடிக் பண்புகள் காரணமாக உடலிலிருந்து சிறுநீர் பிரிவதை அதிகரிக்கிறது.
இதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
மேலும் உடலில் உள்ள உப்பை வெளியேற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும், இதன் ஆண்டிபயாடிக் பண்புகள் சிறுநீர்ப் பாதையில் காணாப்படும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை சரி செய்து சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், அதிகப்படியான சிறுநீர் கழித்தல், முதுகுவலி, வாந்தி மற்றும் பலவீனம் போன்ற கோளாறுகளைப் போக்குகிறது.
கல்லீரல் ஆரோக்கியம் :
கந்தகத்தரிக்காய் சாற்றில் உள்ள ஹெபடோப்ரோடெக்டிவ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தைத் தடுப்பதன் மூலம் செல் சேதத்தைக் குறைக்கிறது.
புதிய செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும், கல்லீரலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.
செரிமானத்தை ஊக்கு விக்கிறது
கண்டங்கத்தரிக்காய் சாறு அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
மேலும் வயிற்றில் அமிலத் தன்மையை நடுநிலையாக்கி அதன் உற்பத்தியைக் குறைக்கும் ஒரு ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது.
மேலும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், அடிவயிற்றில் வலி, வாய்வு போன்ற அமிலத்தன்மை தொடர்பான அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பல்வலி :
பல்வலிக்கு கண்டங்கத்திரி சிறந்த தீர்வாக உள்ளது. இது ஒரு ஆண்டிபயாடிக் ஆக செயல்பட்டு பல்களில் பிளேக்கை உருவாக்கும் பாக்டீரியாவைக் அளிக்கிறது.
பிளேக் ஈறுகளில் நச்சுகளை உருவாக்கி ஈறுகள் வீக்கம், வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
கண்டங்கத்தரிச் சாறு ஈறுகள் மற்றும் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மான்றுகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது :
கண்டங்கத்தரிகாய் முடி உதிர்வதைத் தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கந்தகத்தரிக்காய் சாற்றை தொடர்ந்து மயிர்க்கால்களில் தடவுவது முடியின் வேர்களை பலப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கிறது.
இருமல் மற்றும் சளி
பொதுவாக சுவாசக் குழாயில் சளி குவிவதால் இருமல் ஏற்படுகிறது. கண்டங்கத்தரி நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற உதவுகிறது.
கால் தேக்கரண்டி கண்டங்கத்தரிக்காய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் அல்லது தேன் கலந்து உணவுக்கு பின்சாப்பிட்டு வர சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ஆஸ்துமா
கண்டங்கத்தரி ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறலுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. கண்டங்கத்தரி நுரையீரலில் இருந்து அதிகப்படியான சளியை நீக்குவதன் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பொதுவாக செரிமானத்தின் முழுமையற்ற செயல்முறையின் காரணமாக அஜீரணம் தோன்றுகிறது. கண்டங்ககத்தரி பொடி ஜீரணத்தை மேம்படுத்தி உணவு எளிதில் செரிமானம் ஆக உதவுகிறது.
கண்டங்கத்திரி தீமைகள் :
கண்டங்கத்திரி பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இருப்பினும், ஏதேனும் உடல் நலக் கோளாறு உடையவர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு இந்த மூலிகை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான அறிவியல் தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.
மேலும், நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் கண்டன்கத்தரி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவர் ஆலோசனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.