வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையுமா அல்லது வெந்நீர் உடல் எடை குறைப்பதில் உதவும் என்பது கட்டுக்கதையா அல்லது அதில் உண்மை உள்ளதா என்பது பற்றியும் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தீமைகக் பற்றி காணலாம்.
வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
உடல் எடை குறைக்க மிகவும் எளிதான வழி வெந்நீர் குடிப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால் உடல் எடை குறைய உடற்பயிற்சி, உணவுக் காட்டுபாடு போன்றவற்றுடன் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது பலன் தரும்.
வெந்நீர் உடல் எடை குறைப்பதில் உதவுவது உண்மைதான் ஆனால் அது மட்டுமே இரண்டு வாரங்களில் 20 கிலோ வரைக்கும் எடை குறைக்க உதவாது.
இந்த பதிவில் வெந்நீர் உடல் எடை குறைக்க எவ்வாறு உதவுகிறது மற்றும் எப்படி குடிக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக காணலாம்.
உடல் எடை குறைய வெந்நீர் :
- காலையில் சற்று வெதுவெதுப்பான நீரைக் குடிக்கும்போது, உடல் அதன் வெப்பநிலையை மாற்றி வளர்சிதை மாற்றத்தை துரிதப் படுத்துகிறது.
- வெதுவெதுப்பான நீர் உடல் கொழுப்பை மூலக்கூறுகளாக உடைப்பதன் மூலம் செரிமான அமைப்பு அதை எரிப்பதை எளிதாக்குகிறது.
- உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, வயிற்றை நிரம்பி அதிக கலோரிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேனைச் சேர்ப்பதன் மூலம், உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேலும் துரிதப் படுத்த முடியும்.
- பொதுவாக சூடான நீர் உடலின் வெப்பநிலையை உயர்த்தி வியர்வையை ஏற்படுத்தி உடலின் நச்சுக்கள் வெளியேற உதவுகிறது.
- போதுமான நீர் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
- மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுகளை மேலும் நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது. இதன் மூலம் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதை எளிதாக்குகிறது.
உடல் எடை குறைய சுடுதண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும் ?
வெந்நீர் உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது. இருப்பினும் அதில் சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் எடை இழப்பைத் துரிதப் படுத்தலாம். அவை
பூண்டு :
பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது, எடை இழப்புக்கு பூண்டு நல்லது.
எலுமிச்சை :
சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிப்பது சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக உதவுகிறது. மேலும், எலுமிச்சை சாறு கொழுப்பை எரிப்பதில் உதவுகிறது.
தேன் :
தேன் ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிகான்சர், ஆண்டிடியாபெடிக், ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபராசிடிக் தாக்கங்களுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதில் உதவுகிறது.
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்
சூடான நீர் உடல் எடை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மற்ற சில ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகக் சிலவற்றைக் கீழே காணலாம்
மலச்சிக்கலை போக்குகிறது
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற்றுவதில் உதவுகிறது. மேலும், குடல் ஆரோக்கியம் மற்றும் சீரான இயக்கத்தை சீராக்கி உடலில் இருந்து நச்சுகளை முழுமையாக அகற்றுவதற்கு உதவுகிறது.
சளி, இருமல் :
வெதுவெதுப்பான நீர், இருமல் மற்றும் சளியின் போது சளி உருவாவதைக் குறைக்கிறது. மேலும், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் சமயங்களில் நிவாரணம் பெற உதவுகிறது.
நச்சுகளை அகற்றுகிறது
என்னெயில் பொறித்த நொறுக்குத் தீனிகளை உண்ணும்போது, அதை ஜீரணிக்க சிறந்த வழி வெந்நீரைக் குடிப்பதாகும். ஏனென்றால், இது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.
சரும ஆரோக்கியம் :
வெந்நீரைக் சருமத் துவாரங்களை சுத்தமாக்கி, முகப்பரு மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சனைகளைத் குறைக்கிறது. இதன் மூலம் சருமம் பளபளப்பாகவும், தெளிவாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது :
வெந்நீர் குடிப்பது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், மனநிலை, பதட்டம் மற்றும் மூளை ஆகியவற்றின் செயல் பாடுகளில் நன்மை பயக்கிறது.
வலியைக் குறைக்கிறது
சூடான நீர் குடிப்பது தசைகள் பாதிப்பு உடையவர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதில் உதவுகிறது.
வெந்நீர் குடிக்க சரியான நேரம் :
- காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. ஏனெனில் இது உடல் வளர்சிதை மாற்றத்தை உடனே ஆரம்பித்து வைக்கிறது.
- சாப்பிட்டவுடன் சற்று வெது வெதுப்பான நீர் குடிப்பது எளிதாக ஜீரணம் ஆக உதவுகிறது.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால், அது நாக்கு மற்றும் நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை சேதப்படுத்தும். மேலும் தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிறு போன்ற உள் உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும்.
சூடான நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிக்கும் முன் ஒரு மடக்கு குடித்து கொதிநிலை இதமாக வெது வெதுப்பாக உள்ளதா என சோதித்துக் கொள்ள வேண்டும்.