ஏலக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள், சத்துக்கள்

0

ஏலக்காய்

ஏலக்காய் என்பது பல இந்திய உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா நறுமண விதை ஆகும்.

ஏலக்காய்

இது இந்தியாவில் எலாச்சி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மசாலா பொருட்களின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் தனித்துவமான நறுமணம் மற்றும் இனிமையான சுவைக்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

ஏலக்காயில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் ஏலக்காயில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு

ஏலக்காயில் நோய்களைத் தடுக்கும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் ஏராளமாக உள்ளன.

மேலும் இது பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாத்துக்களின் மூலமாகும்.

இவற்றுடன், வைட்டமின் சி, நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற முக்கிய வைட்டமின்களையும் கனிசமான அளவு கொண்டுள்ளது.

ஏலக்காய் நன்மைகள் :

ஏலக்காய் பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது. ஏலக்காய் நன்மைகள் பின்வருமாறு

வாய் துர்நாற்றம் :

ஏலக்காயின் ஒரு வித இனிமையான நறுமணம் இயற்கையாக சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

ஏலக்காயில் காணப்படும் சினியோல் எனும் பொருள் இதற்கு காரணம் ஆகும். இது ஒட்டு மொத்த வாய் சுகாதாரத்தைப் பராமறிக்கிறது.

மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது.

இரத்த சர்க்கரை :

கருப்பு ஏலக்காய் பெரும்பாலும் உயர் இரத்த சர்க்கரை அளவுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுவதாக சொல்லப்படுகிறது.

ஏலக்காயில் நிரைந்துள்ள மாங்கனீஸ் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த ஓட்டம் :

ஏலக்காய் உடலில் மற்றும் முக்கியமாக நுரையீரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

எனவே சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட ஆயுள் :

நீண்ட ஆயுளுக்கான ரகசியம்: சீன பாரம்பரியத்தில், ஏலக்காய் டீ குடிப்பது நீண்ட ஆயுளின் ரகசியம் என்று சொல்லப்படுகிறது.

ஏலக்காய் டீ உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உள் உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

செரிமானம் :

ஏலக்காயின் நறுமணம் உணவுப் பொருட்களின் சுவையைக் கூட்டுவதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது.

இது உணவு செரிமானத்திற்கு அவசியமான நொதிகளை சுரக்க உதவுகிறது. குறிப்பாக அதிக உணவுக்குப் பிறகு ஏலக்காய் சாப்பிடுவது அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைக் தவிர்க்க உதவுகிறது. மேலும் இதில் குடல் வழியாக உணவின் இயக்கத்தை சீராக்கும் இரசாயனங்கள் உள்ளன

இருமல் மற்றும் சளி :

பச்சை மற்றும் கருப்பு என இரண்டு வகை ஏலக்காயிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன.

குறிப்பாக கருப்பு ஏலக்காய் சளி மற்றும் இருமல் போன்ற சில சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

சில ஏலக்காய்கலை தேனுடன் கலந்து சாப்பிடுவது அல்லது ஏலக்காய் டீ சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் நேரங்களில் நல்லது.

எடை இழப்பு :

ஏலக்காய் சாப்பிடுவது உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மேலும் உடலில் உள்ள அதிக கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.

நச்சு நீக்கி :

ஏலக்காய் சிறந்த டையூட்ரிக்காக செயல் பட்டு சிறுநீரகத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

இது நச்சுகளுடன் சேர்ந்து திரட்டப்பட்ட கால்சியம், யூரியாவை அகற்றுவதன் மூலம் சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

ஏலக்காயில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தூக்கம் :

ஏலக்காய் எண்ணெயின் இனிமையான நறுமணத்தை நுகர்வது தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் பதட்டம் போன்ற தூக்க பிரச்சினைகளுக்கு சற்று நிவாரணம் அளிக்கும்.

புகைப்பழக்கம் :

ஏலக்காய் புகைப் பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு நன்மை பயக்கிறது.

புகைப் பழக்கத்தின் மூலம் நிக்கொடின் எனப்படும் நச்சுப் பொருள் இரத்தத்தில் சேர்க்கிறது.

ஏலக்காய்களை ஒரு நாளைக்கு 4 முதல் 6 முறை மென்று சாப்பிடுவது புகைப்பழக்கத்தின் மீதான ஏக்கம், அமைதியின்மை, எரிச்சல், பொறுமையின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைத்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

ஏலக்காய் தீமைகள் :

ஏலக்காய் தீமைகள் பின்வருமாறு

ஏலக்காய்யில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சில உணவு வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பயிற்சி பெற்ற மருத்துவரின் ஆலோசனையின்றி ஏலக்காயை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏலக்காயை அதிக அளவு உண்பதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் உணவு வகையிலும் அரைத்த மசாலா வடிவிலும் சிறிதளவு சேர்க்கப்பட்டு உட்கொள்வது பாதுகாப்பானது.