பீர்க்கங்காய் நன்மைகள், சத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்கள்

0

பீர்க்கங்காய் நன்மைகள், மருத்துவ பயன்கள்,  மற்றும் அதிலுள்ள சத்துக்கள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

பீர்க்கங்காய் :

பீர்க்கங்காய் அறிவியல் பெயர்: லஃபா அகுடங்குலா (Luffa acutangula) ஆகும்.

பீர்க்கங்காய்

பீர்க்கங் காய் வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை காய்கறி ஆகும். இது ஆங்கிலத்தில் ரிட்ஜ் கார்டு (Ridge Gourd) என்று அழைக்கப்படுகிறது.

பீர்க்கங்காயில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் பீர்க்கங்காயில் 20 கலோரிகளை மட்டுமே உள்ளன. அதன் மென்மையான சதை பகுதி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதோடு, மிதமான அளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின் கள் நிறைந்துள்ளது.

பீர்க்கங்காயில் கரோட்டின், லுடீன் மற்றும் கிரிப்டோ-சாந்தின் பினாலிக் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக்கும்.

பீர்க்கங்காயில் மற்ற காய்கறிகளை விட அதிக வைட்டமின் ஏ உள்ளது. 100 கிராம் பீர்க்கங்காயில் 410 IU வைட்டமின் ஏ, மற்றும் 12 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது.

மேலும் இது மிதமான அளவு தையமின், நியாசின் (வைட்டமின் பி -3), பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் பி -5), பைரிடாக்சின் (வைட்டமின் பி -6) போன்ற பி வைட்டமின்களையும் மற்றும் கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது.

பீர்க்கங்காய் நன்மைகள்:

பீர்க்கங்காய் சில நாடுகளில் சில்கி கோர்ட், சைனீஸ் ஓக்ரா, வெஜிடபிள் கோர்ட், கடற்பாசி மற்றும் அங்கில்ஸ் லஃபா போன்ற பல பெயர்களால் அழைக்கப் படுகிறது.

பீர்க்கங்காய் நன்மைகள்

இது இந்தியா, சீனா, வியனாம் ஆகிய நாடுகளில் பிரபலமான காய்கறி வகையாகும்.

பீர்க்கங்காய் நன்மைகள் பின்வருமாறு

நீரிழிவு நோய்க்கு நல்லது :

பீர்க்கங்காய் நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறியாகும். இது நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

இதில் குறைந்த அளவு கார்ப் மற்றும் பெப்டைட்ஸ் போன்ற இன்சுலின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

எனவே, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பீர்க்கங்காய் சிறந்த காய்கறியாகும்.

எடை இழப்புக்கு உதவுகிறது :

பீர்க்கங்காயில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச் சத்து இருப்பதால் எடை இழக்க விரும்பு பவர்களுக்கான சிறந்த காய்கறி தேர்வாகும்.

மேலும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மற்றும் மிதமான  அளவு நார்ச்சத்து உள்ளது.

இதன் மூலம் சிறிது கலோரியில் அதிக நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.

இதய பாதுகாப்பு :

பீர்க்கங் காய் மற்ற காய்கறிகளை விட குறைந்த அளவு கொழுப்பைக் கொண்டுள்ளது.

இதய நோய்கள் உள்ளவர்களுக்கு சிறந்த காய்கறி தேர்வாகும். இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் சிறந்த காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒவ்வாமை எதிர்த்து போராடுகிறது :

பீர்க்கங்காயில் ஒவ்வாமை எதிர் பன்புகள் உள்ளன. அவற்றை வழக்கமாக உணவில் சேர்த்து கொள்வது அரிப்பு போன்ற ஒவ்வாமைகளை போக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கிறது :

பெருமூளை இஸ்கெமியா என்பது மூளைக்கு போதுமான அளவு இரத்த ஓட்டம் செலுத்தப் படாத போது ஏற்படும் விளைவாகும்.

இது மூளை உயிரணுக்களின் மரணத்தை ஏற்படுத்துகிறது. பீர்க்கங்காயில் உள்ள செரிப்ரோபுரோடெக்டிவ் பண்புகள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும், எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பீர்க்கங்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது.

வலியைக் குறைக்க உதவுகிறது :

பீர்க்கங் காய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அழற்சி பிரச்சனைகளில் இருந்து வலிகளைப் போக்க உதவுகிறது.

பீர்க்கங்காய் விதை சாற்றில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன என்று ஆராய்ச்சி கூறுகிறது.

வைட்டமின் ஏ யின் சிறந்த மூலமாகும் :

பீர்க்கங்காயில் மற்ற காய்கறிகளை விட வைட்டமின் ஏ  அதிக அளவு உள்ளது.

பீர்க்கங்காய் 100 கிராமில் 410 IU அதாவது தினசரி தேவையான வைட்டமின் ஏ அளவில் 14 சதவீதம் உள்ளது.

வைட்டமின் ஏ தோல், முடி மற்றும் பார்வை ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். இது மனிதர்களில் செல்லுலார் மட்டத்தில் புற்றுநோய் எதிர்ப்பு, முதுமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும் :

பீர்க்கங் காய் வைட்டமின் சி யின் சிறந்த காய்கறி மூலமாகும். 100 கிராம் பீர்க்கங்காயில் 12 மில்லி கிராம் அதாவது தினசரி தேவையான வைட்டமின் சி அளவில் சுமார் 20 சதவீதம் உள்ளது.

வைட்டமின் சி சக்திவாய்ந்த இயற்கை ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். இது உடல் செல்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது.

ஜீரண ஆரோக்கியம் :

பீர்க்கங் காய் மென்மையான சதை பகுதியில் நார் சத்து நிறைந்திருப்பதால் எளிதில் செரிமானமாகிறது.

மேலும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

பீர்க்கங்காய் மருத்துவ பயன்கள் :

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது :

இது நீண்ட காலமாக இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

நுண்ணுயிர் எதிர் பண்பு :

சில ஆய்வுகள் பீர்க்கங் காய் மற்றும் அவற்றின் இலைகள் நுண்ணுயிர் எதிர் பண்புகளுக்கு சாத்தியமான பயன்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவிக் கின்றன.

ஒவ்வாமை பாதுகாப்பு :

சில ஹோமியோபதி மருத்துவத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளுடன் பீர்க்கங் காய் சாறு கலந்த நாசி ஸ்ப்ரேக்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஹோமியோபதி மருத்துவ முறையில் பயன்படுகிறது :

மேலும் பீர்க்கங்காய் சாற்றைக் கொண்ட தயாரிக்கப் பட்ட ஹோமியோபதி மாத்திரையும் சைனசிடிஸின் அறிகுறி களிலிருந்து நிவாரணம் அளிப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுகிறது :

இயற்கை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பல மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரலைப் பாதிக்கும் கோளாறுகளுக்கு பீர்க்கங்காயை பயன்படுத்த பரிந்துரைக் கின்றனர்.

வயிற்று புண்ணிற்கு நல்லது:

உணவில் சேர்த்துக்கொள்வது புண்கள் மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.