புல் அப்ஸ் பலன்கள் மற்றும் நன்மைகள்

0

புல் அப்ஸ் :

புல் அப்ஸ் வீட்டிலிருந்து அல்லது உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உதவி இல்லாமல் தானாகவே செய்யப்படும் கடின உடற்பயிற்சி வகைகளில் ஒன்றாகும்.

புல் அப்ஸ்

புல் அப்ஸ் பயிற்சி பலன்கள் :

பமுறையாக புல் அப்ஸ் பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

பல தசைகளுக்கு பயிற்சி

ஒரே நேரத்தில் உடல் மேல் பகுதியில் உள்ள பல தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து வேலை செய்ய வைக்கிறது.

ஒவ்வொரு முறை புல்-அப் செய்யும்போதும் பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், முன்கைகள், மணிக்கட்டுகள், பிடியின் வலிமை, லேட்ஸ், தோள்கள் மற்றும் பின் முதுகு போன்ற பகுதியில் உள்ள சதைகளுக்கு பயிற்சி கொடுத்து அக்டிவேட் செய்கிறது.

கலோரி பர்னர்

பொதுவாக உடல் இயக்கம் கலோரிகளை அதாவது ஆற்றலை எரிக்க தூண்டுகிறது. மற்ற பிற உடற்பயிற்சிகளைப் போல புல் அப்ஸ் பயிற்சியும் கலோரிகளை எரிக்க ஊக்குவிக்கிறது.

எரிக்கப் படும் கலோரிகளின் அளவு செய்யும் நபரின் எடை, உடல் அமைப்பு மற்றும் செய்யும் முறையைப் பொறுத்து மாறுபாடுகிறது.

கார்டியோ வொர்க்அவுட்டில் உதவுகிறது :

புல் அப்ஸ் கடின வகை உடற்பயிற்சிகளுள் ஒன்று. எனினும் சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு செய்யும் போது இரத்த ஒட்டத்தை அதிகப் படுத்தி, நடைப் பயிற்சியின் போது கிடைக்கும் பலன்களையும் தருகிறது.

எளிதாக செய்யலாம் :

புல் அப்ஸ் பயிற்சியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டில், ஒரு பூங்காவில், ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அல்லது எங்கு வேண்டுமானாலும். இந்த பயிற்சி செய்வதற்கு ஏற்ற பார் போன்ற அமைப்பு இருந்தாலே போதும்.

மன ஆரோக்கியம் :

அணைத்து உடல் பயிற்சிகளையும் போலவே புல் அப்ஸ் மேற்கொள்வதும் உடல் தசைகளை வலுப்படுதோடு மனநிலையையும் மேம்படுத்துகிறது.

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு உள்ளவர்கள் நடை பயிற்சி, புல்-அப்கள் போன்ற வலிமை பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

தோரணையை மேம்படுத்துகிறது

புல்-அப்களின் உடனடி மற்றும் சிறந்த நன்மைகளில் ஒன்று தோரணையைப் பெற உதவுவதாகும். புல்-அப்கள் முதுகு தசைகளுக்கு வேலை கொடுத்து முதுகை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடல் கூன் இல்லாமல் நிமிர்ந்த தோற்றத்தைத் தருகிறது.

 “V-வடிவம்”

இந்த பயிற்சியை முறையாக தொடர்ந்து செய்யும் போது, ஆண்களுக்கு ஒரு குறுகிய இடுப்பு, பரந்த முதுகு போன்ற அமைப்புடன் “V” போன்ற தோற்றத்தைத் தருகிறது.