கேரட் நன்மைகள், பயன்கள், கேரட்டில் உள்ள சத்துக்கள் மற்றும் கேரட் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கேரட் :
காரட் அறிவியல் பெயர் டாகஸ் கரோட்டா (Daucus carota) இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காரட் (Carrot) என்று அழைக்கப் படுகிறது.
தற்போது நாம் பயன்படுத்துகிற காரட் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும்.
உலக அளவில் காரட் உற்பத்தியில் சீனா, உஸ்பெக்கிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
கேரட்டில் உள்ள சத்துக்கள் :
கேரட்டில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக பயோட்டின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), வைட்டமின் கே 1 (பைலோக்வினோன்) மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
மேலும் கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது உடல் செயல்களின் மூலம் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.
கேரட்டின் தோலில் செறிவூட்டப்பட்ட வைட்டமின் சி மற்றும் நியாசின் உள்ளது.
தோலின் உட்பகுதியில் இந்த வைட்டமின்களுடன், வைட்டமின் ஏ உள்ளது.
கேரட்டின் மையப் பகுதியில் அதிக கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் உள்ளன.
கேரட் நன்மைகள் :
கேரட் இந்தியாவில் ஹரியானா, உத்தர பிறதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பயிரிடப்படுகிறது
கேரட் நன்மைகள் மற்றும் ஆரோக்கிய பயன்கள் பற்றி காணலாம்.
இரத்த அழுத்தம் :
கேரட்டில் போதுமான அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.
பொட்டாசியம் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களை தளர்த்துவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு போன்ற தீவிர கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு நோய் :
கேரட் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுவதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது.
கேரட் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் எதிர்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
நச்சு தன்மையை நீக்குகிறது :
கேரட்டில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
மேலும் கல்லீரலில் கொழுப்பு மற்றும் பித்தநீர் சேர்வதைத் தடுப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கேரட்டில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் கழிவுகளை அகற்றும் செயல்முறை துரிதப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
கேரட் சாறு மற்றும் கேரட்டின் பல நன்மைகளில் முக்கியமானது அவற்றில் அடங்கியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எடை குறைப்பு :
எடை குறைக்க விரும்புவர்கள் கேரட் அல்லது கேரட் ஜூஸ் சேர்ப்பது நல்லது.
ஏனெனில் கேரட் நீண்ட நேரம் பசி உணர்வை காட்டுப்படுத்தி திருப்தியாக இருப்பதை உணர உதவுகிறது.
மேலும் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
செரிமானம் :
கேரட்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
மேலும் இதில் உள்ள நார்ச் சத்து இரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் எடை இழப்பிலும் உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு :
கேரட்டில் உள்ள ஃபல்காரினோல், பாலி-அசிட்டிலீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் , புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்களை அழிக்க உதவுகிறது.
மேலும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், புற்று நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கண்களுக்கு நல்லது :
கேரட் பயன்கள் பலவற்றில் முக்கியமானது கண்களுக்கு நலம் பயப்பது ஆகும். ஏனெனில் அவற்றில் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது.
இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மாலைக்கண் மற்றும் வயது தொடர்பான தசைச் சிதைவு போன்ற வற்றைத் தடுக்க உதவுகிறது.
மாத விடாய் :
பெண்களுக்கு கேரட் நன்மைகள் பலவற்றை அள்ளித் தருகிறது. அவற்றில் ஒன்று மாதவிடாய் பிரச்சினைகளைக் குறைப்பது.
ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் தங்கள் தினசரி உணவில் கேரட்டை சேர்ப்பதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.
ஹாட் ஃப்ளாஷ், மனநிலை மாற்றங்கள் போன்ற மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைத் தவிர்ப்பதில் நன்மை பயக்கிறது.
பற்களுக்கு நல்லது :
பச்சைக் கேரட்டை சாப்பிடுவது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஏனெனில் இது பற்களில் உள்ள பிளேக் மற்றும் உணவுத் துகள்களை அகற்றுவது மட்டுமல்லாமல், ஈறுகளைத் தூண்டுவதன் மூலம் உமிழ்நீர் உற்பத்தியிலும் உதவுகிறது.
உமிழ்நீர் பற்களுக்கு சேதம் விளைவிக்கும் பாக்டீரியா உருவாவதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
கேரட் தீமைகள் :
காரட் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. கேரட் தீமைகள் சில பின்வருமாறு
தோல் நிறமாற்றம் :
கேரட் பக்க விளைவுகள் என்றாலே பலரும் அறிந்தது சரும நிறமாற்றம் ஆகும். கேரட் அதிக அளவில் சாப்பிடுவது சரும நிறத்தில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தும். தடிப்புத் தோல் அழற்சி உள்ளவர்கள்
அதிக வைட்டமின் ஏ :
அதிக அளவு காரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள அதிக அளவு வைட்டமின் A ஐத் ஹைப்பர் வைட்டமினோசிஸுக்கு வழிவகுக்கும்.
அதிக சர்க்கரை :
கேரட்டில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரை குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலின் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் அதிக அளவு கேரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உலோக பாதிப்பு :
அசுத்தமான நீர் அல்லது மண்ணில் வளர்க்கப்பட்ட கேரட்டில் உலோகங்கள் இருக்கலாம், அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.