சப்ஜா விதை பயன்கள், நன்மைகள் மற்றும் தீமைகள்

0

சப்ஜா விதை என்றால் என்ன, சப்ஜா விதை பயன்கள், நன்மைகள் அளவுக்கு அதிகமாக உண்பத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் சப்ஜா விதை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

சப்ஜா விதைகள்

சப்ஜா விதைகள் பல விதமான சமையல்களில் பயன்படுத்தப் படுகின்றன. அவை உணவுக்கு சுவையூட்டுவதற்கு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

சப்ஜா விதை

பார்ப்பதற்கு கருப்பு எள் போன்று தோற்றமாளக்கும் சப்ஜா விதை தமிழில் கசகசா என்றும் அழைக்கப்படுகிறது.

சப்ஜா விதை பயன்கள் :

சப்ஜா விதை நீரில் ஊற வைத்து குடிப்பதன் மூலம் அதன் முழு ஆரோக்கிய நன்மைகளையும் பெற முடியும். சப்ஜா விதை பயன்கள் பின்வருமாறு

உடல் சூடு

இவை கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிக்க குளிர் பாணங்களில் பயன்படுத்தப் படுகிறது.

இரவு முழுவதும் சிறிதளவு சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் சூட்டை குறைக்க உதவும்.

இரத்த சர்க்கரை அளவு

சப்ஜா விதைகளில் உள்ள நார்ச் சத்து காரணமாக சிறந்த நீரிழிவு எதிர்ப்பு திறன் கொண்டவை என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுக்கு முன் சப்ஜா விதைகளை சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

மலச்சிக்கல்

சப்ஜா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த விதைகளை தண்ணீருடன் குடிக்கும் பொழுது மலத்தை மென்மையாக்குகிறது

மேலும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் அடையலாம்.

அமிலத்தன்மை நிவாரணம்

சப்ஜா விதைகளில் பல கரையக்கூடிய நார்ச்சத்துகளுடன் பெக்டின் உள்ளது.

பெக்டினின் ப்ரீபயாட்டிக் பண்புகள் காரணமாக குடல் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இது அதிக அளவில் அமிலத்தன்மையை போக்க உதவுகிறது.

எடை குறைப்பு

சப்ஜா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது.

இந்த இரண்டு சத்துக்களும் செரிமான அமைப்பில் நீண்ட நேரம் தங்கியிருந்து பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

இதன் மூலம் அடிக்கடி உணவு உண்பதால் சேரும் அதிகப்படியான கலோரிகளைக் குறைத்து உடல் எடை குறைப்பில் உதவுகிறது.

நச்சுக்களை நீக்குகிறது

குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்தி, உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

கொழுப்பு

சப்ஜா விதைகளில் உள்ள ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது குடலில் உள்ள கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

இதயம்

ஒரு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதையில் சராசரியாக 2.5 கிராம் கொழுப்பு உள்ளது.

இந்த கொழுப்பில் கிட்டத் தட்ட 50 சதவீதம் அதாவது ஒரு தேக்கரண்டிக்கு 1,240 மி.கி ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), ஒமேகா-3 கொழுப்பு உள்ளது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் வாஸ்குலர் செயல்பாடு, ஈகோசனாய்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு ஆகிய செயல்பாடுகளில் நன்மை பயக்கிறது.

வாய் ஆரோக்கியம்

சப்ஜா விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அவை வாய் புண்களைக் குணப்படுத்த உதவுகின்றன. மேலும் வாய் துர்நாற்றம், பிளேக் மற்றும் குழிவுகள் போன்ற பல்வேறு பல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

மன அழுத்தம்

சப்ஜா விதைகள் மன அழுத்தம், பதற்றத்தைக் குறைத்து மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.

சப்ஜா விதைகளில் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் போன்ற ஆண்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன.

அவை நினைவாற்றலை மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

சப்ஜா விதை தீமைகள் :

சப்ஜா விதை தீமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • சப்ஜா விதைகள் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், முகப்பரு, ஆசிட் ரிஃப்ளக்ஸ், தலைவலி, வயிற்றில் அசௌகரியம், பசியின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • சப்ஜா விதைகள் சில சமயங்களில் இரத்தச் சர்க்கரையைக் கனிசமாக குறைக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் கவனத்துடன் சாப்பிட வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் மட்டுமே சப்ஜா விதைகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கிறது.
  • சப்ஜா விதை எண்ணெய் மற்றும் சாறுகள் இரத்தம் உறைவதை மெதுவாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, சமீபத்தில் அறுவை சிகிச்சை மற்றும் காயம் காலங்களில் தவிர்ப்பது நல்லது.
  • மேலும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் சிகிச்சைக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு சப்ஜா விதைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.