மகடாமியா நட்ஸ் (Macadamia Nuts In Tamil)
மகடாமியா பழத்தின் விதைகள் மகடாமியா நட்ஸ் ஆகும். மக்காடமியா மரத்தின் பூர்வீகம் ஆஸ்திரேலியா ஆகும்.
தற்பொழுது பிரேசில், கோஸ்டாரிகா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து போன்ற உலகின் பல்வேறு இடங்களிலும் வளர்க்கப்படுகின்றன.
மக்கடாமியா நட்ஸ்களிலும் மற்றக் கொட்டைகளைப் போல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மை பயக்கும் தாவர கலவைகள் நிறைந்துள்ளன.
மேலும் செரிமானம், இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
மகடாமியா நட்ஸில் உள்ள சத்துக்கள்
யு. எஸ் லைப்ரரி ஆப் அக்ரிகல்ச்சர் (USDA) தரவுகளின் படி 100 கிராம் பச்சை மகடாமியா கொட்டைகளின் ஊட்டச் சத்துக்கள் விபரம் பின்வருமாறு.
கலோரிகள் :
- கலோரிகள்: 718 கிலோ கலோரிகள்
- கொழுப்பு : 75.8 கிராம்
- புரதம் : 7.91 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள் : 13.8 கிராம்
- ஃபைபர்: 8.6 கிராம்
மினரல்கள் :
- கால்சியம் : 85 மி.கி
- இரும்பு : 3.69 மி.கி
- மெக்னீசியம் : 130 மி.கி
- பாஸ்பரஸ் : 188 மி.கி
- பொட்டாசியம் : 368 மி.கி
- சோடியம் : 5 மி.கி
- துத்தநாகம் : 1.3 மி.கி
- தாமிரம் : 0.756 மி.கி
- மாங்கனீசு : 4.13 மி.கி
- செலினியம் : 3.6 μg
வைட்டமின்கள் :
- வைட்டமின் சி : 1.2 மி.
- வைட்டமின் ஈ (ஆல்ஃபா-டோகோபெரோல்) : 0.54 மி.கி
- தியாமின் : 1.2 மி.கி
- ரிபோஃப்ளேவின் : 0.162 மி.கி
- நியாசின் : 2.47 மி.கி
- பாந்தோதெனிக் அமிலம் : 0.758 மி.கி
- வைட்டமின் பி6 : 0.275 மி.கி
- ஃபோலேட் : 11 μg
மகடாமியா நட்ஸ் நன்மைகள் :
சத்து நிறைந்தது
மகடாமியா நட்ஸ்ஸில் உடலுக்கு அவசிமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
எனவே ஊட்டச் சத்து குறைபாடு உடைவர்கள் மற்ற நட்ஸ் வகைகளுடன் மக்காடாமியா நட்ஸ்களையும் சேர்த்து சாப்பிடுவது ஊட்டச் சத்து குறைபாட்டை போக்க உதவும்.
வலுவான எலும்புகள்
மகடாமியா கொட்டைகளில் எலும்பு ஆரோக்கித்திற்கு அவசியமான பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய மூன்று தாதுக்கள் உள்ளன.
அவை எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம் மற்றும் வலிமையை உறுதி செய்கின்றன.
மன நிலையை மேம்பாடு :
மக்காடமியா கொட்டைகளில் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் மற்றும் உயர்தர புரதம் உள்ளது.
அவை உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுவதாக சொல்லப் படுகிறது. இருப்பினும் போதுமான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை.
ஜீரண ஆரோக்கியம் :
மக்காடமியா கொட்டைகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். 100 கிராம் மகடமியா கொட்டையில் 6.3 கிராம் நார்ச் சத்து உள்ளது.
நார்ச் சத்து ஆரோக்கியமான் செரிமானத்திற்கு உதவுகிறது.
நோய் பாதுகாப்பு :
மக்காடமியா கொட்டைகளில் வைட்டமின் இ டோகோட்ரியெனால் வடிவத்தில் உள்ளது.
சில வகையான புற்றுநோய் மற்றும் மூளை நோய்களுக்கு எதிராக டோகோட்ரியினால்கள் உதவக்கூடும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி :
மக்கடாமியா கொட்டைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை செல்களில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இதன் மூலம் புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற நோய்கள் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
மேலும் அவை இதய நோய், நரம்பியக்கடத்தல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றிற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.