வெந்தயம் நன்மைகள், தீமைகள் மற்றும் பக்க விளைவுகள்

0

வெந்தயம் நன்மைகள், பயன்கள், மருத்துவ பயன்கள், பக்க விளைவுகள் மற்றும் வெந்தயம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் :

வெந்தயம் அறிவியல் பெயர் டிரிகோனெல்லா ஃபோனம்-கிரேகம் ஆகும்.

வெந்தயம் நன்மைகள்

இது ஆங்கிலத்தில் பெனுக்ரீக் என்று அழைக்கப்படுகிறது. வெந்தயம் பூர்வீகம் இந்தியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் ஆகும்.

உலக அளவில் இந்தியா வெந்தயம் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 80 சதவீதம் வெந்தய உற்பத்தியுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

வெந்தயம் நன்மைகள் :

வெந்தய விதைகள் டிரிகோனெலின், லைசின் மற்றும் எல்-டிரிப்டோபான் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். மேலும் அதிக அளவு சபோனின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.

இவை வெந்தயத்தின் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.

வெந்தயம் நன்மைகள்

வெந்தயம் நன்மைகள் சில பின்வருமாறு

கொழுப்பைக் குறைக்கிறது

வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளில் இருந்து கொழுப்பு உடலால் உறிஞ்சப் படுவதைக் குறைக்க உதவுகின்றன.

மேலும் உடலின் கொழுப்பின் உற்பத்தியைக் குறைப்பதில் சபோனின்கள் உதவுவதாக ஆவுகளில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன.

இந்தியாவின் மைசூரில் உள்ள சிஎஸ்ஐஆர், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர் வெந்தயம் எலிகளில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் பித்தப்பைக் கற்களை குறைக்க உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

மேலும், பெனுக்ரீக் கொலஸ்ட்ரால் செறிவைக் கணிசமாகக் குறைக்கும் என்று அவர்கள் கூறினர்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது : 

இதுவரை வெந்தயத்தில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ள ஒரு வகை அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவது மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பது போன்ற நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

கோம் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈரானிய ஆராய்ச்சியாளர்கள், முதலாம் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு மருந்தாக வெந்தயம் இருக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர்.

புற்றுநோயை தடுக்கிறது :

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து சில புற்றுநோய்களைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், வெந்தயம் ஈஸ்ட்ரோஜெனிக் விளைவுகளைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு (HRT) மாற்றாக இருக்கலாம் என்று கண்டறிந்தனர்.

வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் உணவில் உள்ள நச்சுப் பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவற்றை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் பெருங்குடலின் சளி சவ்வு புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

கல்லீரல் ஆரோக்கியம் :

பெனுக்ரீக் கல்லீரலில் உள்ள நச்சுகளை சுத்தப்படுத்துகிறது. கல்லீரலில் ஏற்படும் சிறிய பாதிப்பு கூட ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது கல்லீரல் பாதிக்கப் படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

மேலும் இது கல்லீரலில் ஆல்கஹால் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

வெந்தய விதைகளில் உள்ள பாலிஃபீனாலிக் கலவைகள் ஆல்கஹாலால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பைக் குறைக்க உதவுகின்ன.

ஜீரண ஆரோக்கியம் :

வயிற்றுக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களுக்கு வெந்தயம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

இரைப்பை அழற்சி, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. ஏனெனில் இது ஒரு இயற்கையான செரிமான டானிக் ஆகும்.

உடல் எடை குறைய :

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு வெந்தயம் நன்மை பயக்கிறது.

பெனுக்ரீக் பசியை அடக்கி, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது.

டெஸ்டோ ஸ்டிரோன் ஆரோக்கியம் :

ஆஸ்திரேலியாவில் நடத்த பட்ட ஆய்வு ஒன்றில் வெந்தயம் பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இது ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பராமரிக்க உதவுகிறது என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

பாலுற்பத்தியை அதிகரிக் கிறது :

வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.

மேலும் வெந்தய தேநீர் குடிப்பதால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு குழந்தைகளின் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது.

மாதவிடாய் நலம் :

வெந்தயம் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் தொடர்பான பிற அறிகுறிகளின் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

வெந்தய விதைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன.

ஆய்வுகளில் வெந்தய விதை சோர்வு, தலைவலி மற்றும் குமட்டல் போன்ற மாதவிடாய் காலங்களில் ஏற்பட கூடிய அறிகுறிகளைக் கணிசமாகக் குறைத்தது கண்டறியப்பட்டது.

வெந்தயம் தீமைகள்  :

வெந்தயம் அதிக அளவு உட்கொள்வது அதன் டெரடோ ஜெனிக் திறன் காரணமாக பிறப்பு குறை பாடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப் படுகிறது.

எனவே கர்ப்ப காலத்தில் வெந்தயச் சேர்க்கையைத் தவிர்ப்பது நல்லது.

வெந்தய விதைகள் இரத்தப்போக்கு கோளாறு உடையவர்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு வெந்தயம் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை அறிகுறிகளில் மார்பு வலி, முக வீக்கம் மற்றும் சுவாசம் அல்லது விழுங்குவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.

மேலும் அதிக அளவு வெந்தயம் உட்கொள்வது வயிற்றுப்போக்கு, அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு, வீக்கம் மற்றும் சிறுநீர் நாற்றம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்து வதாக சொல்லப் படுகிறது.