வல்லாரைக் கீரை நன்மைகள் மற்றும் தீமைகள்

0

வல்லாரைக் கீரை :

வல்லாரை கீரை என்பது சக்திவாய்ந்த மருத்துவ மூலிகை வகையாகும். வல்லாரைக் கீரையின் அறிவியல் பெயர் சென்டல்லா ஆசியாடிகா (Centella Asiatica) ஆகும்.

வல்லாரைக் கீரை

வல்லாரை கீரை பொதுவாக தென்னிந்திய பாரம்பரிய சமையலில் கீரை வகை உணவாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தாவரத்தின் பிற பகுதிகளான தண்டு, பூக்கள் மற்றும் பழங்கள், அரிக்கும் தோலழற்சி, நினைவாற்றல் குறைபாடு, செரிமான கோளாறு போன்ற குறைபாடுகளுக்கு மருந்தாக ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் போன்ற வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

வல்லாரை கீரை சத்துக்கள் :

மூலிகை வகை தாவரமான வல்லாரை கீரையில் ஏராளமான அளவு வைட்டமின் சி உள்ளது.

மேலும் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான பல ஊட்ட சத்துக்கள் இருந்தாலும் குறைந்த அளவு கலோரிகளை கொண்டுள்ளது.

USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் (அமெரிக்காவின் வேளாண்மைத் துறை) வழங்கிய தரவுகளின்படி, 100 கிராம் வல்லாரைக் கீரையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு பின்வருமாறு:

ஆற்றல் : 15 கிலோகலோரி

மக்ரோநியூட்ரியண்ட்ஸ்:

 

வைட்டமின்கள்:

தாது சத்துக்கள் :

மேலும், வல்லாரைக் கீரையில் சபோனின்கள் அல்லது ட்ரைடர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பாலிஃபீனால்கள், டானின்கள் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும்.

வல்லாரை கீரை நன்மைகள் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

வல்லாரை கீரையை மிதமான அளவு அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமான நபருக்கு தேவையாம தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்கிறது.

வைட்டமின் சி உடலால் இரும்பு சத்து உறிஞ்சப் படுவதை அதிகரிப்பதோடு, வெள்ளை இரத்த அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தவும் உதவுகிறது.

மேலும், வைட்டமின் சி உடலில் உள்ள அனைத்து திசுக்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கித்திற்கு அவசியமான ஆக்சிஜனேற்றியாக செயல் பட்டு நச்சுக்களை நீக்கவும் உதவுங்கிறது.

மலச்சிக்கலை போக்குகிறது :

வல்லாரை கீரையில் கனிசமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது சீரான குடல் இயக்கத்தை உறுதி செய்கிறது.

இது சிறுநீரக செயல்பாட்டை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்தி தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச செய்து தேவையில்லாத நச்சு கழிவுகளை வெளியேற்றுவதிலும் உதவுகிறது.

இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது :

இந்த கீரையில் உள்ள வைட்டமின் சி, உட்கொண்ட உணவில் இருந்து இரும்பு சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையிலிருந்து பாதுகாக்கிறது.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுகிறது :

மேலும் இதில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி சிறுநீர்ப்பையில் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.

இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது :

இயற்கையாகவே பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், வல்லாரை கீரை சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

இது இதய தசையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, கெட்ட எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைத்து மற்றும் நல்ல எச்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

மேலும், இக்கீரை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

மூளை செயல்பாடுகளை மேம்படுத்துகிறது :

வல்லாரை கீரையில் உள்ள பிரம்மோசைடு, பிராமினோசைடு மற்றும் சென்டெல்லோசைடு போன்ற சேர்மங்களின் கலவை நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறனை உயர்த்த உதவுகிறது.

தினசரி உணவின் ஒரு பகுதியாக வல்லாரை கீரையை சிறிதளவு உணவில் சேர்த்து கொள்வது சிஎன்எஸ்ஸில் உள்ள நரம்பியக் கடத்தியின் செயல்பாட்டைத் தூண்டுகிறது, இதன் மூலம் மூளையில் இருந்து உடலின் மற்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கு நரம்பு சமிக்ஞைகள் இயல்பான ரிலேவை உறுதி செய்கிறது.

மேலும் அறிவாற்றல் திறன்களையும் அதிகரிக்கிறது.

தசைப் பிடிப்புகளை தளர்த்துகிறது :

வல்லாரை கீரையில் உள்ள மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு தசைப் புண்கள் மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

மேலும், அதிக தீவிரமான உடல் பயிற்சிக்குப் பிறகு, கைகள் மற்றும் கால்களில் தசைகளில் கடுமையாம அசௌகரியம் ஏற்படும் போது வல்லாரை கீரை சாலட் சாப்பிடுவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

எலும்புகளை பலப் படுத்துகிறது :

வல்லாரை கீரையில் உள்ள கால்சியம் உடலால் உறிஞ்சப்பட்டு, எலும்பு அடர்த்தியை பராமரிப்பதுடன் நெகிழ்வான மற்றும் தடையற்ற இயக்கத்திற்கு உதவுகிறது.

இந்த கீரையில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களால் தாது உறிஞ்சுதலை அதிகரிப்பதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

தோல் ஆரோக்கியம் :

வல்லாரை கீரையில் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான சரும செல்கள் உருவாக்கத்தில் உதவுகின்றன.

மேலும் இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

அவை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடி முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மற்றும் தோல் எரிச்சலைக் குறைக்கவும் உதவுகின்றன.

ஆழ்ந்த தூக்கத்தை உறுதி செய்கிறது :

வல்லாரை கீரையில் கனிசமான அளவு நரம்புகளை ஒழுங்குபடுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன.

இது GABA நரம்பியக்கடத்தியின் அளவை சமப்படுத்துகிறது மற்றும் மனதை அமைதிப்படுத்துவதில் உதவுகிறது. இதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்கிறது.

வல்லாரைக் கீரை பக்க விளைவுகள் :

வல்லாரை கீரை குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே மிதமான அளவு உட்கொள்வது நல்லது.

கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது வல்லாரை கீரையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அளவு அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

எனவே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இக்கீரையை உணவில் சேர்த்து கொள்ளும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

வல்லாரை கீரை குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளுடன் நிகழும் வினைகள் குறித்தும் போதுமான ஆதாரங்கள் இல்லை.

எனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்தைப் பயன்படுத்துபவர்கள் வல்லாரை கீரையை உட்கொள்ளுமுன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.