பட்டர் மற்றும் சீஸ் என்றால் என்ன எது சிறந்தது…

0

இந்த கட்டுரையில் பட்டர் மற்றும் சீஸ் என்றால் என்ன மற்றும் இரண்டில் எது ஊட்ட சத்து மிகுந்தது என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது

பட்டர் மற்றும் சீஸ் :

பட்டர் தமிழில் வெண்ணெய் என்றும் சீஸ் என்பது தமிழில் பாலாடைக் கட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

சீஸ் Vs பட்டர்

‘பட்டர் டோஸ்ட்’ அல்லது ‘சீஸ் டோஸ்ட்’ இரண்டு பால் பொருட்களும் பொதுவாக மிகவும் விரும்பி உட்கொள்ளப் படுகின்றன.

ஆனால் இரண்டில் எது ஊட்ட சத்து நிறைந்தது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்திருக்கும்.

இந்தக் கட்டுரையில், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டு பால் பொருட்களுக்கு இடையேயான ஒப்பீட்டை காணலாம்.

சீஸ் என்றால் என்ன :

சீஸ் அல்லது பாலாடைக் கட்டி என்பது பாலிலுள்ள புரதமான கேசீனை உறைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இது கடைகளில் பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கிறது.

பொதுவாக பீட்சா, பாஸ்தா அல்லது டோஸ்ட் ஸ்ப்ரெட் போன்ற உணவு வகைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.

அனைத்து இன ஆடு மாடுகளின் பால் பாலாடைக்கட்டி உற்பத்திக்கு பயன்படுத்தப்படலாம்.

பட்டர் என்றால் என்ன :

பட்டர் அல்லது வெண்ணெய் என்பது பாலை புளிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப் படுகிறது. அதன் பிறகு, பாலிலிருந்து இருந்து மோர் பிரிக்கப்படுகிறது.

கலோரிகள் :

பாலாடைக் கட்டி 100 கிராமில் 349 கலோரிகள் உள்ளன.

வெண்ணெய்  100 கிராமில் 717 கலோரிகள் உள்ளன.

புரதம் :

100 கிராம் சீஸில் 18 கிராம் புரதம் உள்ளது.

100 கிராம் வெண்ணெயில் 0.8 கிராம் புரதம் உள்ளது.

கொழுப்பு :

சீஸ் 100 கிராமில் 32 கிராம் கொழுப்பு, 18 கிராம் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் 1.1 கிராம் டிரான்ஸ் கொழுப்புகள்.

வெண்ணெய் 100 கிராமில் 81 கிராம் கொழுப்பு, 51 கிராம் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் 3.3 கிராம் டிரான்ஸ் கொழுப்புகள்.

வைட்டமின்கள் :

100 கிராம் சீஸில் 945 IU வைட்டமின் ஏ உள்ளது. மேலும் வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் ரிபோஃப்ளேவின், பாந்தோதெனிக் அமிலம், ஃபோலேட் மற்றும் பீடைன் ஆகியவையும் குறைந்த அளவில் உள்ளன.

வெண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் கோலின் ஆகியவை நிறைந்துள்ளன. வெண்ணெய் 100 கிராமில் 2499 IU வைட்டமின் ஏ உள்ளது. மேலும் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் பி3 அல்லது நியாசின், வைட்டமின் பி2 அல்லது ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி5 அல்லது பாந்தோதெனிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி9 ஃபோலேட் ஆகியவை உள்ளன.

தாதுச் சத்துக்கள் :

100 கிராம் பாலாடைக்கட்டியில் 1045 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், சோடியம், செலினியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் நிறைந்திருப்பதால், வெண்ணெய் தாதுச் சத்துக்களின் சிறந்த மூலமாகும்.

மேலும் சோடியம், செலினியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஃவுளூரைடு ஆகிய சத்துக்களும் சிறிய அளவில் உள்ளன.

சீஸ் பயன்கள் :

பாலாடைக் கட்டி வெண்ணெயை விட அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது.

சீஸில் உள்ள வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

இதில் உள்ள துத்தநாகம் மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்பில் உதவுகிறது.

மேலும் இது சருமத்தைப் பாதுகாப்பதோடு முடி மற்றும் நகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஒப்பீட்டளவில் சீஸ் வெண்ணெயை விட குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருப்பதால், வெண்ணெயை விட சீஸ் மிகவும் ஆரோக்கிமான உணவாக உள்ளது.

பாலாடைக்கட்டி பயன்கள் :

வெண்ணெயும் ஆரோக்கியமான உணவு பட்டியலில் இடம் பெறுகிறது. இது உடனடி ஆற்றலைத் தருகிறது மற்றும் தைராய்டு மற்றும் அட்ரீனல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உதவுகிறது.

ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் வெண்ணெய் குடலில் உருவாகும் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.