தயிர் நன்மைகள், தீமைகள் மற்றும் தயிரில் உள்ள சத்துக்கள், பயன்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
தயிர் :
பால், பாக்டீரியா மூலம் நொதித்தல் செய்யப்பட்டு தயிர் தயாரிக்கப்படுகிறது. நொதித்தல் செயலில் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் பாலில் உள்ள லாக்டோசை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது.
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக தயிர் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகிறது.
தயிர் அல்லது தாஹி பற்றி தயிர் என்பது புளிக்கவைக்கப்பட்ட, ஆரோக்கியமான மற்றும் புரோபயாடிக் கொண்ட ஒரு பாலில் இருந்து பிரிக்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும்.
தயிர் வடை, தயிர் சாதம், தயிர் பச்சடி, சாஸ் இன்னும் பல இனிப்பு, காரம் மற்றும் சைவம், அசைவம் போன்ற பல உணவு வகைகளில் இதை முக்கிய பொருளாக பயன்படுத்தி அல்லது சேர்த்து பயன்படுத்தப் படுகிறது.
தயிர் நன்மைகள் :
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது :
தயிர் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது வயிறு உப்புசத்தை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது :
தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அல்லது கார்டிசோலின் வளர்ச்சியைத் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :
தயிரில் உள்ள மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தன்வந்திரி தியாகியின் கூற்றுப்படி, தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவது மூளைக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
மேலும், இது ஆற்றலை மேம்படுத்தி நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது :
தயிரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை சமாளிப்பதில் அல்லது குறைப்பதில் உதவுகிறது.
நுண்ணுயிர் சமநிலை :
தயிரில் ஆக்ஸிஜனேற்றிகளுடன் புரோபயாடிக் நுண்ணுயிரிகளும் இருப்பதன் காரணமாக உடலில் நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்துகிறது.
மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் சமநிலை செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
சரும ஆரோக்கியம் :
தயிர் உட்கொள்வது சரும வறட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப் படுகிறது.
தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது.
இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.
எலும்பு, பற்கள் ஆரோக்கியம் :
தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்துகிறது. எலும்புகளை வலிமையாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது :
தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும் இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :
தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கிரேக்க தயிர் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
தயிர் பயன்கள் :
தயிர் என்பது ஒரு பல்துறை உணவாகும். இதை உணவு பொருட்களிலும், பானங்களிலும், சிற்றுண்டிகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தயிரை சர்க்கரை அல்லது உப்புடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ உட்கொள்ளலாம்.
பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது.
தயிரில் தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களின் முக்கிய அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.
தயிர் பேஸ் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெயில் காலங்களில் உடல் உஷனத்தை குறைக்க குளிர் பாணங்களில் பயன்படுத்தப் படுகிறது.
பாலிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் தயிர் பாலை விட எளிதில் ஜீரணம் ஆகும்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கொண்டால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
தயிர் தீமைகள் :
தயிர் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பெரிதாக இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்வது மற்றும் குறிப்பிட்ட உடல் நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துக்கின்றன. தயிர் தீமைகள் சில பின்வருமாறு
தயிர் புளிப்பு உணவாக இருப்பதால் கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வலியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
செரிமான கோளாறு உடைவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அமிலத்தன்மை ஏற்படுத்தலாம்.
மேலும் இரவில் தயிர் சாப்பிடுவது அல்லது அதிக அளவு சாப்பிடுவது இருமல் மற்றும் சளி தொல்லைகளை ஏற்படுத்தலாம்.
அதிக அளவில் தயிர் சாப்பிடுவது சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.