யாரும் அறியாத வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்

0

வேப்பம் பூ மற்றும் வேப்பம் பூ பொடி தயாரிக்கும் முறை மற்றும் வேப்பம் பூ நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

வேப்பம் பூ :

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் தெரிந்திருந்தால் யாரும் உணவில் சேர்த்து கொள்ள தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.

வேப்பம் பூ

வேப்ப மரம் தாவரவியல் பெயர் அஸர்டிராச்டா இண்டிகா (Azadirachta indica) ஆகும்

இவை இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரமாகும். மேலும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது.

பழங்காலத்திலிருந்தே வேப்ப மரத்தில் குணப்படுத்தும் தன்மையை மக்கள் அறிந்து இருப்பதால், இதை “கிராமத்து மருந்தகம்” என்று அழைக்கின்றனர்.

வேம்பு அதன் மருத்துவ குணங்கள் காரணமாக 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிறம் கொண்ட வேப்பம் பூக்கள் அவற்றின் மொட்டுகளுடன் சாப்பிட உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பொதுவாக வேப்ப மரத்தின் பூக்கும் காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இருக்கும். வேப்ப மரத்தின் பூக்கள் இரவில் ஒரு இனிமையான, கிட்டத்தட்ட ஒரு வகை லேசான மல்லிகை பூ போன்ற வாசனையைக் கொண்டிருக்கும்.

தினமும் மதியம் ஒரு முறை, மாலையில் மீண்டும் ஒரு முறை என பூக்கும். பருவ மழையின் போது, ​​மரத்தின் அடியில் பூக்கள் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

வேப்பம் பூ நன்மைகள் :

காய்ந்த வேப்ப மரத்தின் பூவை பொதுவாக தென்னிந்தியாவில் ரசம், வேம்புப் பூ சாதம், பச்சடி, உலர்ந்த வேப்பம்பூ சூப், பருப்பு போன்ற பல்வேறு உணவு பொருட்களுடன் சேர்த்து சமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

உலர்ந்த வேப்பம்பூ பொடி கறிவேப்பிலை பொடிக்கு மிகவும் ஒத்து காணப்படும். வேப்ப மரத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக, இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

வேப்ப மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகள், பூ என அனைத்து பாகங்களும் நிரூபிக்கப்பட்ட ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல், ஆண்டிபிரைடிக், அழற்சி எதிர்ப்பு, அல்சர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

வேப்பம் பூ மருத்துவ குணங்கள் :

தொழுநோய், கண் கோளாறுகள், மூக்கில் இரத்தம் வருதல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை, தோல் புண்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களின் நோய்கள், காய்ச்சல், நீரிழிவு, ஈறு நோய் போன்ற உடல் நலக் கோளாறுகளுக்கு வேப்ப இலை மருந்தாகச் செயல்படுகிறது.

வேப்ப இலைகளைப் போல் வேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு உலர்ந்த வேப்பம் பூ மருந்தாக பயன்படுகிறது.

அரோமாதெரபி சிகிச்சையில் வேப்ப மரத்தின் பூவில் இருந்து தயாரிக்கப் படும் எண்ணெய் மற்றும் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலர்ந்த வேப்பம் பூக்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றன. மசாஜ் எண்ணெய்கள், கிரீம்கள் மற்றும் அஸ்ட்ரிஜென்ட்கள் உட்பட பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் இந்த பூவை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

வேப்பம் பூ பொடி சருமத்தின் எண்ணெய்ப் பசையை அதிகரிக்காமல் வரட்சியை நீக்கி ஈரப்பதமாக வைத்திருக உதவுகிறது.

வாயுத்தொல்லை, ஏப்பம் தொல்லை, பசியின்மை போன்ற கோளாறுகளுக்கு இந்த பூக்களை நன்றாக மென்று உண்டால் குணம் கிடைக்கும்.

இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இவை சாதம், ரசம், பருப்பு மசாலா கலவைகள், உகாதி பச்சடி போன்றவற்றை தயாரிக்கவும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

தேனுடன் வேப்பம்பூ சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் எடையில் மாற்றத்தை உருவாக்கும்.

வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோனைத் தடுக்க உதவுகிறது.

ஒரு கைப்பிடி வேப்பம்பூவை , நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்

இந்த பூவை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடிக்க காதில் சீல் வடிதல் குணமாகும்.

பூவை வாயில் போட்டு நன்றாக அரைத்து சாப்பிட்டால் தொண்டை புண் குமாமாகும்.

வேப்பம்பூ வில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், வாந்தி குணமாகும்.