சீரகத் தண்ணீர் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சீரகத் தண்ணீர் :
சீரகத் தண்ணீர் நன்மைகள் காரணமாக ஒரு அதிசய பானமாக கருதப்படுகிறது. ஏனெனில் இது வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது பல உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.
இது ஜீரா தண்ணீர் என்றும் அழைக்கப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஜீரா தண்ணீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், மலச்சிக்கலை போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கவும் உதவுகிறது.
சீரக தண்ணீர் செய்முறை :
1. முதலில் 1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அடுப்பிலிருந்து இறக்கி, அதில் 2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து அறை வெப்பநிலை என்று சொல்லக்கூடய சாதாரண வெப்ப நிலைக்கு குளிர வைத்து தினமும் குடித்து வர வேண்டும்.
2. ஒரு கையளவு சீரகத்தை முழு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் விதைகள் வீங்கி, உயிரியல் கலவைகளை தண்ணீரில் வெளியிடுகின்றன.
தினமும் காலையில் இந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால், 10-14 நாட்களில் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை காணலாம்.
சீரக தண்ணீர் நன்மைகள்:
எந்த நேரத்தில் சீரக தண்ணீர் ஜீரா நீர் குடிப்பது நல்லது என்று சொல்லப்பட்டாலும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்ததாக சொல்லப்படுகிறது
சீரக தண்ணீர் நன்மைகள் பின்வருமாறு
வயிற்று வலியை போக்குகிறது
சீரகத் தண்ணீரில், உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டி நன்றாக சுரக்க செய்து உணவை திறம்பட ஜீரணிக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
இது வாயு சம்பந்தமான வயிற்று வலிக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.
கல்லீரல் நலம்
ஜீரா நீரில் உள்ள தைமோகுவினோன் என்ற சக்திவாய்ந்த பொருள் கல்லீரலை வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கல்லீரல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. .
உடல் பருமன் குறைய
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் அத்தகையவர்கள் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம். அதற்கு சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். இது உடல் எடை குறைய உதவுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் பாரம்பரியா ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப் படுகிறது.
ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
மெட்ட பாலிசத்தை அதிகரிக்கிறது
சீரகத் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப் படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
பசியைக் குறைக்கும்
சீரகத் தண்ணீரில் இயற்கையாகவே பசியை அடக்கும் பண்பு உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை குறைக்கலாம்.
இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது
சீரகத் தண்ணீர் குடித்து வருவது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
எனவே சீரகத் தண்ணீர் குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
புத்துணர்ச்சியை வழங்கும்
அனைவருக்கும் தினமும் காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை புத்துணர்ச்சி அடைந்து நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.
தூக்கத்தை சீராக்குகிறது
ஆழ்ந்த தூக்கத்திற்கு ஒரு காரணமான மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்ய ஊக்கு விக்கிறது.
இதன் மூலம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வர ஜீரா தண்ணீர் உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியமாகும்.
இரத்த சர்க்கரையை குறைக்க
திடீரென தவறான உணவுகளிம் காரணமாக இரத்தச் சர்க்கரை அளவு உயரும் போது இன்சுலின் உற்பத்தி செய்யும் கணையத்தை சோர்வடையச் செய்கிறது.
ஜீரா தண்ணீர் உடலை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் தருகிறது மேலும் நீண்ட நேரத்திற்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
நீரிழப்பை தடுக்கிறது
ஜீரா ஒரு சிறந்த நீரேற்றியாகும். உடலின் அனைத்து செல்களையும் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஜீரா தண்ணீரில் சிறிது தேன், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
சீரகத் தண்ணீர் தீமைகள் :
சீரக தண்ணீர் பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பாதுகாப்பான பாணமாக இருந்தாலும் சில பக்க விளைவுகளும் உள்ளன.
அவை ஜீரா நீரிற்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் ஒரு ஆற்றல் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் குடிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஜீரா தண்ணீரைக் குடிப்பதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.
அதிகப்படியான ஜீரா நீர் தாய்ப்பாலின் உற்பத்தியை குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இது போன்ற சந்தேகம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இரத்த போக்கை அதிகப் படுத்த வாய்ப்பு உள்ளதால் மாத விடாய் காலங்களில் ஜீரா தண்ணீர் தவிர்ப்பது நல்லது.