காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் நிகழும் அற்புதங்கள்

0
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இவ்வுலகம் மூன்று பங்கு நீராலும் ஒரு பங்கு நிலைத்தாலும் ஆனது என்று நம் அனைவருக்கும் தெரியும். நீரின்றி எந்த உயிரினமும் வாழ முடியாது. ஒரு வேலை மூன்றாம் உலகப் போர் வந்தால் அது குடிக்கின்ற நீருக்காக தான் வரும் என்று சொல்லும் அளவுக்கு உலக மக்கள் அனைவரும் நீரின் மகத்துவம் பற்றி அறிந்துள்ளனர்.

வெறும் வயிற்றில் தண்ணீர்

அத்தகைய உயிர் வாழ மட்டுமின்றி ஆரோக்கியமாக நோய் நொடியின்றி வாழவும் பல வழிகளில் உதவி செய்கிறது. 

நீர் பல எண்ணிலடங்காத பயங்களையும், பல ஆரோக்கிய நலன்களையும் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றான அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய மற்றும் சுகாதார நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கப் பட்டுள்ளது.

குடல் சுத்தம் :

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது குடல் சுத்தமாவது ஆகும்.  

தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்க தூண்டும். அவ்வாறு தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முழுவதுமாக வெளியேறிவிடும்.

நச்சுக்கள் வெளியேற :

தண்ணீர் உடலின் இரத்த ஓட்டத்தில் கலந்து மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலானது நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க உதவி செய்யும்.  

பசி எடுக்க :

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி குடல் பாதை சீராகி விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். •

நீர்ச்சத்து :

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவின் காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, தலைவலி குறையும் மற்றும் அல்சர் பிரச்சனையும் சரியாகும்.  

வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்க :

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பலவற்றில் முக்கியமானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப் படுத்துவதாகும். உடலின் வளர்ச்சிதை மாற்றம் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதன் விளைவாக உண்ணும் உணவு விரைவாக செரிமானமடைந்துவிடும்.  

உடல் சோர்வு குறைய :

இரத்த சிவப்பணுக்களின் ஆரோக்கியம் அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதை உறுதி செய்யும். இதன் விளைவாக உடல் சோர்வில்லாமல் எனர்ஜியுடன் இருக்கும்.  

உடல் எடை குறைய :.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைவதில் உதவி செய்யும்.  

முகம் பிரகாசிக்க :

குடலானது சுத்தமாக இல்லை என்றால் முகத்தில் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். எனவே தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.