புரோக்கோலி நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

0

புரோக்கோலி :

புரோக்கோலி பார்ப்பதற்கு காலிபிளவர் போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் அது முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த காய்கறி வகையாகும்.

புரோக்கோலி

அதன் பெயர் இத்தாலிய வார்த்தையான “ப்ரோக்கோலோ” என்பதிலிருந்து வந்ததாகும். இதன் அறிவியல் பெயர் பிராசிகா ஓலரேசியா என்று அழைக்கப் படுகிறது.

இது தமிழில் பச்சை பூக்கோசு அல்லது பூக்கோசு என்றும் அழைக்கப்படுகிறது.

புரோக்கொலி தண்டு மொறுமொறுப்பாகவும், பூக்கள் மென்மையாகவும் இருக்கும். ப்ரோக்கோலி அடர் பச்சை முதல் ஊதா பச்சை வரையிலான பலவகை வண்ணங்களில் காணப் படுகின்றன. 

 

புரோக்கோலியில் உள்ள சத்துக்கள் :

ப்ரோக்கோலி சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்றாகும். அடர் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ரோக்கோலியில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மஞ்சள் நிற ப்ரோக்கோலியில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதாக சொல்லப் படுகிறது.

மேலும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் பைட்டோநியூட்ரியன்களைக் நிறைந்துள்ளன.

100 கிராம் ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்கள் :

கலோரி : 34 கிலோ  

மாவுச் சத்து : 6.64 கிராம்  

புரதச் சத்து : 2.82 கிராம்  

கொழுப்புச் சத்து : 0.37 கிராம்   

நார்ச்சத்து: 2.60 கிராம்  

புரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள்:  

வைட்டமின் சி : 89.2 மிகி  

வைட்டமின் கே : 0.17மிகி  

வைட்டமின் பி9 : 63 மை. கி   

வைட்டமின் பி3 : 0.639 மை. கி   

வைட்டமின் பி5: 0.573 மை. கி   

வைட்டமின் பி6 : 0.175 மை. கி   

வைட்டமின் பி2 : 0.117 மை. கி   

வைட்டமின் பி1 : 0.071 மை. கி   

வைட்டமின் ஏ : 623 IU  

வைட்டமின் ஈ : 101.6 மை. கி   

புரோக்கோலியில் உள்ள தாதுச் சத்துக்கள் :  

கால்சியம்: 47 மி.கி  

தாமிரம்: 0.049 மிகி  

இரும்பு: 0.73 மிகி  

மெக்னீசியம்: 21 மி.கி  

மாங்கனீஸ்: 0.210மி.கி  

செலினியம் : 2.5 எம்.சி.ஜி  

துத்தநாகம் : 0.41 மிகி  

பாஸ்பரஸ் : 66 மி.கி

 

புரோக்கோலி நன்மைகள் :

ப்ரோக்கோலியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ரிபோஃப்ளேவின், இரும்பு சத்து, கால்சியம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளன.

மேலும பூக்கோஸில் மிகக் குறைந்த அளவு கலோரிகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.

ப்ரோக்கோலி பயன்கள் உடலில் நடைபெறும் உயிரியல் மற்றும் வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளை ஊக்கு விக்கிறது.

எனவே, ஒட்டுமொத்த மனித உடலுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, புரோக்கோலி பயன்கள் மற்றும் நன்மைகளை பெற தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கித்திற்கு நன்மை பயக்கும்.

 

இதய பாதுகாப்பு :

பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் மரணத்திற்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் தமனிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் வாய்ப்பை குறைக்கிறது.

 

மூளை ஆரோக்கியம் :  

ப்ரோக்கோலியில் உள்ள சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை உயிரியல் கலவைகள் மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு திசு செயல்பாட்டிற்கு நன்மை பயக்கிறது.

மேலும் வயது மூப்பு தொடர்பான அறிவாற்றல் இழப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

 

எலும்பு ஆரோக்கியம் :

ப்ரோக்கோலியில் எலும்பு உருவாவதற்கும், எலும்பு அடர்த்தி இழப்பைத் தடுப்பதற்கும் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் பி வைட்டமின்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சத்துக்கள் ஒருங்கிணைந்து எலும்பின் நிறை மற்றும் வலிமையை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றன. 

 

நச்சு நீக்கி :

ப்ரோக்கோலியில் நச்சு நீக்கிகளாக அரியப்படும் கலவைகள் இயற்கையாகக் காணப் படுகின்றன.

அதாவது அவை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை செயலிழக்கச் செய்யவும், விரைவாக உடலில் இருந்து வெளியேற்றவும் உதவுகின்றன என்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. 

 

சிறந்த ஆக்சிஜனேற்றியாகும் :

ப்ரோக்கோலியில் உள்ள குறிப்பிட்ட ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் தோல் பாதிப்பை எதிர்ப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

வெஜின் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் விழித்திரை மற்றும் கண் லென்ஸைப் பாதுகாக்கின்றன.

மேலும் ப்ரோகோலி தினமும் உணவில் சேர்த்து கொள்வது பொதுவான கண் கோளாறுகளான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

 

சரும ஆரோக்கியம் :

புரோக்கோலியில் வைட்டமின் சி கனிசமான அளவு உள்ளது. வைட்டமின் சி சரும பாதிப்புகளை குறைக்கவும்,

சுருக்கங்களை குறைக்கவும் மற்றும் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மேலும் இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை ஆதரிக்க உதவும் கொளாஜன் உற்பத்தியில் உதவுகிறது. 

 

செரிமான ஆரோக்கியம் :

பொதுவாக் செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கு போதுமான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பது அவசியமாகும்.

தினமும் உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிப்பது அவசியம்.

ப்ரோக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மலச்சிக்கலைக் குறைத்து செரிமானப் பாதையை சீராக. இயக்க வைக்கும். 

 

புற்றுநோய் எதிர்பன்பு :

ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் சல்ஃபோராபேன் எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு கலவை உள்ளது.

இது நோயினால் ஏற்படும் செல் சேதத்தைக் குறைக்க உதவுகிறது.

 

புரோக்கோலி தீமைகள் :

பொதுவாக புரோக்கோலி தீமைகள் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுதுவதில்லை. இருப்பினும், இது அரிதாக சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  

ப்ரோக்கோலி அதிக அளவில் சாப்பிடப் படும்போது அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்துக்கள் குடல் செயல்பாட்டைத் குறைத்து வாய்வுக்கு வழி வகுக்கும்.

தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட் கொள்பவர்கள் ப்ரோக்கோழி சாப்பிடுவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

உதாரணமாக ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் கே இரத்தம் மெலிதாகும் மருந்தின் செயல்திறனைக் குறைக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கல்லீரல் பாதிப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் ப்ரோக்கோலியை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ப்ரோக்கோலியில் பல்வேறு சைட்டோக்ரோம்கள் இருப்பது இது காரணம்.