பொடுகு நீங்க எளிய பாட்டி வைத்திய முறைகள்

0

பொடுகு நீங்க :

வீட்டு சமையலரையில் உள்ள பொருட்களைக் கொண்டு பொடுகு தொல்லையிலிருந்து விடுபட எளிய வழிகள், மற்றும் பொடுகு நீங்க பாட்டி வைத்தியங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் பல உள்ளன. அவற்றில் சில வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

பொடுகு நீங்க எளிய வழிகள்

இஞ்சி :

இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தலையில் படும்படி காட்டன் பயன்படுத்தி தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு மூன்று முறை என இரண்டு வாரம் தொடர்ந்து பின்பற்றினால் பொடுகு முற்றிலும் போய்விடும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு :

பொடுகு நீங்க கற்றாழை ஜெல் உடன் பாதி எலுமிச்சையை பிழிந்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தலையில் படும்படி தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

முப்பது நிமிடம் கழித்து மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு விரைவில் நீங்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி அலசிய பின்னர் ஆப்பிள் சீடர் கலவையால் தலைமுடியை அலச வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச  வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் சீக்கிரம் பொடுகு போய்விடும்.

புதினா மற்றும் வேப்பிலை :

தலையில் செதில் செதிலாக பொடுகு இருந்தால் இருபதுவேப்பிலையுடன் பத்து புதினா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரில் போட்டு பாதியாக நீர் வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த அந்த இலைகளை அரைத்து தலையில் பின்படும்படி, மசாஜ் செய்ய வேண்டும். முப்பது நிமிடம் கழித்து, நீரில் அலச வேண்டும்.

பேக்கிங் சோடா  :

பொடுகு மருந்து தயார் செய்ய இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை, நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்பில் படும்படி, தடவ வேண்டும்.

மூன்று அல்லது ஐந்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இந்த சிகிச்சையை, வாரத்திற்கு ஒருமுறை மட்டும்தான் செய்ய வேண்டும்.

பூண்டு :

பொடுகு நீங்கி முடி வளர ஐந்து அல்லது ஆறு பூண்டுகளை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றினை, ஸ்கால்பில் படும்படி, தடவ வேண்டும்.

பதினைந்து அல்லது இருபது நிமிடம் கழித்து, மிருதுவான  ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி, தினமும் செய்து இருந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தயிர் :

பொடுகு நிரந்தர தீர்வு பெற மூன்று அல்லது நான்கு ஸ்பூன் புளித்த தயிரை ஸ்கால்பில் படும்படி மசாஜ்  செய்ய வேண்டும்.

முப்பது நிமிடம் வரை ஊற வைத்து பின்பு மிருதுவான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றினால் பொடுகு வேகமாய் போய்விடும்.