முள்சீத்தாப்பழம் :
முள்சீத்தாப்பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்த சீதாப் பழம் போல் தொற்றமளிக்கும்.
இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
முள்சீத்தாப்பழம் புரோஸ்டேட், மார்பகம், பெருங்குடல் மற்றும் கணையப் புற்றுநோய்களுக்கு எதிராக செயல் படுவதாக சில ஆய்வுகள் காட்டினாலும், மனிதர்களின் முள் சீதாப் பழத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் குறித்து போதுமான அளவுக்கு ஆதாரங்கள் இல்லை.
முள்சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள் :
-
- கலோரிகள் : 148
- கொழுப்பு : 0.7 கிராம்
- சோடியம் : 31.5மிகி
- கார்போஹைட்ரேட்டுகள் : 37.8 கிராம்
- ஃபைபர்: 7.4 கிராம்
- சர்க்கரைகள்: 30.5 கிராம்
- புரதம் : 2.3 கிராம்
- வைட்டமின் சி : 46.4 மிகி
- பொட்டாசியம் : 626 மிகி
முள்சீத்தாப்பழம் நன்மைகள் :
முள்சீத்தாப்பழம் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் பல வகைகளில் உதவுகிறது. முள்சீத்தாப்பழம் நன்மைகள் பின்வருமாறு.
வைட்டமின் சி நிறைந்துள்ளது :
முள் சீத்தாப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றியாக அறியப்படுகிறது.
மேலும் ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் செல் சேதத்தைக் குறைக்கிறது.
ஒரு முழு முள்சீத்தாப்பழம் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி அளவில் 215 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன :
முள்சீத்தாப் பழம் பைட்டோஸ்டெரால்கள், டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உட்பட பல ஆக்ஸிஜனேற்றிகளை கனிசமான அளவு கொண்டுள்ளது.
ஆன்டிஆக்சிடண்ட்கள் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம் :
ஒரு முள்சீத்தாப் பழம், தினசரி தேவையாக பரிந்துரைக்கப்பட்ட நார்ச் சத்து அளவில் 83 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இந்த நார்ச் சத்து ஜீரண மண்டலத்தை சீராக்கி மலச் சிக்கலைப் போக்குகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற தீவிர உடல் நலக் கோளாறுகளுக்கு வழி வழிவகுக்கும்.
உயர் இரத்த அழுத்தத்திற்கு சோடியம் உட்கொள்ளலும் ஒரு காரணி ஆகும். முள்சீத்தாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் சோடியத்தை அகற்ற உதவி இரத்த நாளங்களின் சுவர்களில் உள்ள பதற்றத்தைக் குறைக்கிறது.
இவை இரண்டும் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஒரு முழு முள்சீத்தாப் பழத்தில் தினசரி தேவையாக பரிந்துரைக்கப்பட்ட பொட்டாசியம் அளவில் மூன்றில் ஒரு பங்கு முதல் பாதி வரை உள்ளது.
இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது :
2008 ஆம் ஆண்டு கொறித்துண்ணிகளில் நடத்தப் பட்ட ஆய்வில் முள் சீத்தாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியில் முள் சீத்தாப்பழம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் கணிசமாகக் குறைப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் எலிகள் குறைவான உணவு மற்றும் தண்ணீரை உட்கொண்டாலும், அவை எடையைக் குறைக்கவில்லை.
இது முள் சீத்தாப்பழம் குளுக்கோஸை சிறப்பாக கட்டுப்படுத்துவதன் விளைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அல்சருக்கு நல்லது :
அல்சர் என்பது வயிற்றுப் புறணி, உணவுக்குழாய் அல்லது சிறுகுடலில் போன்ற வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் வலிமிகுந்த புண்கள் ஆகும்.
2014 ஆம் ஆண்டு கொறித்துண்ணிகள் மீது நடத்தப் பட்ட ஆய்வின்படி, முள்சீதாப் பழத்திற்கு அல்சர் எதிர்ப்பு திறன்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது வயிற்றின் சளிச்சுரப்பியைப் பாதுகாக்க உதவுகிறது மேலும் செரிமானப் பாதையில் ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
சுவாச ஆரோக்கியம் :
முள்சீத்தாப் பழம், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இது ஜலதோஷம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காற்றுப்பாதையின் நெரிசலைக் குறைக்கவும், எரிச்சலைத் தணிக்கவும் உதவுகிறது.
முள்சீத்தாப்பழம் தீமைகள் :
முள்சீத்தாப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதிக அளவில் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துக்கின்றன. முள்சீத்தாப்பழம் தீமைகள் பின்வறுமாறு
கர்ப்பிணிக்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் முள்சீத்தாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குறைந்த இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் முள் சீத்தாவை தவிர்ப்பது நல்லது.
ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் முள் சீத்தாப்பழம் உண்ணும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.