கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

கம்பு நன்மைகள், கம்பின் தீமைகள், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

கம்பு  :

கம்பு திணை தானிய வகைகளுல் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து பயி ரிடப்பட்ட மிகப் பழமையான பயிராகும்.

மேலும் இது உலகின் அதிக அளவில் பயிரிடப் படும் தானிய வகைகளில் ஆறாவது மிக முக்கியமான தானியமாகும்.

கம்பு  தானியங்கள் சிறியதாகவும் வட்ட வடிவிலும், மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.

இதன் வைக்கோல் பொதுவாக கால்நடை உணவாகவும், பயன்படுகிறது. வேகமாக வளரும் மற்றும் வறண்ட நீர் பாசனம் குறைந்த பகுதிகளிலும் வளர கூடியது.

கோதுமை, அரிசி,  சோளம் மற்றும் பார்லி போன்ற தானியங்கள் வளர ஏற்ற மண் இல்லாத பகுதிகளிலும் வளர கூடியது.

கம்பின் பிற பெயர்கள் :

இது தமிழ் மற்றும் மலையாளத்தில் கம்பு எனவும்,  இந்தி, பெங்காலி, பஞ்சாபி, உருது மற்றும் ஒரியா மொழிகளில் பஜ்ரா எனவும், தெலுங்கில் சஜ்ஜலு எனவும், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் பஜ்ரி எனவும் அழைக்கப் படுகிறது.

இது இந்தியாவில் மிகப் அதிக அளவில் பயிரிடப்படும் தானிய பயிர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் முக்கிய பயிராக பெரிய அளவில் கம்பு பயிரிட படுகிறது.

கம்பில் உள்ள சத்துக்கள்  :

100 கிராம் கம்பில் 300 கிலோ கலோரிகலும், இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவுகளுக்கு இணையான அளவு புரதச் சத்தும், அதிக அளவு நார்ச் சத்தும், மிக குறைந்த அளவு கொழுப்புச் சத்தும் உள்ளன.
கம்பு சத்துக்கள் அட்டவணை

இதில் அதிக அளவு வைட்டமின்-பி மற்றும் இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் குரோமியம் போன்ற தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளது.

Nutritional fact in foxtail millet

மற்ற தானிய வகைகளை விட இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவு இருப்பதாக அறியப்படுகிறது.

பார்லிக்கு அடுத்த படியாக அதிகப் படியான மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.

மேலும் குறிப்பிடத்தக்க அளவு குரோமியத்தைக் கொண்டிருக்கும் ஒரே தானியம் கம்பாகும்.

kambil ulla sathukka அனைத்து தானியங்களைக் காட்டிலும் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.

கம்பின் நன்மைகள்  :

சிறந்த தாவர அடிப்படையிலான புரத மூலம் :

கம்பில் 14 சதவீதம் புரதச் சத்து உள்ளது. இருப்பினும், இது ஒரு முழுமையான புரதமாக கருதப்படுவதில்லை.

ஏனெனில் அதில் லைசின் என்ற அமினோ அமிலம்  போதுமான அளவு இல்லை.

எனவே, பீன்ஸ், சீஸ், டோஃபு அல்லது முட்டை போன்ற லைசின் நிறைந்த உணவுகளுடன் கம்பு சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச் சத்தை பெறலாம்.

இரத்த சோகையை குணப்படுத்துகிறது :

கம்பு மிக அதிக அளவு  இரும்புச் சத்து கொண்டுள்ள உணவுகளில் ஒன்றாகும்.

இது பெண்களுக்கு அதிக அளவு இரும்புச்சத்தை வழங்குகிறது. இரும்புச்சத்து குறைபாடு பொதுவாக  சோர்வை ஏற்படுத்துகிறது. மற்றும் மன வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இது மகப்பேறு நேரத்தில்  தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கிறது.

கம்பு தினையை வழக்கமாக உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க செய்து இரத்தம் சோகை நோய் வராமல் தடுக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

இரும்புச்சத்து நிறைந்த கம்பில் ஏராளமான அளவு துத்தநாகமும் உள்ளது.

இது வளர்ச்சி மற்றும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியம் ஆகும்.

இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலு அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது :

கம்பில் மற்ற தானியங்களை போல் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

மேலும் பொதுவாக தானியங்கள் வயிற்றில் இருந்து சிறு குடல்களுக்கு வெளியே செல்ல அதிக நேரம் எடுக்கும்.

எனவே, கம்பினால் சமைத்த உணவு நீண்ட காலத்திற்கு பசியைக் குறைத்து, குறைவான கலோரிகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது, இதனால் எடை குறைய உதவுகிறது.

மலச் சிக்கலைப் போக்குகிறது :

கம்பில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஒரு சிறிய அளவு கம்பு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கிறது :

இது பித்த அமிலங்களின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்லுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் எதிர்த்து போராடுகின்றன.

கம்பு தினை ஆக்ஸிஜ னேற்றங்களின் வளமான ஆதாரமாக இருப்பதால், அவற்றின் நுகர்வு புற்றுநோய், மூட்டுவலி, இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற தீவிர நோய்களுக்கு எதிராக பெரும் பாதுகாப்பை வழங்குகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது :

கம்பில் பைடிக் அமிலம் எனப்படும் ஒரு வேதிப்பொருள் உள்ளது. இது கொலஸ்ட்ரால் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து உடலில் கொழுப்பின் அளவை குறைக்கிறது.

இதில் வைட்டமின் நியாசினும் உள்ளது இது கொழுப்பைக் குறைக்கிறது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது :

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கம்பு ஒரு சிறந்த உணவாகும்.

இது அதிக நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால், இது செரிமானத்தை மெதுவாக்குகி குளுக்கோஸை இரத்தத்தில் மெதுவான விகிதத்தில் வெளியிடுகிறது, இதன் மூலம் இரத்தம் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

பசையம் இல்லாத உணவாகும் :

அரிசி, சோளம் மற்றும் கோதுமை உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தானியமாகும். ஆனால் இதில் பசையம் உள்ளதால் வீக்கம், வாய்வு மற்றும் குடல் எரிச்சல் போன்ற இரைப்பை,  குடல் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் கம்பு பசையம் இல்லாத உணவாகும். பொதுவாக பசையம் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்று உணவாக கம்பு பயன்படுத்தப் படுகிறது.

மனதை அமைதிப் படுத்துகிறது :

கம்பு சிறிய அளவு அன்றாட உணவில் சேர்த்து வந்தால் அமைதியான உணர்வைத் தருகிறது மேலும் தூக்கமின்மையை எதிர்த்துப் போராடுகிறது.

குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும் :

ஆறு மாத வயதிலிருந்து குழந்தைகளுக்கு கம்பு ஒரு சிறந்த உணவாகும். இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

ஒரு வயது வரை, குழந்தைகளுக்கு பொடி செய்து  கஞ்சி செய்து கொடுக்கலாம் ஒரு வயதுக்குப் பிறகு குழந்தை திடமான உணவை உண்ணத் தொடங்கிய பிறகு தினை கொண்டு தயாரிக்கப்பட்ட திட உணவை கொடுக்கலாம்.

கம்பின் தீமைகள்  :

கம்பு சரியாக சமைக்கப் படாவிட்டால் அதில் உள்ள ஆக்சலேட்டு எனும் பொருள்  சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப் படுகிறது.

கம்பில் பைடிக் எனும் அமிலம் குடலில் உள்ள உணவை உறிஞ்சுவதில் தலையிடக்கூடும். என்றும் சொல்லப் படுகிறது.

எனவே, ஏதேனும் உடல் நலப் பிரச்சினைகள் இருந்தால், கம்பு உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசிப்பது சிறந்தது