முடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை பயறு

0

பச்சைப் பயறு பயன்படுத்தி நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெரும் முறை பற்றி விவரிக்கப் பட்டுள்ளது..

முடி ஆரோக்கியத்திற்கு பச்சை பயறு :

உங்கள் தலைமுடி போதுமான அளவு வேகமாக வளரவில்லை என்றால் அதாவது குறைந்தபட்சம் மாதத்திற்கு அரை அங்குலம் கூட வளர வில்லை என்றால் சில வழிமுறைகளை பின் பற்ற வேண்டும்.

வயது தொடர்பான சில முடி உதிர்தல் பிரச்சினைகள் பொதுவானது என்றாலும், முடிகளை உள்ளிருந்து ஊட்ட படுத்துவதன் முடி வளர்ச்சிக்கு உதவ முடியும்.

முடி வளர்வது என்பது மிக மெதுவான செயல் முறை ஆகும். ஆனால் முடி வளர்ச்சியை ஊக்குவித்து துரித படுத்த முடியும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை பயறு :

முடி அடர்த்தியாக வளர பச்சை பயறு ஒரு சிறந்த தீர்வாகும். மேலும் பச்சை பயறு ஒரு அற்புதமான சூப்பர் ஃபுட் ஆகும் இது நீங்கள் ஒரு சிறிய அளவு உட்கொள்ளும்போது கூட ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.

பச்சை பயறு

முடிகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ள உணவில் பச்சை பயறும் ஒன்றாகும்.  பச்சை பயரில் புரதம், பி வைட்டமின்கள், துத்தநாகம், இரும்பு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பல முடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

பி வைட்டமின்களில் ஒன்றான ஃபோலேட், பச்சை பயரில் அதிக அளவில் காணப்படுகிறது. இது முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது மற்றும் முடியின் பொலிவு மற்றும் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு பச்சைப் பயறு பயன்படுத்துவது  தலைமுடி மற்றும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, முடிகளுக்கு உள்ளிருந்து ஊட்டம் கொடுக்க வேண்டும்

உடல் மற்றும் முடி செல்கள் நல்ல ஊட்டச் சத்துக்களைச் சார்ந்துள்ளன.

முடி வளர்ச்சிக்கு முக்கியமான சத்துக்களான வைட்டமின் பி1 அல்லது தையமின் மற்றும் புரத சத்துக்கள் பச்சை பயரில் அதிக அளவு காணப்படுகின்றன.

பச்சை பயரில்  தாமிரம் உள்ளது. இது ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு மிகவும் அத்தியாவசியமான கனிமமாகும்.

முடி வளர்ச்சிக்காக பச்சை பயறு உட்கொள்வது உடலுக்கு தேவையான அளவு தாமிரத்தை வழங்குகிறது.

தலைமுடி உடைந்து, உதிர்ந்து பலவீனமான நிலையில் உள்ளவர்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்வதற்கு முன் ஆரோக்கியமாக அடர்த்தியாக வளர முடிக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முடி வளர்ச்சிக்கு பச்சை பயரை உணவாக உட்கொள்வதன் மூலமும் முடியில் தடவுவதன் மூலமும் ஊக்கு விக்க முடியும்.

நச்சுகளை நீக்குகிறது :

பொதுவாக நச்சுத்தன்மை ஒரு கடுமையான பிரச்சனை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை குறைப்பது, முடி வளர்ச்சியை தடுப்பது போன்ற நாள் பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பச்சை பயறு உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலை நச்சுகள் இல்லாமல் வைத்திருக்கலாம்.

பச்சை பயறு உடலின் உட்பற ஆரோக்கியத் தையும் பராமரிக்கிறது. உடலில் இருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்றி, ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதை கட்டுப் படுத்துகிறது.

முடி வளர்ச்சி ஹார்மோன் :

பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுவது பெற்றோருக்கு கவலை அளிக்கிறது. பச்சை பயறு மனிதர்களில் சரியான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் உறுதி செய்கிறது.

இது முடியை பொறுத்த மட்டில் முற்றிலும் உண்மை ஆகும். உடலில் உள்ள ஹார்மோன்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இயற்கையான பல கலவைகள் பச்சை பயரில் உள்ளன.

முடி வளர்ச்சிக்காக மருந்து மாத்திரைகளை முயற்சிப்பதற்கு முன் பச்சை பயறு உணவை முயற்சி செய்து பார்க்கலாம். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் அமிலத் தன்மை மயிர்க்கால்களை இறுக்க உதவி முடி உதிர்தலைக் கட்டுப் படுத்துகிறது.

முடி வரட்சியை தடுக்க :

பளபளப்பான முடியைப் பெறுவது கடினம் அல்ல. பொதுவாக காய்ந்த, பள பளப்பில்லாத முடியை யாரும் விரும்புவதில்லை.

பச்சை பயரில் தாமிர சத்து போதுமான அளவில் உள்ளது. இது இரும்பு சத்து அதன் வேலையை திறம்பட செய்வதை உறுதி செய்கிறது.

இரும்பு சத்து மூளைக்கு ஆக்ஸிஜனை சரியாக வழங்குவதன் மூலம் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முடியின் அடியில் உள்ள தோலில் இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்தி வரட்சியை நீக்கி பளபளப்பான, நீண்ட, ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை வளர செய்கிறது.

முடி வலிமை பெற  :

பச்சைப் பயரில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், முடி வலிமை மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மென்மையையும் பிரகாசத்தையும் உருவாக்குகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முடி, உச்சந்தலை மற்றும் வேர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

முடி ஊட்டம் பெற :

பச்சைப் பயறு உணவில் சேர்த்து கொள்வது முடியின் வலிமையை மேம்படுத்தி உடைவதைத் தடுக்கிறது. பச்சை பயறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் மயிர்க்கால்கள் மற்றும் உச்சந்தலைக்கு நன்கு ஊட்டமளிக்கிறது. முடி வளர்ச்சிக்கு பச்சை பயறு உபயோகிப்பதால் உதிர்வதை குறைக்கலாம்.

வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பச்சை பயரில் இருக்கும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் பாலிபினால்கள் போன்ற கலவைகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து மயிர்க்கால்கள் மற்றும் உச்சந்தலையைப் பாதுகாக்கின்றன.

மயிர்க்கால்கள் நன்கு ஊட்டமளிக்கும் போது அவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறுகிறது மற்றும் சேதம் மற்றும் உடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

முடி பாதுகாப்பு :

பச்சை பயறு ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் UV கதிர்வீச்சு வடிகட்டியாக செயல்படுவதன் மூலம் முடியைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

பச்சை பயறு கூந்தலின் கட்டுமானத் தொகுதிகளான கரோட்டினை பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

முடிக்கு இரத்த ஓட்டம் :

முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் காரணிகள் நிறைய உள்ளன. ஆனால் மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று சுழற்சி மற்றும் தூண்டுதல் ஆகும்.

மேம்பட்ட இரத்த ஓட்டம் உச்சந்தலையில் உள்ள சிறிய தமனிகளை நீர்த்துப்போகச் செய்து  நுண்ணறைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

பச்சை பயறு பயன்படுத்துவதன் மூலம் முடியின் அமைப்பை மேம்படுத்தவும், காலப்போக்கில் தடிமனாகவும் வலுவாகவும் மாற்ற முடியும்.

முடி வளர்ச்சிக்கு பச்சை பயறு பயன்படுத்துவது எப்படி?

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் பல உள்ளன. அவற்றில் பச்சை பயறு பயன்படுத்தும் முறையும் ஒன்றாகும். பச்சை பயரை இரவு முழுவதும் அல்லது முளை கட்டும் வரை நீரில் ஊற வைத்து சூப் செய்யலாம் அல்லது சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

உணவாக உட்கொள்வது அவற்றில் உள்ள சத்துக்களை பெற எளிய வழி ஆகும்.

மேலும் ஒரு ஹேர் மாஸ்காகவும் பயன்படுத்தலாம்.

பச்சை பயறு ஹேர் மாஸ்க் செய்முறை 1 :

  • பச்சை பயறை பொடி செய்து கொள்ளவும்.
  • கிரீன் டீ யின் சில துளிகள் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும்.
  • ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பிறகு சுமார் 2 அல்லது 3 தேக்கரண்டிகள் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பச்சை பயறு பேஸ்ட்டை முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலையை சுத்தம் செய்யவும்.

பச்சை பயறு ஹேர் மாஸ்க் செய்முறை 1 :

  • முடி வளர்ச்சியை அதிகரிக்க,  பச்சை பயரை வேக வைத்து அரைத்து  எடுத்து கொள்ள வேண்டும்.
  • அதில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
  • பிறகு இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியில் தடவ வேண்டும்.
  • 20 நிமிடம் கழித்து மிருதுவான ஷாம்பூ உபயோகித்து கழுவ வேண்டும்.