பிரண்டை கீரை :
பிரண்டையின் அறிவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் ஆகும். இது தமிழில் பிரண்டை என்றும் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும். இது இந்தியாவில் துவையல், சூப், ஜூஸ், மற்றும் சட்னி போன்ற பல பாரம்பரிய உணவுகளில் பயன் படுத்தப்படுகிறது.
பிரண்டை கீரை உடைந்த எலும்புகளை சரிசெய்வதோடு பல நோய்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியை கொண்டுள்ளது.
இது தாய்லாந்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருத்துவ வகை மூலிகைத் தாவரங்களில் ஒன்றாகும். மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருந்துக்காக பயன்படுத்தப் படுகின்றன.
பிரண்டை நன்மைகள் :
பிரண்டை எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும், எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்திய மருந்துகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாய்வு, பசியின்மை, மூல நோய், குடல் புழுக்கள், அஜீரணம், கீல்வாதம், எடை இழப்பு, வெண்புள்ளி, மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
எலும்புகள் ஆரோக்கியம் :
பிரண்டை எலும்பு செல் வளர்ச்சிக்கு தேவையான ஆஸ்டியோ பிளாஸ்ட்களின் உற்பத்திக்கு பங்களிப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
எலும்பு முறிவு மற்றும் மூட்டுகள் வீக்கத்தை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப் படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.
இதய ஆரோக்கியம் :
இவை வளர்சிதை மாற்றத்தில் துரிதப் படுத்துவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக பல இதய நோய்கள் ஏற்படும் அபாயாத்தை குறைக்கிறது.
உடலில் உள்ள எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் மற்றும் உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
மாதவிடாய் கோளாறுகள் :
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரிய கோளாறுகளை குறைக்க உதவுகிறது.
இது செரோடோனின் அளவை அதிகரிக்கவும், ஹார்மோன்களை சீராக்கவும் உதவுகிறது.
இது வீக்கம் மற்றும் வயிற்று வலியைப் போக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
பிரண்டையில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதன் மூலம் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது.
எடை இழப்பு :
செரிமானம் :
செரிமானம் என்பது உடலில் நடைபெறும் செயல் முறைகளில் முக்கியமான ஒன்றாகும்.
பிரண்டை கீரை உணவில் சேர்த்துக் கொள்வது வயிறு மற்றும் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் :
பிரண்டையில் உள்ள அதிக அளவு பீட்டா கரோட்டின் காரணமாக சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
தோல் மற்றும் உடல் செல்களை தாக்கி சேதப் படுத்தி வயதான செயல் முறையை துரிதப் படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஆஸ்டியோபோரோசிஸத் தடுக்கிறது :
பிரண்டை கீரையின் முக்கிய நன்மை எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது ஆகும்.
பொதுவாக பெண்கள் வயதாகும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுவதால் இது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லாதாகும்.
பற்கள் ஆரோக்கியம் :
பிரண்டை பல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக அளவு கால்சியம் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் பற்கள் உடைவது, அல்லது பற்களில் துவாரங்கள் ஏற்படுதல் போன்ற பதிப்பை குறைக்கிறது.
காயத்தை குணப் படுத்துதல் :
வைட்டமின் சி கொலாஜன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொளாஜன் தசை திசுக்கள் முதல் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் வரை அனைத்தையும் உருவாக்க அவசியமான பொருள் ஆகும்.
எனவே பிரண்டையில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி காயம் குணப்படுத்தும் செயல் முறையை விரைவுபடுத்தவும் மற்றும் காயம் மற்றும் நோயிலிருந்து விரைவாக மீளவும் உடலுக்கு சக்தியளிக்கிறது..
பிரண்டை தீமைகள் :
கர்ப்பமாக உள்ளவர்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பிரண்டை பாதுகாப்பானது என்பது குறித்து போதுமான நம்பகமான தகவல்கள் இல்லை. எனவே உணவில் சேர்த்து கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.
பிரண்டை இரத்த சர்க்கரையை குறைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நீரிழிவுக்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் பிரண்டையை உணவில் சேர்த்து கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.