குப்பை கீரை அல்லது குப்பைமேனி கீரை மூலிகை வகையை சார்ந்த தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் அக்காலீபா இன்டிகா (Acalypha Indica) ஆகும்.
கிராம புரங்களில், வயல் வெளிகளில், தோட்டங்களில் என களை போல் எங்கும் வளரும் பராமரிக்க அவசியமில்லாத தாவரம் என்பதால் இது குப்பை மேனி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதற்கு தமிழில் பூனை வணங்கி என்று மற்றுமொரு பெயரும் உண்டு.
குப்பை மேனியில் உள்ள சத்துக்கள் :
9-ட்ரைகோசீன், பைட்டால், MOME இனோசிட்டால், டைஹைட்ரோ ஆக்டினிடியோலைடு, லோலி யோலைடு, டோகோசனால், 1-ஐகோசனல், 1-ட்ரைகோன் டனோல், ஆக்டோகோசனால், ஆகியவை குப்பைமேனியில் காணப்படும் சில உயிர்வேதியியல் சேர்மங்கள் ஆகும். மேலும் இவை குப்பை மேனியின் அற்புதமான மருத்துவப் பயன்பாடுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
குப்பைமேனியில் ஆல்கலாய்டுகள், கேடகோல்ஸ், ஃபிளாவனாய்டுகள், பினாலிக் கலவைகள், சபோனின்கள் மற்றும் ஸ்டீராய்டுகளும் நிறைந்துள்ளது. இந்த சேர்மங்களில் பைட்டோல், டைஹைட்ரோஆக்டினிடியோலைடு மற்றும் லோலியோலைடு ஆகியவை அதிக அளவில் காணப்படும் முக்கிய சேர்மங்களாகும்.
குப்பை மேனி பயன்கள் :
குப்பை கீரை பயன்கள் அதிலுள்ள அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்களில் உள்ளன.
தேவையற்ற முடிகளை அகற்றுவது முதல் சளி, இருமல் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை யளிப்பது வரை என பல பயன்களை கொண்டுள்ளது.
குப்பைமேனி சாறு அல்சர் என்று சொல்லப்படும் குடல் புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
குப்பைமேனி சாறை உட்கொள்வது அல்சரேஷன், இரைப்பை சுரப்பு மற்றும் அமிலத்தன்மை கணிசமான அளவில் குறைகிறது.
குப்பைமேனி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீரென இரத்த சர்க்கரை அளவு உயர்வதை குறைக்கிறது.
குப்பை மேனிச்சாறு மலேரியாவை உண்டாக்கும் கொசுவான அனோபிலஸ் ஸ்டீபன்சிக்கு எதிராக செயல்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குப்பை மேனி கீரைச் சாறு கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.
குப்பைமேனி அற்புதமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. குப்பைமேனி சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
வெளிபூச்சாக வீக்கத்தைக் குறைக்க பயன் படுத்தப்படுகிறது.
பொதுவாகக் குப்பைமேனியை அரைத்து காயங்களின் மீது தடவுவதால், காயம் குணமடைவதோடு வீக்கத்தையும் மிக விரைவாகக் குறைக்கிறது.
குப்பைமேனி மேலும் வலியைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. குப்பை மேனியை அரைத்து காயங்களின் மீது பூசுவதன் மூலம் அது வீக்கம் மற்றும் வலி இரண்டையும் குறைக்க உதவுகிறது.
பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச்சாறு அல்லது சாற்றின் மூலம் தயாரிக்கப் படும் கஷாயம் குடல் புழுக்களை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவப் பயன்பாடு ஆராய்ச்சியின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குப்பைமேனியில் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
முகப்பரு, தோல் அரிப்பு, தோலழற்சி போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை யளிப்பதற்க்கு பயன் படுத்தப்படுகிறது.
குப்பைமேனியின் விஷத்திற்கு எதிரான மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளன. இலைச் சாறு ரூசெல் வைபர் விஷத்தை மிகவும் திறம்பட தடுக்கிறது.
பொதுவாக இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் இலைச்சாறு ரசல் வைப்பர் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுக்கப் படுகிறது.
குப்பை மேனி தீமைகள் :
குளுக்கோஸ்-6- பாஸ்பேட் டீஹைட்ரோஜினேஸ் குறைபாடு உள்ளவர்கள் குப்பைமேனியை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது ஹீமோலிசிஸுக்கு வழிவகுக்கும்.