சப்போட்டா பழம் நன்மைகள் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் சப்போட்டா பழம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
சப்போட்டா பழம்
சப்போட்டா பழம் பொதுவாக சப்போட்டா, சிக்கோ, நெஸ்பெர்ரி அல்லது நிஸ்பெரோ என்று மேலை நாடுகளில் அழைக்கப்படுகிறது,
சப்போட்டா பழத்தின் பிற பெயர்கள் :
சப்போட்டா பழத்தின் அறிவியல் பெயர் மணிக்காரா சப்போட்டா (manikkara zappota) ஆகும்.
இது ஆங்கிலத்தில் சப்போட்டா, சப்போட்டில்லா என்றும் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சிக்கு என்றும் தெலுங்கில் சப்போட்டா பண்டு என்றும் அழைக்கப் படுகிறது.
சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் சப்போட்டா பழத்தில் 1.1 கிராம் கொழுப்பு, 0.4 கிராம் புரதம், 5.3 கிராம் நார் சத்து மற்றும் 20 கிராம் மாவு சத்து உள்ளது.
மேலும் 100 கிராம் சப்போட்டா பழத்தில் 3 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ மற்றும் 14.7 மி.கி வைட்டமின் சி உள்ளது.
சப்போட்டா பழம் நன்மைகள் :
இரத்த அழுத்தம் :
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சப்போட்டா பழம் பயன்படுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம், சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
ஆற்றல் மூலமாகும் :
சப்போட்டா பழத்தில் பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளதால் உடனடி ஆற்றலை வழங்குகிறது.
மேலும், வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்ய இது சரியான தேர்வாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கl அடங்கியுள்ளன.
அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடல் செல்களை சேதப் படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்து கின்றன.
மேலும் நாள்பட்ட நோய்களின் தீவிரத்தைக் குறைக்கின்றன. மேலும் இது உடலை வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி பாதிப்பி லிருந்து பாதுகாக்கிறது.
சரும ஆரோக்கியம் :
சரும ஆரோக்கியம் மற்றும் அழகை அதிகரிக்க சப்போட்டா ஒரு சிறந்த பழம்.
சப்போட்டாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே வைட்டமின்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும செல்களை புத்துயிர் பெற செய்கின்றன.
மேலும் இதில் உள்ள பாலி பினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் சுருக்கங்களை போக்கி நிறத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய் எதிர் பண்பு :
ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்ட சப்போட்டா பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
வைட்டமின்கள் ஏ மற்றும் வைட்டமின் பி சளிச்சுரப்பியை ஆரோக்கியமாக பராமரித்து நுரையீரல் மற்றும் வாய்வழி புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
குடல் ஆரோக்கியம் :
சப்போட்டாவில் உள்ள டானின்கள் பாலிபினால்கள் குடலில் அமிலச் சுரப்பை நடுநிலையாக்குகிறது.
அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குடல் எரிச்சலை தனிக்கின்றன.
இரைப்பை அழற்சி மற்றும் பிற குடல் தொடர்பான கோளாறுகளை சரி செய்கிறது.
மேலும் இதில் உள்ள நார்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.
எலும்புகள் ஆரோக்கியம் :
சப்போட்டா பழத்தில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற தாது சத்துக்கள் எலும்பை வலுப்படுத்த உதவுகின்றன.
தினமும் சப்போட்டா பழம் சாப்பிடுவது எலும்பின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் தாமிர சத்தின் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது..
மன அழுத்தம் :
மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதை பெரிதும் கட்டுப்படுத்தலாம்.
சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் சி ஆகும்.
இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு சக்தி அளித்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
மேலும், இயற்கையான மயக்க மருந்தாக இருப்பதால் இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மனநிலையை மேம்படுத்துகிறது.
எடை குறைப்பு :
சப்போட்டா பழம் சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் சப்போட்டாவில் உள்ள நார்ச்சத்து பசியைக் குறைக்க உதவுகின்றன.
இது இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதைக் குறைக்கிறது, இதனால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் குறைந்த அளவில் உடலில் சேமிக்க படுகிறது.
இதன் மூலம் உடல் உடல் எடையை குறைவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
இரத்த சோகை :
உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்லும் இரத்த சிவப்பணுக்களை உடலால் உற்பத்தி செய்வ இயலாத நிலை இரத்த சோகை அல்லது அனேமியா எனப்படுகிறது.
இரும்பு சத்து மற்றும் தாமிரம் நிறைந்த சப்போட்டா பழம் இரும்பு சத்தின் அளவை மேம்படுத்தி இரத்த சோகையை சரி செய்கிறது.
கண் ஆரோக்கியம் :
சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ கண்ணின் வெளிப்புற அமைப்பு மற்றும் கார்னியாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்தி கண் ஆரோக்கியாத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இது ரோடோப்சினின் எனும் கண்களில் இருக்கும் ஒரு வகையான புரதத்தைக் கொண்டுள்ளது.
இது மங்கலான வெளிச்சத்தில் பார்க்க உதவுகிறது மற்றும் கண்பார்வை மேம்படுத்துகிறது.
மூளை ஆரோக்கியம் :
மூளை திறம்பட செயல் பட ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இரும்பு சத்து மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது.
இதன் மூலம் மூளையை திறம்பட செயல் பட தூண்டி நினைவாற்றலை அதிக படுத்துகிறது மற்றும் மூளை சோர்வை நீக்குகிறது.
மேலும் இதில் உள்ள தாமிர சத்து கேலக்டோஸ் மற்றும் டோப்பமைனை தூண்டுகிறது.
டோப்பமைன் மற்றும் கேலக்டோஸ் என்பது ஆற்றல், கண்ணோட்டம் மற்றும் கவனம் ஆகியவற்றை பராமரிக்க உதவும் நரம்பியக்கடத்திகளாகும்.
காயத்தை ஆற்றுகிறது
சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் பி5 வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது என்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் போது தோலில் ஏற்படும் எதிர் வினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது என்று ஆய்வுகள் தெரிய வந்துள்ளன.
கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற முதுமை தொடர்பான செயல்முறையை குறைக்கிறது.
சமீபத்திய ஆய்வுகளின் படி வைட்டமின் பி5 உயிரணுக்களின் பெருக்கத்தை தூண்டுவதன் மூலம் குணப்படுத்தும் செயல் முறையை துரிதப் படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது :
மூளையின் செயல்பாடுகளான செல்லுலார் செயல்பாடு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் மின் சமிக்ஞைகளுக்கு பொட்டாசியம் சத்து அவசியமாகும்.
பொட்டாசியம் குறைபாடு சோர்வு, ஞாபகம் மற்றும் கற்றலில் சிக்கல் மற்றும் மனநிலை மாற்றம் போன்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.
சப்போட்டா பழம் தீமைகள் :
சப்போட்டா பழத்தில் அதிக அளவு லேடெக்ஸ் மற்றும் டானின்கள் உள்ளன. அவை மிகவும் கசப்பு தன்மை உடையாதாக இருக்கும்.
எனவே நன்றாக பழுக்காத பழங்களை சாப்பிடுவதால் வாய் புண்கள், தொண்டையில் அரிப்பு உணர்வு மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.